இயக்குனர் முருகதாஸ் கனவு நிறைவேறுமா?

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர், இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கதை திருட்டு குற்றசாட்டுக்கு உள்ளாகும், தமிழ்சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என மறைந்த இயக்குனர் பாலசந்தரால் பாராட்டப்பட்டவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் நட்சத்திர நடிகர்கள் கால்ஷீட்டுக்காக காத்துகொண்டிருக்கிறார் இல்லை இனி அப்படி ஒரு வாய்ப்பு A.R.முருகதாஷ்க்கு கிடைப்பது அரிதுஎன்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில்.ரஜினி நடித்த தர்பார் படம்தான்A.R.முருகதாஸ் கடைசியாக (2020 ஜனவரி) இயக்கிய படம்

அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தைஇயக்கஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தை இயக்கும்  பொறுப்பிலிருந்து விலகினார்.அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவதுஎன்றுமுடிவெடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் என்கின்றனர் அவரது வட்டாரத்தில்

இந்தப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்கவிருப்பது ஒரு குரங்கு. அதை வைத்துக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையைஉருவாக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அதோடு இதற்கான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை  அலசி ஆராய்ந்து ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து வேலைகளையும் தொடங்கிவிட்டதாகச் கூறுகின்றனர்.ஆனால் அதுகுறித்த அறிவிப்பும் எதையும் இதுவரைஅவர் வெளியிடவில்லை.

தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்க முன்ணனி  நடிகர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை எனவே, தெலுங்கு அல்லது இந்தியில் யாராவதொரு பெரிய நடிகரைப் பிடித்து ஒரு படம் ஒப்பந்தம் செய்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம்அப்படியே யாரையாவது பிடித்துவிட்டாலும் கொரானா இரண்டாம் அலை காரணமாக உடனே படபபிடிப்பை தொடங்க இயலாத நிலைமை உள்ளது நட்சத்திர நடிகர், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை உறுதிசெய்து கொண்டபின், அந்த இடைவெளியில் இந்த அனிமேசன் படத்தை முடிக்கிறேன் என்று சொல்லக் காத்திருக்கிறாராம்.
எதற்காக இவ்வளவு திட்டமிடல்? என்றால், நேரடியாக அனிமேசன் படத்தைத் தொடங்கினால், முருகதாஸ் கதை முடிந்தது, இனிமேல் அவரை நம்பி எந்தக் கதாநாயகனும் வரமாட்டார், அதனால்தான் அனிமேசன் படத்துக்குப் போய்விட்டார் என்று சொல்லிவிடுவார்களாம்.
அதனால் கைவசம் ஒரு பெரிய கதாநாயகனை வைத்துக்கொண்டு அதன்பின் இந்தப்படத்தை அறிவித்தால் கௌரவமாகஇருக்கும், அனிமேஷன் படத்தையும் நல்ல விலைக்கு வியாபாரம் செய்துமுடிக்கலாம் என்று நினைக்கிறாராம்.ஆனால் தற்போதுவரை அவருக்கு எந்தப் பெரியகதாநாயகனும்கிடைக்கவில்லையாம். அஜீீீத், விஜயகாந்த்,சூர்யா, விஜய்,ரஜினிகாந்த் என்று வியாபார முக்கியத்துவம், நட்சத்திர வெளிச்சம் இருக்ககூடிய தமிழ் நடிகர்கள்நடித்த படங்களை இயக்கியவர்அதற்கு அடுத்தகட்ட நடிகர்கள் நடிக்கும் படங்களை இயக்கினால் தனது இமேஜ்
பாதிக்கப்படும் என கருதுகிறாராம் முன்ணனி நடிகர்கள் சம்பளத்துக்கு இணையாக தனக்கு சம்பளம் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதுதான் A.R.முருகதாஸ் பின்னடைவுக்கு காரணம் என்கிறது தமிழ் சினிமா வட்டாரம்

Related posts

Leave a Comment