காடன் திரைப்பட விமர்சனம்

இயற்கை வளங்களை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் எதிர்ப்பும் என்ற ஒன்லைனில் யானைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை கலந்துகட்டி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகியுள்ள ‘காடன்.’ அஸ்ஸாமில் காட்டைக் கூறுபோட்டு யானைகளின் வாழ்வாதாரத்தை அழித்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி,  பிரமாண்ட காட்சிகளோடு இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன். அது யானைகள் சுதந்திரமாக வாழ்ந்து வருகிற பல கிலோ மீட்டர் சுற்றளவுள்ள அந்த அடர்ந்த காடு. அந்த காட்டையும், காட்டில் வாழ்கிற உயிரினங்களை குறிப்பாக யானைகளை தனி மனிதனாக – தனது சொந்த குழந்தைகளைப் போல் கட்டிக் காக்கிற மனிதன் ‘காடன்.’ பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு தருகிற நிறுவனம் கட்டுவதாக சொல்லி அந்த காட்டை அழிக்கிற முயற்சியில் ஈடுபடுகிறார் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் ஒருவர். அந்த நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்போது யானைகளின் வழித்தடம் தடுக்கப்பட்டு யானைகள்…

Read More

திருப்தியில்லாமல் வேலை செய்த படம் அசுரன் – வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிப்பு.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ்குமார் இசை, கலை இயக்கம் ஜாக்கி என்றும் சொல்லப்பட்டிருந்தது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி 2020 சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், வாடிவாசல் படத்தில் சூர்யா இல்லை, வேறு கதாநாயகனை விரைவில் அறிவிப்போம் என்று கலைப்புலிதாணு பெயரிலான ஒரு ட்விட்டர் கணக்கில் செய்தி வெளியானது. உடனே அதை மறுத்த கலைப்புலிதாணு, அது போலிக் கணக்கு அதில் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்று சொன்னார். அதோடு,நவம்பர் 28,2020 அன்று எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா…

Read More

தொலைக்காட்சியில் வெளியாகும் மண்டேலா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித் என எல்லா நடிகர்களுடனும் நடித்துவிட்ட காமெடி நடிகர் யோகிபாபு. காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். இவர் லீட் ரோலில் நடிக்க தர்மபிரபு, கூர்கா படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், யோகிபாபு முதன்மை ரோலில் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘மண்டேலா’. சசிகாந்த் வழங்க பாலாஜி மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். ஒரே ஷெட்யூலில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு. அதோடு, இறுதிக்கட்டப் பணிகளையும் முடித்து படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டதாம். இன்றைய காலகட்டத்தில் சின்ன பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடியிலோ, டிவியிலோ ரிலீஸ் செய்வதே புத்திசாலித்தனம் என திரையுலகம் நம்புகிறது. அதன்படி, மண்டேலா படமும் நேரடியாக டிவியில் வெளியாக இருக்கிறது. நமக்குக் கிடைத்த தகவல்படி, யோகிபாபுவின் மண்டேலா படமானது நேரடியாக…

Read More

முரட்டுதனமான நூறு அண்ணன்கள் சுல்தான் கதை என்ன?

கார்த்தி, ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் மார்ச் 24ஆம் தேதி அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கார்த்தி, ராஷ்மிகா, பாடலாசிரியர் தனிக்கொடி, விவேகா, நடிகர்கள் பிரின்ஸ், சென்றாயன், கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திர ராஜு, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின், நடன இயக்குநர் ஷோபி, படத்தொகுப்பாளர் ரூபன், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது… “இந்த நிகழ்ச்சி குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்தப்பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தைச் சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த…

Read More

இந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அல்லு சிரீஷ்

 நடிகர் அல்லு சிரீஷ் ஒரு டிரெண்ட் செட்டர் என்பதில் சந்தேகமில்லை.  நடிகரும் பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புதுபுது படைப்புகளை இயக்க தயங்கியதில்லை.  அல்லு சிரீஷ் தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார், இவரின் நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார்.  டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகர் இவர், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார்.  இந்தி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய இந்தி – விலாயதி ஷரப் என்ற மியூசிக் வீடியோவில் நடித்து,  இந்தி சிங்கிளில் நடித்த முதல் இளம் தென்னிந்திய நடிகர் என்ற அங்கிகாரம் பெற்றுள்ளார்.

Read More

தேசிய விருதுகளால் தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது – பாரதிராஜா

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், மூத்த இயக்குனருமான பாரதிராஜா தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக கலைஞர்களை வாழ்த்தி, பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்சினிமாவைபெருமைப்படுத்திய தேசிய விருது பெற்ற கலைஞர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். கடின உழைப்பை மதிக்க வேண்டும்… அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அவ்விருதை ஏற்புடைய கலைஞர்கள் பெறும்போது தமிழ் சினிமா தலை நிமிர்கிறது. 2019-ல் வெளியான படங்களில் எல்லோரையும் அசத்தியெடுத்த படம் ‘அசுரன்’.  அதோடு இன்னும் சில நல்ல படங்களும் தேர்வில் கலந்துகொண்டன. நம் தமிழ் சினிமாவில் நல்ல சினிமாக்கள் பிறந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் 2019 ஆண்டில் நமக்கு நெருக்கமான படமான அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது அசுர உழைப்பாளன் தனுஷூக்கு கிடைத்தது உண்மையிலேயே…

Read More

காதம்பரி திரைப்பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘காதம்பரி’. வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் காஷிமா ரஃபி, அகிலா நாராயணன்ன், சர்ஜுன், நின்மி, பூஷிதா, மகராஜன், முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹீரோ அருள் மற்றும் அவரது நண்பர்கள் டாக்குமெண்டரி படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி விடுகிறது. சிறிய காயங்களுடன் நடுகாட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றுக்கு செல்லும் போது, அங்கு வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்குகிறார்கள். வாய் பேச முடியாத பெரியவரின் செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் சில பொருட்களும் விசித்திரமாக இருக்க, அது குறித்து நண்பர்கள் ஆராயும் போது, அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில்…

Read More

அரசாங்கத்தின் கொடூர முகத்தினை தோலுரிக்கும் தேன் – சிறப்பு பார்வை

பசுமை, பசுமை, பசுமை… திரும்பிய பக்கமெல்லாம் பசுமை படர்ந்த தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம். காதலறும்பிய இளவட்டங்கள் வேலுவும் பூங்கொடியும் கணவன் – மனைவியாக உற்றார் உறவினர் சம்மதித்தாலும் கடவுளின் உத்தரவு கிடைக்காத நிலை. கடவுளின் முடிவை மீறினால் தம்பதிகளில் ஒருவருக்கு மரணம் நிச்சயம்’ என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். காதலர்கள் மீறுகிறார்கள். குறிப்பிட்ட குறைபாட்டோடு குழந்தை பிறக்க, அடுத்தடுத்தும் வளைத்துக் கட்டி வெளுத்து வாங்குகிறது சோதனைகள். அத்தனைக்கும் காரணம் மக்கள் விரோத அரசின், மனிதம் தொலைத்த அரசு ஊழியர்களின் அராஜகம். அந்த அராஜகங்களின்  தொகுப்பு அழ வைக்கும் காட்சிகளாய் விரிகிறது. ஆதார் கார்டு, காப்பீடு அட்டை போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை விளக்கியிருப்பதெல்லாம் இயக்குநர் கணேஷ் விநாயக்கின் துணிச்சல்! ஓங்கி உயர்ந்த மலையில் அதைவிட ஓங்கி உயர்ந்த மரங்களில் தாவி தேனெடுத்து பிழைப்பு நடத்தும் அப்பாவி இளைஞனாய்…

Read More

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிக்கும்  படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கியுள்ளார். லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களை முடித்த கையோடு விஜய் சேதுபதி, சன் டிவியில் குக்கிங் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் பணிபுரிய உள்ளார். இமான் இசையமைக்கிறார். எடிட்டராக விவேக் ஹர்ஷன் பணிபுரிய உள்ளார். இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவின் மூலம், இதில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக…

Read More

தமிழக தடகள வீராங்கனை சாந்தி வாழ்க்கை படமாகிறது

தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் இந்தியாவுக்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்துக்கு 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பெற்று கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் ஆவார். ஆசிய விளையாட்டு போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனை அறிக்கை அடிப்படையில் அவருக்கு பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெண்கல பதக்கம் திரும்ப பெறப்பட்டது. தடகள போட்டிகளில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டு அவரிடம் ஒப்புதல் பெற்று இந்த படம் தயாராவதாக படத்தின் இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி தெரிவித்துள்ளார். சாந்தி சவுந்தரராஜன் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு…

Read More