குரங்கை நம்பி தயாரிப்புக்கு திரும்பிய தேனாண்டாள் பிலிம்ஸ்

இந்திய சினிமாவில் 36 வருடங்களில் ஒன்பது மொழிகளில் 125 படங்களை இயக்கி உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றவர் மறைந்த இயக்குனர் இராமநாராயணன் குறைந்தபட்ஜெட்டில் நடிகர்களின் கால்ஷீட், சம்பள பிரச்சினை இல்லாமல் விலங்குகளை வைத்து படம் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் வெற்றிகண்டவர்

இராமநாராயணன் மறைவுக்கு பின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பொறுப்புக்கு வந்த அவரது மகன் முரளி@ராமசாமி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்க தொடங்கினார் 99 படங்களை தயாரித்திருந்த இந்த நிறுவனம் விஜய் நடித்த “மெர்சல்” படத்தை தயாரித்ததன் மூலம் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது தேனாண்டாள் பிலிம்ஸ் இதனால் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட முடியாத நிலையில் இருந்தது தேனாண்டாள் பிலிம்ஸ்

இராம நாராயணன் வெற்றி பார்முலாவைமீண்டும் கடைப்பிடிக்கும் வகையில்இந்திய திரை உலக வரலாற்றில் முதன்முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராட்சச குரங்கு நடிக்கும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் என்.இராமசாமி தயாரிக்கஇருப்பதாகஅறிவிக்கப்பட்டிருக்கிறதுஇந்தப்படத்திற்கு ” கபி ” என்று பெயரிட்டுள்ளனர். இதன் முதல் பார்வை வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.
அரவிந்தசிங் ஒளிப்பதிவு செய்யும் இதற்குகவுசிக்கரா மற்றும் என். இராமசாமி இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் ” கபி ” படத்தின் தயாரிப்பில் கூட்டு சேர்ந்துள்ளார்

Related posts

Leave a Comment