உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம். சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும். அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு.…

Read More

I Am Game – விமர்சனம் 4.5/5…

கதை… சூதாட்டத்தில் அதிக விருப்பம் கொண்டவர் துல்கர் சல்மான்.. ஒரு கட்டத்தில் கோடிக்கணக்கில் இவருக்கு கடன் பிரச்சனை வருகிறது.. அதை சமாளிக்க அடுத்த கடன் வாங்கி அடுத்த கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட மேலும் மேலும் பிரச்சினைகளை சந்திக்கிறார்.. ஒரு நாள் காரில் அதிக வேகத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அவருக்கு சுயநினைவு இல்லாமல் போகிறது.. அப்போது அவர்களின் பெற்றோர் விருப்பத்திற்கு பேரில் அவருக்கு வேறு ஒரு நபரின் வலது கை பொருத்தப்படுகிறது.. சில மாதங்கள் ஆன பின்னர் இவர் சுயநினைவை சந்திக்கும் போது கையால் இவருக்கு பல பிரச்சினைகள் வருகிறது… இவரது கண்ட்ரோல் இல்லாமல் கையே என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதன்படி செயல்படுகிறது.. ஒரு கட்டத்தில் வில்லன் மிஷ்கினை கொள்ள கை திட்டமிடுகிறது.. ஆனால் மிஷ்கின் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறார் துல்கர்…

Read More

4 இடியட்ஸ் – விமர்சனம்…

கதை… கடற்கரையோரம் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட நான்கு திருடர்கள் அதனை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர்.. (புகழ் – திடியன் – கும்கி அஸ்வின் – இந்திரன் 4 திருட நண்பர்கள்) அதன்படி அவர்கள் உள்ளேவும் செல்கின்றனர்.. அங்கே உள்ள செக்யூரிட்டி ரவி மரியாவிடம் இவர்கள் சிக்கிக் கொள்ள அவர் இவர்களை மிரட்டி வீட்டுக்குள் வைத்து பூட்டி விடுகிறார்.. ஒரு கட்டத்தில் இவர்களை திட்டம் தெரிந்து கொண்ட அவரும் இணைகிறார்… இதையெல்லாம் அறிந்து கொண்ட வின்சென்ட் அசோகன் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… புகழ் – திடியன் – கும்கி அஸ்வின் – இந்திரன்.. மற்றவர்கள் காமெடிக்கு தான் ஹீரோ என புகழ் அவர்களைவிட தன்னை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.. காமெடி செய்யாமல் கொஞ்சம் சீரியஸ் மூடில் வருகிறார்.. மற்றவர்கள் கொஞ்சம்…

Read More

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, “இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு ‘இருமுடி கட்டு’ படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும்…

Read More

பாடகி தீ (DHEE) – அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வெளியீடு

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமிழ் பாடகி தீ.. அமெரிக்க பாப் இசை கலைஞரான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்து, படலாசிரியர் விவேக் வரிகளில், பாடகி தீ குரலில் ஒலித்த ‘வாரி வாரி’ எனும் தமிழ் இண்டி பாடல் அண்மையில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடர்ந்து இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த தருணத்தில் அமெரிக்க பாப் இசை பாடகியான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸை பாடி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், 808 கிருஷ்ணா…

Read More

திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை !!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா,நடிகை நந்திதா ஸ்வேதா, மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர். வெளியான முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…

Read More

விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா!

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார். அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும்…

Read More

கோகுலம் கோபாலன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’

மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் L367 படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மோகன் இயக்கும் மூன்றாவது படம் இது. இவர் இயக்குநராக அறிமுகமான ‘மேப்படியான்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்று கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா – உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read More

7 ஸ்டார் பாய்ஸ் – விமர்சனம் 4/5…

கதை… ஒரு கிராமத்தில் வசிக்கும் ஏழு சிறுவர்கள் கால்பந்தாட்ட அணியில் சேர நினைக்கிறார்கள்.. ஆனால் இவர்களை எவரும் சேர்த்துக் கொள்ளவில்லை… எனவே நாமளே ஒரு மைதானத்தை ரெடி செய்து அதில் ஆட வேண்டும் என நினைக்கிறார்கள்.. அப்போது அந்த கிராமத்தில் உள்ள அந்தோணி இவர்களுக்கு உதவுகிறார்.. ஒரு கட்டத்தில் இவர்கள் பல போட்டிகளில் பங்கேற்க நினைக்கின்றனர்.. அப்போது இவர்களுக்கு உறுதுணையாக நிஜ கால்பந்து ஜாம்பவான் ஐ எம் விஜயனை சந்தித்து பயிற்சி கொடுக்க சொல்கின்றனர்.. உலக சாம்பியன் இந்த சிறுவர்களுக்கு பயிற்சி கொடுத்தாரா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் அதிரடியான கால்பந்து ஆட்டம்.. நடிகர்கள்… ஆண்டனி வர்க்கீஸ் – இஸ்மாயில் (Ismail) • ஐ. எம். விஜயன் – ஐ. எம். விஜயன் (I M Vijayan) • ஜுமானா அப்து ரஹ்மான் – ரஹீனா…

Read More

ஏன் என்னை ஏதோ செய்தாய் விமர்சனம்…

  கதை… நாயகன் – அந்தோணி… நாயகி – மதுமிதா.. ஒரு பணக்கார வீட்டு பையன் அந்தோணி.. நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் இவருக்கு எப்போதும் மதுவும் வேண்டும் மாதுவும் வேண்டும்.. தினமும் எல்லா வேளையும் குடித்துக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி பெண்களுடன் ஜாலியாக இருப்பதால் ஒரு புரோக்கர் இவருக்கு ஒரு பெண்ணை அனுப்பி வைக்கிறார்.. அவர்தான் ஹீரோயின் மதுமிதா.. மற்ற பெண்களை விட இவரிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதால் தினம் தினம் அவரை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்யும் அளவுக்கு நெருக்கமாகின்றனர்..   ஆனால் நீ ஒரு குடிகாரன்.. உன்னுடன் வாழ முடியாது.. எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள்.. நீ குடிப்பதை நிறுத்தினால் உன்னுடன் வாழ்வேன் என்கிறார்..   நீ ஒரு விபச்சாரி.. நீ என்னை கேள்வி கேட்கிறாயா? என்று…

Read More