7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரை பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர். முதன்மை கதாபாத்திரங்களில் அருள்நிதி மற்றும் அமீர் நடித்துள்ளனர். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி நகரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாக தொடரும் சமூகப் பிரச்சினைகளை, மக்களின் இரத்தமும் சதையுமான…
Read MoreAuthor: reporter
ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
மும்பை, ஆகஸ்ட் 28, 2026: மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை…
Read Moreர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா… அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம்…
Read Moreர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா… அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம்…
Read Moreஒன்ஸ் மோர் – விமர்சனம்….
ஸ்டோரி… காதல் தோல்வியால் இருக்கிறார் நாயகன் அர்ஜுன் தாஸ்.. இவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் காலேஜ் ஜூனியர் அதிதி சங்கர்.. முதலில் அவரை வெறுக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஓகே சொல்கிறார்.. இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும்போது திடீரென முன்னாள் காதலியின் அழைப்பு வருகிறது.. இவரை சந்திக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்.? யாரை திருமணம் செய்து கொண்டார்.? என்பதுதான் திரைக்கதை.. கேரக்டர்ஸ்… அர்ஜுன் தாஸ் — ரகுவரன் அதிதி சங்கர் — அஞ்சலி சோனா ஒலிக்கல் — இந்திரா வாசுதேவன் இடைவேளை வரை சோகமாக பிறகு ஜாலியாக இருக்கிறார் அர்ஜுன் தாஸ்… ஆனால் ஜாலி கேரக்டரை விட சீரியஸ் கேரக்டருக்கு இவர் தன்னை பக்காவாக பொருத்தியிருக்கிறார்.. பெரும்பாலும் இவரது படங்களில் சீரியஸ் கேரக்டர் தான் இவருக்கு கை கொடுக்கிறது.. ஸ்டுடென்ட்…
Read More22 மாநிலங்கள் வழியாக 15,000 கி.மீ. பயணம்; ஊர்வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து 120 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இன்று (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மெட்ராஸ் முதலை வங்கி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நிறுவனத்தின் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027…
Read Moreபான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ஷோஸ்டாப்பர்ஸ் 2026 சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான அவரது திரைப்பயணத்தில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தனித்துவமான திரை ஆளுமை, பான் இந்தியா அளவிலான ரசிகர்கள் வரவேற்பு மற்றும் உலகளவிலான அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம், அல்லு அர்ஜுன் பிராந்திய சினிமாவின் எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் தொடங்கிய அவரது பயணம், இன்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட உச்ச நட்சத்திரமாக உள்ளார். இது இந்திய சினிமாவின் மாறிவரும் சூழலையும் பிரதிபலிக்கிறது. ’புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியிலிருந்து, சாதனை படைத்த ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படத்தின் தாக்கம் வரை, பல்வேறு…
Read Moreஇந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனை, விஜய் அவர்கள் முதல்வராக ஆகியிருப்பது!
— ‘இசைக் கவிஞர்’ சௌந்தர்யன். சப்தஸ்வரங்கள் ரிகர்சல் ஸ்டுடியோ நிறுவனர் கெளசி அவர்கள் முயற்சியில், ஆயிரம் பாடல்கள்,தொடர்ச்சியாய் நூற்று இருபது மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி,சாதனை படைத்ததற்கான சாதனை சான்றிதழ் WORLD RECORDS UNION தலைமைப் பொறுப்பாளர் மூலமாக பெற்றார்கள். இந்த நிறைவு விழா சென்னை தி.நகர் பி.டி தியாகராயர் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இசைக்கவிஞர் செளந்தர்யன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, வாழ்த்தி பேசினார். “ஆண்களுக்கு இப்படியொரு சாதனை புரிவதில்,பெரிய போராட்டம் என்ற ஒன்று இருக்காது. ஆனால் பெண்களுக்கு இயல்பாகவே குடும்பம், குழந்தைகள், அதிகமான பொறுப்புகள் நம்மை விட அவர்களுக்கு அதிகம். அதையும் சமாளித்து, கெளசி அவர்கள் இப்படியொரு சாதனை புரிந்திருக்கிறார்கள் என்றால் பாராட்டத்தான் வேண்டும். இந்த வருடம் பாராட்டும் படியாய் நிறைய சாதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் அவர்கள் மிகப்பெரிய…
Read More‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஹாட்ரிக் சாதனை!
மலையாளத் திரைப்படங்களை கேரளாவுக்கு அப்பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், (Future Runup ) ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் விநியோகத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க விநியோக நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோரால் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படங்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்திய இந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ திரைப்படம் அமைந்தது. தொடர்ந்து…
Read Moreஹிப்ஹாப் தமிழா ஆதி, கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் குரல்களில் உருவான காதல் திருமணப் பாடல்!
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார். காதல், திருமணம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், படத்தின் கதையோட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பாடலாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘கலைவாணியே’ பாடலில் ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண இணைவு அழகாக…
Read More
