முதல் பார்வை மற்றும் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஶ்ரீகணேஷ் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர்

Trailer Link: https://youtu.be/NlsAkp8WZMs டிரைபாட் டிராவல் மற்றும் டி ஹெச் எஃப் ஃபிலிம் கார்ப்பொரேஷன் பேனர்களில் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் தயாரிப்பில் ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ‘ஹோப்’. படைப்பாக்கத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு திரைப்படத்திற்கு உரித்தான பட்ஜெட்டில் உலகத்தரத்தில் உருவாகியுள்ள ‘ஹோப்’ படத்தில் ‘நாடோடிகள்’ புகழ் அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘ஹோப்’ முதல் பார்வை மற்றும் டிரெய்லரை கடந்த ஞாயிறு (06.09.2026) அன்று காலை இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர்-நடிகர் சசிகுமார்,இயக்குநர்-நடிகர் சமுத்திரக்கனி,  இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல், பிரதீப் ஈ. ராகவ், கமலா திரையரங்க நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில்…

Read More

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார். டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான அபிஷன் ஜீவிந்த்தின் புதிய தலைமுறை நடிப்புத் திறன் இணையும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளின் நடுவே அமர்ந்திருக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்…

Read More

விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லராக நகைச்சுவை மற்றும் இதர அம்சங்களுடன் உருவாகவுள்ள ‘ஏஜிஎஸ் 29’

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை இதற்கு முன்னர் இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது. ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ என்று அழைக்கப்படும் இந்த படத்தில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியிலேயே…

Read More

இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் “கடவுள் தந்த பரிசு”

திரையுலகில் தனது 50வது வருடத்தில் ராஜநடை போட்டு, பவனி வரும் இசைஞானி இளையராஜா, மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குனர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார்.  நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார்கள். இசைஞானியும், மக்கள் நாயகனும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ஏங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாடல் பதிவுடன் பணிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Read More

என் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் – அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி. ‘வதந்தி சீசன் 2’ இணைய தொடர் வெளியான பிறகு தன்னுடைய பிரத்யேக இன்ஸ்டா ஐடி ( arjun_chakkaravarthy) யை பப்ளிக் ஆக்கியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி தன் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் பதிவிடும் போஸ்ட்டிற்கு லைக்கும், ஷேரும் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அவரை சந்தித்தோம். கலைத்துறை…

Read More

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பிட்ட போலிப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஆணையிட்டுள்ள நீதிமன்றம், இவை தொடர்ந்து இணையத்தில் உலாவுவது அவரது நற்பெயருக்கும், சமூக மதிப்பிற்கும், வர்த்தக ரீதியான வாய்ப்புகளுக்கும் மீட்க முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.…

Read More

‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில், “முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில்…

Read More

செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து  வரவேற்றிருக்கிறது. அந்த வகையில் சித்து மூலி மணி -ஸ்ரீ வைஷ்ணவ்- சந்தோஷ் எஸ் ஏ – கிருஷ்ணா விஜய் சந்திரன்-  ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கோல்ட் கால்’  திரைப்படம்.. எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ் ,சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே ,கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என்.…

Read More

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம். சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும். அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு.…

Read More

I Am Game – விமர்சனம் 4.5/5…

கதை… சூதாட்டத்தில் அதிக விருப்பம் கொண்டவர் துல்கர் சல்மான்.. ஒரு கட்டத்தில் கோடிக்கணக்கில் இவருக்கு கடன் பிரச்சனை வருகிறது.. அதை சமாளிக்க அடுத்த கடன் வாங்கி அடுத்த கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட மேலும் மேலும் பிரச்சினைகளை சந்திக்கிறார்.. ஒரு நாள் காரில் அதிக வேகத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அவருக்கு சுயநினைவு இல்லாமல் போகிறது.. அப்போது அவர்களின் பெற்றோர் விருப்பத்திற்கு பேரில் அவருக்கு வேறு ஒரு நபரின் வலது கை பொருத்தப்படுகிறது.. சில மாதங்கள் ஆன பின்னர் இவர் சுயநினைவை சந்திக்கும் போது கையால் இவருக்கு பல பிரச்சினைகள் வருகிறது… இவரது கண்ட்ரோல் இல்லாமல் கையே என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதன்படி செயல்படுகிறது.. ஒரு கட்டத்தில் வில்லன் மிஷ்கினை கொள்ள கை திட்டமிடுகிறது.. ஆனால் மிஷ்கின் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறார் துல்கர்…

Read More