பாஜகவை வரலாறு மறக்கவும்,மன்னிக்கவும் செய்யாது – நடிகர் சித்தார்த்

வரலாறு உங்களை மறக்கவும் செய்யாது மன்னிக்கவும் செய்யாது என்று திரைப்பட நடிகர் சித்தார்த் மத்திய பாஜக அரசை விமர்சித்துட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
கொரானா நோய்தொற்று இரண்டாவது அலை பரவி வரும் சூழலில், நோய்தொற்று பரவுவதை தடுக்க தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த அவர் நெருக்கடியை சமாளிக்க ஐந்து விதமான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்
மன்மோகன்சிங் கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுதியிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அந்த கடிதத்தைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைத்து இது போன்ற கடினமான காலத்தில் உங்களுடைய கட்சிக்காரர்களுக்கு பொன்னான அறிவுரை வழங்கி ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நீங்கள் அளித்தால் வரலாறு உங்களிடம் கருணையுடன் இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்
திரைப்படநடிகர்சித்தார்த்
அமைச்சர்ஹர்ஷவர்தனுடைய பதிலை கடுமையாக விமர்சித்துள்ளார் அவரது ட்விட்டர் பக்கத்தில்” நீங்கள் கொரானாவுக்கு எதிராக போராடுபவர் அல்ல கொரானா நோய்தொற்றினுடைய கூட்டாளி” என்று பதிவிட்டுள்ளார் மேலும் எந்த சூழலிலும் தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக மக்களை கொலை செய்துகொண்டிருப்பதை தொடருங்கள் சிறிதும் அறிவு இல்லாமல், மத நிகழ்வு எனும் பெயரில் இன்னும் அதிகமான மக்களை வரவழைத்துக் கொலை செய்யுங்கள், “வரலாறு உங்களை மறக்கவும் செய்யாது, மன்னிக்கவும் செய்யாது” என்று சித்தார்த் ட்விட் செய்துள்ளார்

Related posts

Leave a Comment