தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடுவரலாறுகாணாதவளர்ச்சி அடையஇந்தியாவின்ஒருமைப்பாட்டிற் கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்
தேர்தல் அது சார்ந்த வெற்றிதோல்வி சம்பந்தமாக இதுவரைரஹ்மான் வாழ்த்து செய்திகள் தெரிவித்தது இல்லை முதல்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் சார்ந்து வாழ்த்து செய்தியை வெளியிட்டிருப்பது திரையுலகில் மட்டுமல்லாது அகில இந்திய அரசியல் வட்டாரத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனக்கு என்று தனித்துவமான அரசியல் நிலை இருந்தாலும் பொதுவெளியில் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதில் நடிகர் ரஜினிகாந்த் எல்லா அரசியல் கட்சியினருக்கும் பொதுவானவராக வெளிக்காட்டிக்கொள்ள தவறியதில்லை.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று அறைகூவல் விடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த் அதன் காரணமாக தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் ஆயத்தமானார் ஒரு கட்டத்தில் உடல் நிலையை காரணம் காட்சி அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளிவர தொடங்கிய பின் பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில்திமுக ஆட்சியை கைப்பற்றுகிறது என செய்திகள் வரத்தொடங்கியது இதன் காரணமாக நேற்று மாலை மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில்
நடைபெற்ற தமிழகசட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் அனைத்து தரப்பு மக்களும் திருப்தியடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும்,புகழும்அடைந்திட மனமார வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.