விஷால், சிம்புவை நிராகரித்த கார்ப்பரேட் நிறுவனம்

தமிழில் திரைப்படங்கள் எடுக்க ஒரு பன்னாட்டு நிறுவனம் முன்வந்தது. அந்நிறுவனம் நேரடியாகத் தயாரிப்பில் இறங்காமல் ஏற்கெனெவே படத்தயாரிப்பில் இருக்கும் பெரிய நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிப்பதென முடிவு செய்ததாம்.

பன்னாட்டு நிறுவனம் பணம் போடும். தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரித்துக் கொடுக்கவேண்டும் என்பது ஒப்பந்தம்.இவர்கள் முதலில் விஷாலை கதாநாயகனாக வைத்துப் படமெடுக்கலாம் என்று அவரை அணுகினார்களாம். தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க்கொண்டிருந்ததாம். பெரிய சம்பளம் பேசி முன் தொகை கொடுக்கும் நேரத்தில் விஷாலின் சக்ரா படம் வெளீயீடு வேலைகள் வந்தன.

படம் வெளியான பின்பு இந்தப்படத்துக்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று விஷால் சக்ரா பட வேலைகளில் இறங்கினாராம். படம் வெளியாகி சரியாகப் போகவில்லை என்றதும் பன்னாட்டு நிறுவனம் பின்வாங்கிவிட்டதாம்.விஷால் வேண்டாம் வேறு நாயகர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

இங்குள்ள தயாரிப்பு நிறுவனம் சிம்புவைப் பரிந்துரை செய்திருக்கிறது. உடனே அவரைப் பற்றிய விசாரணைகளில் இறங்கிய பன்னாட்டு நிறுவனம், கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் நன்றாகப் போகவில்லை அதனால் அவரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாம்.விஷால், சிம்பு போன்றோர் வெகுமக்களிடம் வரவேற்புப் பெற்ற நடிகர்கள். அவர்களுடைய முந்தைய படத்தை வைத்துக் கணிக்கவேண்டியதில்லை, இந்தப்படத்தின் கதை மற்றும் இயக்குநர் ஆகியனவற்றைப் பொறுத்து அவர்களுக்கு வியாபாரமும் இருக்கும் மக்களிடம் வரவேற்பும் இருக்கும் என்று சொல்லியும் பன்னாட்டு நிறுவனம் காதில் போட்டுக்கொள்ளவில்லையாம்.
இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனமுடைந்து போயிருக்கிறார்கள்

Related posts

Leave a Comment