ஒரு விளையாட்டுத் தொடர்பான திரைப்படத்தில் என்னெல்லாம் இருக்க வேண்டும். ஒரு தோல்வி, அந்த தோல்வியால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடும் தேடல், விளையாட்டிற்குள் அரசியல், பாகுபாடு, வீரர்களுக்குள் முரண்பாடு, சிறிய சறுக்கல், ஒரு பெரிய போட்டி, அந்தப் போட்டியில் வெற்றி, இவைகளுக்கு நடுவே தேவைப்பட்டால் சிற்சில காமெடிகள், காதல் காட்சிகள் இவைகளெல்லாம் இருக்கும் தானே. “வெண்ணிலா கபடிக் குழு” துவங்கி ‘பிகில்’ வரை விளையாட்டு தொடர்பான எல்லாப் படங்களும் இந்த டெம்ப்ளெட்டில் தான் அமைக்கப்படும். அதில் இருந்து சற்றும் சறுக்காமல் அமைக்கப்பட்டு இருக்கிறது “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் திரைக்கதை. எக்ஸ்டிரா-வாக வர்க்கம் அரசியலுடன் சற்று சாதிய அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது திரைக்கதை. அரக்கோணத்தில் நடக்கும் கதை. அவ்வூரின் காலனிப் பையன்களுக்கும், ஊர்க்காரப் பையன்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் நெடுநாளைய பகை இருக்கிறது. ஒரு சின்ன சீண்டலில் தங்களுக்குள்…
Read MoreTag: கீர்த்தி பாண்டியன்
கண்ணகி விமர்சனம்
தன் கணவனால் பல்வேறு அவலங்களுக்கு ஆனாலும் கூட கணவனுக்காக கடைசி வரை நின்றவள் அந்தக் கால கண்ணகி. இந்த காலத்தில் திருமண உறவுக்கு காத்திருக்கும் பெண்ணோ, திருமண பந்தம் சரியில்லாமல் விவாகரத்து கோரும் பெண்ணோ, திருமணமோ காதலோ தனக்கு செட் ஆகாது என்று லிவிங்-கில் வாழும் பெண்ணோ, அல்லது காதலனோடு லிவிங்-கில் இருக்கும் பெண்ணோ, யாராக இருந்தாலும் இன்னும் ஆண்களை நம்பி வாழ வேண்டிய கலியுக கண்ணகியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதே “கண்ணகி” திரைப்படத்தின் கதை. பெண்களுக்கு திருமணமே பாதுகாப்பைத் தரும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படும் கலை (அம்மு அபிராமி), திருமணம் தனக்கான பாதுகாப்பை தராமல் விவாகரத்து கொடுத்து தன்னை வெளித்தள்ள முயலும் போது செய்வதறியாது திகைக்கும் நேத்ரா (வித்யா பிரதீப்), காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் லிவிங்-கில் இருப்போம் என்று வாழும் நதி,…
Read More