அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும், யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக, பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார். இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, பெரிய திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘கும்மடி நரசைய்யா’ எனும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இந்தப் படத்தில் தலைசிறந்த கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திய பரமேஷ்வர் ஹிவ்ராலே, இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம், தயாரிப்பாளர்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார்
தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான். இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில், எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் கல்யாணத்திற்கு பரிசாக, ஒரு விலையுயர்ந்த கார்…
Read MoreAR ரஹ்மான் இசையில் ‘தேரே இஷ்க் மே’ படத்திலிருந்து ஓ காதலே பாடல் வெளியாகியுள்ளது!
AR ரஹ்மான், ஆதித்யா RK மற்றும் மஷூக் ரஹ்மான் இணைந்து, ஆனந்த் L ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் தமிழ் பாடல் ‘ஓ காதலே’யை வெளியிட்டுள்ளனர். ‘ஓ காதலே’ எனும் இந்த பாடல், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தேரே இஷ்க் மே’ உலகத்திற்குள் முதல் பார்வையாக அமைந்துள்ளது. டீசர் வெளியான தருணத்திலேயே உருவான உற்சாகம், இப்போது முழுமையான இசை அனுபவமாக மாறியுள்ளது. ரஹ்மானின் இசை மாயையில் உருவாகியுள்ள இந்த பாடல், உணர்ச்சிபூர்வமான மற்றும் பிரம்மாண்டமான இசை வடிவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இடம்பெற்றுள்ள இந்த பாடல் காணொளியில், AR ரஹ்மானின் பிரம்மிக்க வைக்கும் இசை, ஆதித்யா RK-வின் தனித்துவமான குரல், மஷூக் ரஹ்மானின் பாடல் வரிகள் ஆகியவை ஓர் அபூர்வ இணைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மனதை உருக்கும் காட்சி வடிவங்கள்…
Read Moreநிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’ படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகிறது!
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸின் ’ஜூடோபியா 2’ நவம்பர் 28 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. புதிய காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அகாடமி விருது வென்ற ’ஜூடோபியா’வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வல் சாகச கதையான ‘ஜூடோபியா 2’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை இன்னும் ஒரு மாதத்தில் பெரிய திரையில் பார்க்கலாம். இருவரும் கேரி டி’ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். இந்தப் படத்தில், கேரி டி’ஸ்னேக் ஜூடோபியாவிற்கு வந்து விலங்கு உலகத்தை தலைகீழாக மாற்றுகிறார். அப்போது ஜூடி மற்றும் நிக் ஒரு பெரிய மர்மத்தின் திருப்பத்தில் தங்களைக் காண்கிறார்கள். இதை முறியடிக்க, அவர்கள் நகரத்தின் எதிர்பாராத புதிய…
Read MoreProduction No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர்
‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழு தயாரிப்பு : சிவநேசன் S (Incredible Productions) இயக்குநர்: சிவநேசன் S (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்) இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு: சுரேஷ்…
Read Moreகே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்
கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பை போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிக்கிறார். ‘கன்னி மாடம்’, ‘சார்’ ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படம் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 7’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் போஸ் வெங்கட், “விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன்…
Read Moreபைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தமிழக முதல்வர் திரு .மு,க ஸ்டாலின் அவர்கள்
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இன்னிலையில் படத்தினை பார்த்த தமிழக முதல்வர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். பைசன் காளமாடன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ் அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள். சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும்…
Read Moreஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;
ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது “Online Fake Share Market Scams” குறித்து மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில், பிரபல நடிகர் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், டீசல் படத்தின் “பீர் பாடல்” மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற கானா குணா இப்பாடலை பாடி இருக்கிறார். இந்த விழிப்புணர்வு பாடல் மூலம், போலியான “ஷேர் மார்க்கெட்” முதலீட்டு தளங்களின் காட்சிகள், அவை மக்களை எவ்வாறு ஏமாற்றி பணத்தை பறிக்கின்றன என்பதைக் காட்டி, மக்கள் அதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பெருநகர…
Read Moreமெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான “பெத்தி” படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இப்படத்தில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas) சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு ( Venkata Satish Kilaru) தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கை தீவின் பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர்…
Read More“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.
இடம்பெறுபவர்கள்: வாஹீசன் ராசையா (குரல்)8, அஜய் எஸ். காஷ்யப் (குரல்) மற்றும் இசையமைப்பாளர் தரண் குமார். வழங்குபவர்: டாக்டர் ஜே பி லீலாராம், நி“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.றுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட்(Brand Blitz Entertainment) & இயக்குநர்: கிருபாகர்ஜெய் ஜே. 22 அக்டோபர் 2025 – புதிதாக வெளியான தமிழ்த் தனிப்பாடலான ‘காக்கும் வடிவேல்’ ஏற்கனவே சுயாதீன இசை ஆல்பங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இந்தப் பாடல், வெறும் நான்கு நாட்களில் அரை மில்லியன் பார்வைகளை நெருங்குகிறது. இது அதன் விரைவான, உலகளாவிய ஈர்ப்பு மற்றும் ஏராளமான கேட்போர் வரவேற்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு வலிமையான கூட்டணி இந்த #MuruganVibeSong வாஹீசன் ராசையா மற்றும் அஜய் எஸ். காஷ்யப்…
Read More