கமலஹாசனை இறுதி சுற்றில் வீழ்த்திய பாஜக வானதி சீனிவாசன்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எல்லா கட்சியினராலும் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகோவை தெற்கு தொகுதிநடிகர் கமலஹாசன் சென்னை அல்லது அவரது பூர்வீக பூமியான சிவகங்கை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபோது தமிழக அரசியல் களம் ஆச்சர்யத்துடன் பார்த்தது

பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் இங்கு போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோவை தெற்குதொகுதிகமல்வருகையால்கூடுதல் அந்தஸ்து பெற்றது
 நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே குறைவான வாக்குகள் என்றாலும் கமல் முன்ணனியில் இருந்தார் ஆனால் கடைசி இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது கமலஹாசன் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம்  கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.
மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அந்த தொகுதியில் மொத்தம் பதிவான 1,54,765 வாக்குகள், 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன.இதன் முடிவில் 53,209 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முதலிடம் பிடித்தார். 51,481 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இரண்டாம் இடத்தில் இருந்தார். 42,383 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடத்தில் இருந்தார்முன்னதாக, இந்த தொகுதியில் காலையில் இருந்து பிற்பகல் வரை வாக்குகள் எண்ணப்பட்டபோது, வானதி, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் ஆகியோரை விட ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் என்ற அளவில் கமல்ஹாசன் முன்னிலை வகித்தார். இதனால் புன்னகையுடனேயே அவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் காணப்பட்டார்.ஆனால், மாலை 5 மணிக்கு பிறகு 22ஆவது சுற்று எண்ணத்தொடங்கியபோது, கமலையும், மயூரா ஜெயகுமாரையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு வானதி சீனிவாசன் முன்னேறினார். 25, 26 என கடைசி சுற்று நெருங்கியபோது இரண்டாமிடத்தில் இருந்த கமலை விட அதிக வாக்குகளை வானதி பெற்றதைத் தொடர்ந்து அவரது வெற்றி உறுதியானது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை முதல் முறையாக பார்க்கும் கமல், ஒரு வேட்பாளராக அந்த அரங்கின் முகவர், வேட்பாளர்கள் அமர ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தவாறு வாக்குகள் அறிவிக்கப்படும் தகவலை  குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். கடைசி இரு சுற்றுகளின்போது எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாதவராக காணப்பட்ட கமல், தமது கடைசி சுற்று தகவலையும் குறிப்பெடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 2018ஆம் ஆண்டில் தொடங்கினார் கமல்ஹாசன்.

2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில்களம் கண்டது. அதில் எந்த தொகுதியிலும் வெற்ற பெற முடியாதபோதும், 3.72 வாக்குகள் சதவீதத்தை அந்த கட்சி பெற்றது. மக்களவை தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கிய கமலஹாசன்அப்போது
அவர்போட்டியிடவில்லைஒருவேட்பாளர் கூட வெற்றி பெறாதபோதும் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, 142 இடங்களில் போட்டியிட்டது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் கமல ஹாசன் நேரடியாக சென்று பிரசாரம் செய்தார். ஆனால், தேர்தல் முடிவுகள், அவருக்கோ அவர் சார்ந்த கட்சிக்கோ வெற்றி வாய்ப்பை தரவில்லைமுன்னதாக, வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன், முடிவுகள் எப்படி வந்தாலும் தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம் என்று கூறியிருந்தார்.

Related posts

Leave a Comment