கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…? ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி…
Read MoreTag: யோகி பாபு
”நடிகர் மோகன் நடிக்க வந்துவிட்டார். இனி அவர் மார்க்கெட் என்னவென்று தெரியும்” – ஹரா இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.
நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு Official Teaser https://www.youtube.com/watch?v=NZNAOnLXlCw 🔥🔥 தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வில்… தயாரிப்பாளர் S P மோகன் ராஜ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம், முதல் படம்…
Read Moreஐஸ்வர்யா ராஜேஷின் மருத்துவ செவிலியர் கதையைப் பேசும் “சிஸ்டர்”
Dwarka Productions பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர். கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது, அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை…
Read Moreசீனு ராமசாமி இயக்கத்தில் ”கோழிப்பண்ணை செல்லதுரை”
“ஜோ” படத்தின் வெற்றியை தொடர்ந்து “VISION CINEMA HOUSE” டாக்டர் டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படம் கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகி வருகிறது. இது அதிரடி மற்றும் உணர்ச்சிகள் நிரம்பிய வாழ்வியல் திரைப்படமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முக்கிய கதாபாத்திரத்தில் “யோகி” பாபு படத்தில் நடிக்கிறார். கதையின் நாயகனாக ஏகன் அறிமுகமாகிறார். பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச் செந்தூர் ஶ்ரீ…
Read Moreசமுத்திரக்கனி, யோகி பாபு நடிப்பில் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகிறது
11:11 புரொடக்ஷன் டாக்டர். பிரபு திலக் வழங்கும், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி. ஆனந் ஜோசப் ராஜ் தயாரிப்பில், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் டிசம்பர் 29,2023 அன்று வெளியாகிறது! ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 புரொடக்ஷன் டாக்டர். பிரபு திலக் அவர்கள். தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’…
Read Moreதமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபுதேவா பட டைட்டில் “ஜாலியோ ஜிம்கானா”
தமிழ்சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டைட்டில் கொண்ட ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தினை டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- நடிகர் பிரபுதேவா காம்போ இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது! டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தை சிறப்பாக தயாரித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளது. ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ…
Read Moreமுன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் – யோகிபாபு நடிக்கும் புதிய படம்.
முன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் – யோகிபாபு நடிக்கும் புதிய படம். BIG BANG CINEMAS என்ற பட நிறுவனம் தயாரிப்பில் தா,வில் அம்பு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார். விக்ராந்த் – யோகிபாபு இணைந்து நடிக்கிறார்கள். பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்கிறார், மற்றும் இனிகோ பிரபாகர், மிப்புசாமி, குமார் நடராஜன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். பீச்சாங்கை, கஜினிகாந்த், டிராபிக் ராமசாமி போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பால முரளி பாலு இசையமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்ய, வழக்கு எண், தனி ஒருவன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார். கலை இயக்கம் – ஜெய சந்திரன், ஸ்டண்ட் இயக்குனராக ஃபயர்…
Read Moreஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி…
Read More”குய்கோ” சினிமா விமர்சனம்
தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது. ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு ஆண்டவன் கட்டளை என்ற பெயரை அவர்தான் சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன…
Read More