காலத்தால் அழியாத கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘அமர்க்களம்’. நடிகர் அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்ட தருணமாக மாறியுள்ளது. இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது. இந்த படத்தில்தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் தம்பதிகளாக மாறினர். இதனால், ‘அமர்க்களம்’ திரைப்படம்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்…
கதை… கதை நாயகன் செல்வராகவன்.. இவரது அக்கா கௌசல்யா.. சாலை வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார் செல்வராகவன்.. ஒரு கட்டத்தில் குஷியை திருமணம் செய்து கொண்டு ஹோட்டல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.. கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் திடீரென மனைவி குஷி ரவி தற்கொலை செய்து கொள்கிறார்.. மனைவியின் மரணத்தால் மாறும் செல்வராகவன் திடீரென சமூகப் பொறுப்போடு பல சம்பவங்கள் செய்கிறார்.. அடுத்தது நடந்தது என்ன.? மனைவியின் தற்கொலைக்கு காரணம் என்ன.? இவரது மனதில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சாந்தமான எதார்த்த மனிதராக நடிப்பில் ரசிகர்களின் மனதை அள்ளிக் கொள்கிறார் செல்வராகவன்.. மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளும் கணவராகவும் ஒரு கட்டத்தில் சமூகப் பொறுப்பாளராக இவர் மாறும் காட்சிகள் எதிர்பாராத திருப்பம்… நீண்ட…
Read MoreTN 2026 – விமர்சனம் – அரசியல் காமெடி அலப்பறை[ 4/5…]
கதை… வட இந்தியாவைச் சேர்ந்த நட்டி தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வருகிறார்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகர் ஆகிறார்.. இவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆக தமிழக மக்களின் அன்பைப் பெற்று உச்ச நடிகராக மாறுகிறார்.. இவர் அடுத்த எம்ஜிஆர் என்று நினைக்கும் தம்பி ராமையா இவருக்கு பக்கபலமாக இருந்து அரசியல் தந்திரங்களை சொல்லிக் கொடுத்து நட்டியை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர வைக்கிறார்.. நடிகராக வளர்ந்து அரசியலில் குதிக்கும் நட்டியின் வாழ்க்கை என்ன ஆனது.? தமிழக நடிகர்கள் அரசியலில் களம் கண்டதையும் அவர்களின் வாழ்க்கை வளர்ச்சி எப்படி எல்லாம் மாறியது என்பதை எம்ஜிஆர் ரஜினி விஜய் ஆகியோரின் கலந்த தொகுப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார் உமாபதி ராமையா.. நடிகர்கள்… சதுரங்க வேட்டை படத்திலேயே ஒரு முழு நடிகராக மக்களின் அன்பைப் பெற்றவர் நட்டி.. இந்த…
Read Moreசரிகமா லைவ் Saregama Live & Mercuri மெர்குரி இணைந்து, இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு !!
சரிகமா Saregama Live மற்றும் மெர்குரி Mercuri இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன. இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது. “Music for Healing – Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby…
Read Moreஇயக்குநர் Ar. காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது. சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள ‘செல்லமே’ மற்றும் ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்தப் படத்தின் டீசரை நடிகை ரீமா சென் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வெளியான இந்த டீசரில்…
Read Moreசாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ரூல் பிரேக்கர்கஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “தீயோர் கூடம்.” சாக்ஷி அகர்வால், டேனியல் ஆனி போப் மற்றும் வையாபுரி இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை சக்திவேல் எழுதி, இயக்கி இருக்கிறார். மேலும் சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசந்த் இசைப்பேட்டை இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் டி.எஃப்.டி. ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, பி.கே. படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். கலை இயக்குநராக பிரசாத் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை ராஜா எழுதியுள்ளார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் திடீரென நடக்கும் கொலை, அந்த சம்பவத்தில் சிக்கும் மூன்று…
Read Moreபைரசி தடுப்பு கோரிக்கை: “ஜனநாயகன்” லீக்குக்கு கடும் நடவடிக்கை வேண்டும் – தயாரிப்பாளர் சங்கம்
TO, THE DIRECTOR GENERAL OF POLICE TAMILNADU, CHENNAI. வணக்கம், நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் சிக்கல்களால் இன்றுவரை தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட அந்த படம் பல்வேறு காரணங்களால் இன்றுவரை திரையிட முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படத்தின் வெளிநாட்டு உரிமை, ஏரியா விற்பனை, ஓடிடி உரிமை பெற்ற பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு பிறகாவது இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி முதலீடு செய்த அனைவருக்கும் போட்ட பணத்தை எடுத்து தரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று…
Read Moreஅரசியல் அதிர்வை ஏற்படுத்தும் ரவி மரியாவின் ‘மக்கள் தலைவா’ பட போஸ்டர் (For Sale)
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘பழகிய நாட்கள்’, ‘ மூன்றாம் மனிதன் ‘ என சமூக வலைதள உலகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கும் படைப்பாளியான ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மக்கள் தலைவா’. இதில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில்…
Read Moreபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.
ஹிப்ஹாப் தமிழா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகல துறைகளிலும் கால் பதித்து வெளிவந்த திரைப்படம் “மீசைய முறுக்கு”. சுந்தர்.சி தயாரித்திருந்த இப்படம் 2017-இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ்…
Read MoreIT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !!
பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் அவர்களின் , சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது குறித்தும் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் குறித்தும் திரு ஜாபர் சாதிக் பத்திரிக்கை நண்பர்களைச் சந்தித்து தனது தரப்பிலான விளக்கங்களை அளித்தார். இது குறித்து ஜாபர் சாதிக் கூறியதாவது.., என்னைச் சுற்றி பரவி வரும் பல தவறான தகவல்களுக்கு நேராக பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான். உங்கள் முன் வந்திருக்கிறேன். 6 ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் அதிகாரிகள் என்…
Read More