தேர்தல் காலங்களில் வாக்குப் பதிவு நாளன்று ஊடகங்கள் கவனம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை கடந்து சினிமா பிரபலங்களை மையம் கொண்டு இருக்கும் இன்றைய வாக்குப் பதிவிலும் அரசியல் தலைவர்களை கடந்து சினிமா நட்சத்திரங்கள் வாக்களிப்பது ஊடகங்களில் பிரதானமாக நீண்ட நேரமாக ஆக்கிரமித்து கொண்டது
வாக்குசாவடியில் வாக்குபதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே மனைவி ஷாலினியுடன்வந்திருந்து வாக்களித்து சென்றார் நடிகர் அஜீத்குமார் ஆயிரம் விளக்கு தொகுதியில் 7 மணிக்கு பின்னர் வந்து வாக்கை பதிவு செய்தார் ரஜினிகாந்த் தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு செல்லவேண்டும் என்பதால் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிக்கருமான கமலஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் 8 மணிக்குள் தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்
அடுத்த கவனம் நடிகர் விஜய்யை நோக்கி திரும்பிய போது எந்த ஒரு நிகழ்வுக்கும் பரபரப்பை ஏற்படுத்தாமல் வந்து செல்லும் நடிகர் விஜய் வீட்டிலிருந்து கறுப்பு – சிவப்புகலர் சைக்கிளில் ரசிகர்கள் பின்தொடர மினி ஊர்வலமாக வாக்குசாவடிக்கு வந்து வாக்கை பதிவு செய்து ஒட்டுமொத்த தமிழகத்தை மட்டுமல்ல அரசியல் களத்தையும் அதிரவைத்து கவனம் ஈர்த்துள்ளார்
மத்திய- மாநில ஆட்சியாளர்களால் தொழில்ரீதியாக கடும் நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானவர் நடிகர் விஜய் இவர் நடித்து வெளியான தலைவா(2013)கத்தி(2014) புலி(2015), தெறி(2016) பைரவா(2017)மெர்சல்,(2017) சர்க்கார்(2018) பிகில்(2019) மாஸ்டர்(2021)தொடங்கி கடைசியாக வெளியான மாஸ்டர் படங்கள் வெளியான காலங்களில் வருமானவரித்துறை சோதனை, மாநில அரசாங்கத்தால் மறைமுக நெருக்கடி என பிரச்சினைகளை அதிகம் சந்தித்த ஒரே தமிழ் நடிகர் விஜய் மட்டுமே
நெய்வேலியில்மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த நடிகர் விஜய் வலுக்கட்டாயமாக சென்னை அழைத்து வரப்பட்டு அவர் வசித்து வந்த நீலாங்கரை வீட்டில் பல மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது அதேவேளையில் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி கட்சி தொடங்கினால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு நடிகர் விஜய் உடன்படவில்லை என அப்போது கூறப்பட்டது
திமுக தலைமையோடு விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே அவருக்கு எதிராக பேட்டி, அறிக்கைகளை கொடுத்திருந்தார் விஜய் மௌனமாகவே இருந்து வந்தார் இவற்றையெல்லாம் நினைவு கூறும் விஜய் தரப்பு நேரடியாக திமுகவுக்கு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட முடியாது ஏதாவது ஒருவகையில்
தனது ரசிகர்களுக்கு யாரை நான் ஆதரிக்கிறேன் என்பதை குறிப்பால் உணர்த்தவும் – அது ஊடகங்கள் மூலம் ஒரே நேரத்தில் தமிழக மக்கள் மத்தியில் சென்றடைய கறுப்பு – சிவப்பு சைக்கிளில் வாக்குசாவடிக்கு சென்றது என்கின்றனர் படம் பார்த்து கதைசொல்லி பழகிய தமிழ் மக்களுக்கு சைக்கிள் மூலம் கதை சொன்னாரா? சமிக்கை செய்தாரா என்பதே சினிமா – அரசியல் வட்டார விவாத பொருளாக மாறி இருக்கிறது.