ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘ ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘படம் நன்றாக இருக்கிறது’ என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தருணத்தில் இசை பணிக்காக வெளிநாட்டில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா படக் குழுவினருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், ‘ஸ்வீட் ஹார்ட் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். படத்தைப் பார்த்து ரசித்தவர்களும் நல்ல விதமான விமர்சனங்களை சமூக வலைதள பங்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
இஷாக் உசைனி நடித்து இயக்கி உள்ள ” பூ க ம் ப ம் ” போலந்து , ஜெர்மன் நாடுகளில் உருவாகி உள்ளது.
உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் தற்காப்பு கலைஞரான ஷிகான் உசைனியின் சகோதரரான இஷாக் உஷைனி ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரும் தற்காப்பு கலைஞர் என்பது கூடுதல் சிறப்பாகும். தனது ஐ இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகனாக நடித்து தயாரித்து இயக்கி உள்ள படம்தான் ” பூகம்பம்”. முழுக்க முழுக்க போலந்து மற்றும் ஜெர்மன் நாட்டில் வளர்ந்துள்ள இதில் தில்சானா, ஹேமா, ரிஷத், எம்.எம். இலியாஸ், மல்கோத்ரா, மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சதாசிவ ஜெயராமன் இசையையும், தயாள் ஓஷோ ஒளிப்பதிவையும், நவீன்குமார் படத்தொகுப்பையும், என்.எம். இலியாஸ் இணை இயக்கம் மற்றும் தயாரிப்பு மேற்வையையும் கவனித்துள்ளனர். உள்ளூர் அரசியல் வாதிகளின் தில்லுமுல்லுகளை தோலுரித்து காட்டும் காட்சிகளும், காதலிக்கும் காதலர்களின் மறுபக்கத்தின் நிதர்சன உண்மைகளையும், பொதுவாழ்வில் ஐ இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ” பூகம்பம்” திரைப்படத்தின்…
Read Moreஹரா’ படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார்
வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான பாத்திரங்களையும் படைத்து அவற்றில் எதிர்பாராத நடிகர்களை நடிக்க வைப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி, ‘தாதா 87’ திரைப்படத்தில் சாருஹாசனையும், ‘பவுடர்’ படத்தில் நிகில் முருகனையும், ‘ஹரா’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மோகனையும் நடிக்க வைத்தார். தற்போது இன்னுமொரு முற்றிலும் மாறுபட்ட முயற்சியாக ‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் 80களில் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் விஜய்ஶ்ரீ ஜி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஒரு பரபரப்பான கதையை பின்னணியாக கொண்டதாகும். மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டத்தோ கணேஷ் மற்றும் விஷால் ஆகியோர் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கின்றனர். சுரேஷை தொடர்ந்து முக்கிய வேடத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று ரசிகர்களால் அன்புடன்…
Read Moreமக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உருகுது உருகுது’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.…
Read Moreடெஸ்ட் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இது தானா? வெளியான தகவல்!
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகம்: தான் விரும்பும் வாழ்க்கையை அடைய குமுதா சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்! சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது. YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. இதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை ஒரு சான்றாகும். தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா…
Read Moreநடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சிறந்த கதைகளை வழங்கி வருகிறது. ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்யமான டிரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான தசரா திருவிழாவின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இது அமைந்திருக்கிறது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆக்ஷன், எமோஷன், உண்மை, அதிகாரம் மற்றும் பழிவாங்கல் என ’OKJK’ வெப்சீரிஸின் உலகம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின்…
Read Moreகாதல் என்பது பொதுவுடமை படம் TentKotta OTT யில் வெளியானது.!
BOFTA G. தனஞ்ஜெயன் வெளியீட்டில் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக வரும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசுகிற படம் . ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பைபெற்றிருந்தது. ‘நல்ல திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்ப்பு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு ‘என்று இத்திரைப்படத்தை இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் G தனஜ்செயன் வெளியிட்டிருந்தார். சிறந்த படம் என்று பார்வையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. படம் இன்று TENTKOTTA OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
Read Moreஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி. மார்ச்-21ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். அறிமுக எழுத்தாளர் ஜெகன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர், வெண்பா மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM ஆகியோர் நடித்துள்ளார்கள். வரும் மார்ச்-21ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளியாக தயாராக இருக்கிறது. முன்னதாக ‘அஸ்திரம்’ படத்தின் சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி சமீபத்தில் நடைபெற்றது. படம் பார்த்த ஊடகம் & பத்திரிகையாளர்கள் அனைவரும் ‘அஸ்திரம்’ திரைப்படத்தை வெகுவாக பாராட்டி பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளார்கள். ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த…
Read More“எம்புரான்” திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க,…
Read More‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக அறிமுகம்!!
ஒருவரின் அறிவுதான் விலைமதிப்பில்லாதது. இதை சரவணனை விட வேறு யாரும் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள். திறமையான, விடாமுயற்சியுடன் போராடும் விஞ்ஞானியான அவரது முன்னேற்றத்திற்கு ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ’டெஸ்ட்’ திரைப்படத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ளார். மேதைமைக்கும் விரக்திக்கும் இடையிலான கோட்டில் பயணிக்கும் நபரை இந்த கதாபாத்திரத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஆர். மாதவனின் அன்பு நண்பரும், நடிகருமான சூர்யா, ’டெஸ்ட்’ படத்தில் மாதவனின் சரவணன் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். சரவணன் தனது கனவை நனவாக்கப் போராடும்போது அந்த லட்சியம் நிறைவேற பல தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த பயணம் விடாமுயற்சி, அறிவு மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் சிலிர்ப்பூட்டும் கதையாக அமையும். நடிகர் ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “சரவணன்…
Read More