வலிமை இந்திய அளவில் இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றம்

தமிழ் சினிமாவில் வசூல் வியாபாரம் இந்த இரண்டிலும் முதல் இடத்தில் நடிகர் விஜய் உள்ளார் நடிகர் அஜீத்குமார் ரசிகர்மன்றத்தை அமைப்புரீதியாக கலைத்துவிட்டார் இருந்தபோதிலும் அவருக்கான ரசிகர் கூட்டம், ஆதரவு நிலைகுலையாமல் தொடர்கிறது

அஜீத்குமார் புதிய படங்களில் நடிக்கும்போது அதனை சமூக வலைதளங்களில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரம் செய்யும் பணிகளை இன்றுவரை தொடர்கின்றனர்
 அஜித் குமார்தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத், அஜித்குமார் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். அஜித்குமார் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1-ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் மக்கள் அல்லல்படும் இந்த நேரத்தில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று படக்குழுவினர் முதல் பார்வை வெளியீட்டுதேதியை ஒத்திவைத்தனர். இதனால் வலிமை படத்தின் அப்டேட் வெளியிடுமாறு அஜித்குமார் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பார்வை சூலை முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது படம் குறித்த எந்தவொரு தகவல்களும் அதிகாரபூர்வமாகவெளியாகாத நிலையிலும் வலிமை வேறு வகைகளில் ரசிகர்கள் மூலம்சாதனை படைக்கத் துவங்கியுள்ளது. வெளியாகவிருக்கும் படங்களுக்கு புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் ஆர்வம் தெரிவிக்கலாம். அப்படி வலிமை படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். பாகுபலி சாதனையை வலிமை முறியடித்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் வலிமை இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் 17 லட்சம் எண்ணிக்கையுடன் அவென்ஜர்ஸ் எண்டு கேம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

Related posts

Leave a Comment