பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இன்று மாலை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய “சினிமாவின் ஆன்மா” (சிறார்கள் திரைப்பட ரசனைக் கல்வி) என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார். இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்நூல் குறித்து தீவிர ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். சந்தியா பதிப்பகத்தின் (திரு. சந்தியா நடராஜன்) வெளியீடாக வந்துள்ள இந்நூல் குறித்த சுருக்கமான விவரங்கள் வருமாறு: நூலின் முக்கிய நோக்கம்: * பக்குவப்பட்ட நல்மனிதர்களை உருவாக்குதல்: இது கேமரா, எடிட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் ‘தொழில்நுட்பக் கல்வி’ அன்று; மாறாக, மனித உணர்வுகளையும், வாழ்வியல் அறத்தையும், கலை நுணுக்கங்களையும் ரசிக்கக் கற்றுத்தரும் ‘திரைப்பட ரசனைக் கல்வி’ (Film Appreciation…
Read MoreAuthor: reporter
யுவன் சங்கர் ராஜா இசையில் விக்ரம் பிரபு – அறிமுக இயக்குநர் சித்தார்த் கூட்டணி; புதிய கமர்ஷியல் படம் தொடக்கம்!
தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விக்ரம் பிரபு, தனது தனித்துவமான கதைத்தேர்வுகள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். குறிப்பாக டாணாக்காரன் மற்றும் சிறை போன்ற…
Read More*’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!*
சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம். இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின்…
Read Moreஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
*ஜூன் 24, 2026:* நெட்ஃப்ளிக்ஸ் தனது முதல் தெலுங்கு நகைச்சுவைத் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. மாலிக் ராம் இயக்கியுள்ள இத்தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் மட்டுமே வெளியாகிறது. இந்த நகைச்சுவை கலந்த கதையில் சுப்பிரமணியம் ’சுப்பு’ சில்லுகுரி ராவ், எந்தவொரு ஆசிரியரும் செல்ல விரும்பாத ஒரு இடமான ‘மாகிபூர்’ (முற்றிலும் கற்பனையான) கிராமத்தில் பணி அமர்த்தப்படுகிறார். குடும்பத்தினர் மத்தியில் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உறுதியுடன் அங்கு செல்லும் சுப்புவுக்கு, அக்கிராமத்தினருக்கு பாலியல் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற மிகவும் சங்கடமான பணி காத்திருக்கிறது. அவரது வகுப்பறையில் ஒவ்வொரு கேள்வியும் விவாதமாக மாறுகிறது. ஒவ்வொரு வதந்தியும் மின்னல் வேகத்தில் பரவுகிறது. ரகசியமாக எதுவும் நீண்ட நேரம்…
Read Moreராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல்ஹாசன் பெருமையுடன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வு. தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தரவேண்டும் என்பதில் 46 ஆண்டுகளாக எவ்வித சமரசமும் இன்றி செயல்பட்டு வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைவது இதுவே முதல்முறை. ஓ மை கடவுளே,…
Read More‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்
சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆர்வத்தை கொண்டாடும் மனதை வருடும் விளையாட்டு நாடகத் தொடர். இந்தியா, 23 ஜூன் 2026: இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற உணர்வுப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த விளையாட்டு நாடகத் தொடரை ஜூன் 26 முதல் பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளது. சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஒரிஜினல் தொடர், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் விளையாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் அசாதாரண முயற்சிகளுக்கும் செலுத்தப்படும் மனமார்ந்த அஞ்சலியாக உருவாகியுள்ளது. சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த…
Read Moreசாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!
இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் ‘இம்மார்டல்’ (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன. இந்தப் பாடலை சாம் சி…
Read More’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. பாடலாசிரியர் யுகபாரதி, “உதவி இயக்குநராக இருந்தபோதிருந்தே மீரா கதிரவனை எனக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் இப்படியான வெற்றிக்குதான் இத்தனை வருடங்களாக அவர் கடுமையாக உழைத்தார். இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, கஸ்தூரி ராஜா அவர்களை நடிகராக பார்ப்பது மகிழ்ச்சி. இனி வரும் வெற்றிப் படங்களில் எல்லாம் கஸ்தூரி ராஜாதான் அப்பாவாக தப்பாமல் இருப்பார். இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை எனும் சொல்லுமளவுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வியலை இந்தப் படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களை ஏன் தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள் என்ற விவாதம்…
Read Moreசென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர். கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது… “நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது.…
Read Moreடிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!
சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம். இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின்…
Read More
