நடிகர் பிரித்விராஜ் மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர் . தமிழ் தெலுங்கு , பாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.தமிழ் சினிமாவில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமாகிய இவர் பாரிஜாதம் , மொழி , அபியும் நானும் , ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் , பாடகர் , தயாரிப்பாளர் என அனைத்து பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். . இயக்குனராக இவர் இயக்கும் முதல் படம் ‘லூசிஃபெர் ‘. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தளபதி விஜய் உடன் ஜில்லா , சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் தமிழ் நடித்து இருக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. …
Read MoreCategory: சினிமா செய்திகள்
சாதிய ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படம் உறியடி2
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், “உறியடி உறியடி2 எடுப்பதற்கான காரணம் என்ன?” என்பதற்கு அழகான பதிலைச் சொல்லி இருக்கிறார்.”இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி2 வருவதற்கான காரணம்” என்கிறார் மற்றும் நடிகரான விஜய்குமார். மேலும் அவர் படம் பற்றி கூறும்போது, “எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான்…
Read More‘சத்ரு’ – மார்ச் 8-ம் தேதி ரிலீஸாகிறது..!
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சத்ரு.’ இந்தப் படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்திருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – அம்ரிஷ், பாடல்கள் – கபிலன், மதன் கார்க்கி, சொற்கோ, படத் தொகுப்பு – பிரசன்னா.ஜி.கே., கலை இயக்கம் – ராஜா மோகன், சண்டை இயக்கம் – விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான். படம் பற்றி இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் பேசும்போது, “இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. இந்த படத்தில் கதிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். ஆனால்,…
Read More
