TN 2026 – விமர்சனம் – அரசியல் காமெடி அலப்பறை[ 4/5…]

கதை…

வட இந்தியாவைச் சேர்ந்த நட்டி தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வருகிறார்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகர் ஆகிறார்.. இவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆக தமிழக மக்களின் அன்பைப் பெற்று உச்ச நடிகராக மாறுகிறார்..

இவர் அடுத்த எம்ஜிஆர் என்று நினைக்கும் தம்பி ராமையா இவருக்கு பக்கபலமாக இருந்து அரசியல் தந்திரங்களை சொல்லிக் கொடுத்து நட்டியை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர வைக்கிறார்..

நடிகராக வளர்ந்து அரசியலில் குதிக்கும் நட்டியின் வாழ்க்கை என்ன ஆனது.? தமிழக நடிகர்கள் அரசியலில் களம் கண்டதையும் அவர்களின் வாழ்க்கை வளர்ச்சி எப்படி எல்லாம் மாறியது என்பதை எம்ஜிஆர் ரஜினி விஜய் ஆகியோரின் கலந்த தொகுப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார் உமாபதி ராமையா..


நடிகர்கள்…

சதுரங்க வேட்டை படத்திலேயே ஒரு முழு நடிகராக மக்களின் அன்பைப் பெற்றவர் நட்டி.. இந்த படத்தில் தன்னுடைய உடல் மொழியை அரசியல்வாதியாகவும் உச்ச நடிகராகவும் மாற்றி தேர்தல் விருந்து அளித்திருக்கிறார் நடராஜ்..

குல்கந்து குமார் என்ற தங்க நட்சத்திரமாக பட்டைய கிளப்பு இருக்கிறார் நடராஜ்.. இவரது நடை உடை பாவனைகள் எல்லாம் பல தமிழக நடிகர்களை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தும்..

தம்பி ராமையா ஒரு நடிகரின் ரசிகர் மன்ற தலைவராக இருந்து இப்போது அரசியல் களம் கண்ட ஒருவரை நினைவுபடுத்துகிறார்.. அவரிடம் பயிற்சி பெற்றவர் போல பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்..

இவருடன் பக்கபலமாக அரசியல்வாதிகளாக எம் எஸ் பாஸ்கர் & இளவரசு இருவரும் மெகா கூட்டணி அமைத்துள்ளனர்..

ஆதித்யா கதிர் தன்னுடைய டைமிங் காமெடி மூலம் ரசிக்க வைக்கிறார்.. நாயகியாக ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் உண்டு..


தொழில்நுட்ப கலைஞர்கள்…

தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் ரசிக்கும் ரகம்.. பின்னணி இசை ஓகே.. பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் சினிமாக்களம் அரசியல் களம் இரண்டையும் வேறுபடுத்தி ரசிக்க வைக்கிறார்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக மக்களை மகிழ்விக்க அரசியல் கலந்த நையாண்டி படத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்து இருக்கிறார் உமாபதி ராமையா.. அதிலும் இந்த தேர்தல் சமயத்தில் இந்த படம் வந்திருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கும்.. அதுபோல அரசியல்வாதிகளும் இந்த படத்தை ரசித்து சிரித்து கொள்ளலாம்..

அரசியல் கலந்த காமெடி திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் உமாபதி ராமையா.. இவரின் இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து கதை வசனங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார் இவரது தந்தை தம்பி ராமையா..

தமிழக அரசியலையும் தமிழ் சினிமாவையும் உன்னிப்பாக கவனித்து அதில் குறிப்பிட்ட நடிகர்களை குறி வைத்து இந்த படத்திற்கு கதை அமைத்திருக்கிறார் தம்பி ராமையா.. தன் தந்தை கதைக்கு ஏற்ப இயக்கி ரசிகர்களுக்கு அப்பா மகன் இருவரும் சேர்ந்து தேர்தல் விருந்து படைத்திருக்கின்றனர்..

Related posts

Leave a Comment