“காட்டுக்கும், மனிதனுக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில்தான் வாழ்ந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைந்து கிராமம், நகரம் என்று மாறியது. என்றாலும் காட்டின் மீது மனிதனுக்கு மோகம் இருந்து வருகிறது. அந்த காட்டின் பெருமையை பேசும் படமாக, ‘வீரப்பனின் கஜானா’ தயாராகி இருக்கிறது” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் யாசின்.காட்டுக்கும், மனிதனுக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில்தான் வாழ்ந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைந்து கிராமம், நகரம் என்று மாறியது. என்றாலும் காட்டின் மீது மனிதனுக்கு மோகம் இருந்து வருகிறது. அந்த காட்டின் பெருமையை பேசும் படமாக, ‘வீரப்பனின் கஜானா’ தயாராகி இருக்கிறது” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் யாசின்.
இவர் மேலும் கூறியதாவது:-
“வீரப்பன் சம்பந்தமான காட்சிகள் படத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளன. குரங்கு, யானை, புலி என குழந்தைகளை குதூகலப்படுத்தும் அம்சங்களும் படத்தில் உள்ளன.
ராஜேஷ், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தேவா, பூஜா, கேத்தரின் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரபாதீஸ் சாம்ஸ் தயாரித்து வருகிறார். தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் பகுதிகளில் படம் வளர்ந்துள்ளது” என்றார்.படத்தில் நடித்து வரும் யோகிபாபுவும், மொட்டை ராஜேந்திரனும் நண்பர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சிபாரிசு செய்து வருகிறார்கள். இந்த படத்துக்காக மொட்டை ராஜேந்திரனுக்கு சிபாரிசு செய்தவர், யோகிபாபு தான் என்கிறார்கள்.