எஸ். ஆர்.எம் கல்லூரியில் “தில்லி 6” என்ற தலைப்பில் உணவு திருவிழா இன்று முதல் துவங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் உணவகத்தில் உணவு திருவிழா இன்று முதல் துவங்கியது. இதில் எஸ்.ஆர்.எம் ஓட்டல் மேலான்மை நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனம் இணைந்து தில்லி 6 என்ற தலைப்பில் உணவு திருவிழாவை ஏற்பாடு செய்தது.

அந்த வகையில் உணவகத்தில் இந்த உணவு திருவிழா இம்மாதம் (இன்று) நவ. 23ம் தேதி முதல் துவங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உணவு திருவிழாவை தில்லியில் உள்ள பிரபல நட்சத்திர உணவகங்களில் பணியாற்றிய பிரபல சமையல் கலை நிபுணர் மாஸ்டர் செஃப் திலீப் ஜோஹ்ரி மற்றும் ரமேஷ் ஆகியோர் வருகை தந்து தில்லி உணவுகளை சமைத்து தருகிறனர்.

சைவ, அசைவ உணவு பிரியர்களை கவரும் விதமாக சிக்கன் தந்தூரி, மட்டன் தம்பிரியாணி, வருத்த மின், காய்கறிகள் கலவை சாதம், டால் பன்னீர், சூப்பு வகைகள், மற்றும் 8வகையான பழங்களின் கலவைகள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த விழா குறித்து பிரபல சமையல் கலை நிபுணர் மாஸ்டர் செஃப் திலீப் ஜோஹரி கூறுகையில்: நான் சமையல் கலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய வருகிறேன். டில்லியில் உள்ள பிரபல தனியார் உணவகங்களில் பணியாற்றி உள்ளேன். உணவு பிரியர்களின் வசதிக்கேற்ப சைவ, அசைவ உணவுகளில் சுவைகளை கையாளும் பக்குவம் தனக்கு உள்ளதாக தெரிவித்தார்.

வெளிநாட்டு தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள் வரை பலரும் செஃப் திலீப் ஜோஹ்ரி மற்றும் அவரது சமையல் கலையின் சிறப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் உணவகத்தின் பொது மேலாளர் பால் அதிசயராஜ் சாமுவேல் உடன் கலந்து கொண்டார்.

Related posts

Leave a Comment