கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். அதில் ஒரு குடிசையில் வசிக்கும் தேவதர்ஷினி, பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார். பேச்சுத் திறனற்ற அந்த குழந்தையை யாரிடமும் நெருங்க விடாமல் மிக மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராமத்திற்கு சாலை பணிக்கு வந்ததாக கூறும் திலீஷ் போத்தன், வந்த வேலையை விட்டுவிட்டு தேவதர்ஷினி, அவரிடம் இருக்கும் பெண் குழந்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார். திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது அந்த ஏரியா மக்களால் ஆசான் என்று அழைக்கப்படும் முதியவருக்கு சந்தேகம். ஊருக்குள் வந்திருக்கும் புதிய நபர் பற்றி விசாரிக்க தொடங்குகிறார். அப்போது தங்கள் மலை கிராமத்துக்கு வந்திருக்கும் அந்த புதியவர் சாலையை செப்பனிட வரவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே அந்த புதிய மனிதனின் பார்வையில்…
Read MoreCategory: விமர்சனம்
டென் அவர்ஸ் – திரை விமர்சனம்
கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் தர… புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி ராஜுக்கு அந்தப் பெண் திட்டம் போட்டு கடத்தப் பட்டது தெரிய வர… சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த சிபி மறுநாள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த கடத்தல் கேஸை கையில் எடுத்தவருக்கு இடையில் இருப்பது பத்து மணி நேரம் மட்டுமே. அந்த 10 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வியூகம் அமைத்தவருக்கு கூடுதலாக இன்னொரு கேசும் சவாலாக அமைகிறது. சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக போனில் தகவல் வர, அந்த பெண்ணையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது, புகார்…
Read More