1960-களில் தூத்துக்குடி நகரில் தாதாவாக வலம் வந்த ஜோஜு ஜார்ஜ், கடத்தல் தொழிலிலும் தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவர். இவரது வேலைக்காரர் ஒருவர் எதிரிகளால் கொல்லப்பட, தப்பிப் பிழைக்கும் அவரது மூன்று வயது மகனை ( சூர்யா ) தாதாவின் மனைவி வளர்க்கப் பிரியப்படுகிறார். அரைகுறை மனதுடன் அதற்கு சம்மதம் தருகிறார் தாதா. இப்படி வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்படும் சூர்யா, வளர்ப்பு தந்தையின் கடத்தல் தொழிலையும் கற்றுக் கொள்கிறார்.இதற்கிடையே சிறு வயது முதலே அவ்வப்போது தன்னுடன் நட்பு பாராட்டி வந்த பூஜா ஹெக்டே மீது சூர்யாவுக்கு காதல் வருகிறது. ஆனால் காதலி யோ , பழைய வாழ்க்கையை அடியோடு தலை முழுகி விட்டு வந்தால் மட்டுமே திருமணம் என்கிறார். சூர்யா அதற்கு சம்மதம் சொல்ல, இப்போது அந்த காதல் மணமேடை வரை வந்திருக்கிறது. இதற்கிடையே இப்படி எல்லாம்…
Read MoreCategory: விமர்சனம்
டூரிஸ்ட் பேமிலி – திரை விமர்சனம்
இலங்கை வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ஏற்கனவே அங்கே கடன் சுமை, அதோடு உச்சபட்ச விலைவாசி இரண்டும் அந்தக் குடும்பத்தை வாட்டி எடுத்த நிலையில் தமிழகத்துக்கு பிழைக்க வருகிறது அந்த குடும்பம். அவர்கள் வந்த தினத்தில் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ… இலங்கையில் இருந்து வந்த தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகிறது காவல் துறை. அதனால் அவர்களை தீவிரமாக தேடத் தொடங்க… அந்த இலங்கை குடும்பம் காவல்துறை கண்ணில் சிக்கியதா? தப்பியதா? என்பது படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ். இலங்கை குடும்பத்தின் தந்தையாக சசிகுமார், தாயாக சிம்ரன், மகன்களாக மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ். இந்தப் பொருத்தமான பாத்திரத் தேர்வே தொடக்கம் முதலே படத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது. அப்பா கேரக்டரில் ரொம்பவே அடக்கி வாசித்துள்ளார் சசிகுமார். அவருக்கும் மூத்த மகன் மிதுனுக்குமான…
Read Moreசுமோ – திரை விமர்சனம
சிவா அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் அந்த விளையாட்டில் தன்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர் சென்னை கடற்கரையோரம் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே அலைச்சறுக்கு விளையாட்டையும் தொடர்கிறார். இப்படி ஒரு நாள் அலைச்சறுக்கு விளையாட்டுக்காக கடற்கரை வருபவர் அங்கே கரையோரம் ஓங்குதாங்கான ஒருவர் மயக்க நிலையில் இருப்பதை காண்கிறார். அவரைக் கண் விழிக்க வைத்து தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். பழசு எல்லாம் மறந்து போன அந்த நபரும் தற்போது குழந்தையின் மனநிலையில் இருக்கிறார். இந்நிலையில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டவர் ஜப்பானில் உள்ள பிரபல சுமோ மல்யுத்த வீரர் என்பது தெரிய வர, சிவா அவரை அழைத்துக் கொண்டு ஜப்பான் போகிறார். அங்கே போன பிறகுதான் அந்த சுமோ மல்யுத்த வீரர் அவரது எதிரிகளால் நாடு கடத்தப்பட்டவர் என்பது தெரிய வர… இதற்கிடையே மருத்துவ சிகிச்சை…
Read Moreவல்லமை – திரை விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்கள் போதிக்கும் புதிய பாடம். மகளுக்கு நேர்ந்த பாதிப்புக்கு தந்தை எடுக்கும் புதிய அவதாரம். கிராமத்தில் மனைவி, மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விவசாயி பிரேம்ஜியை மனைவியின் திடீர் மரணம் மொத்தமாக புரட்டிப்போடுகிறது. இதன் பிறகு அந்த ஊரில் இருக்க மனதின்றி மகளுடன் சென்னை வருகிறார். இப்போது அவரது ஒரே கனவு, மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பது தான். சென்னையில் கிடைத்த புதிய ஆட்டோ நண்பர் உதவியுடன் வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளிப் படிப்பு என்று அனைத்தும் அமைகிறது. இதற்கிடையே உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து தந்தையிடம் ஒரு நாள் மகள் பகிர்ந்து கொள்ள, மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக தந்தையும் மகளும் மருத்துவரை சந்திக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் சிறுமி தனக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்…
Read Moreகேங்கர்ஸ் – திரை விமர்சனம்
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சுந்தர் சி-, வடிவேலு கூட்டணி காமெடிக் கொடி பிடித்திருக்கும் படம். அரசுப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போக, அந்தப் பள்ளி ஆசிரியை கேத்ரின் தெரேசா கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார் புகாரின் பேரில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை ஆசிரியர் என்ற போர்வையில் அந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது. இதே சமயத்தில் சுந்தர் சி. அந்த பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வருகிறார். உள்ளூர் அரசியல்வாதியான மைம் கோபி இந்தப் பள்ளியின் தாளாளர் என்ற முறையில் தனது தம்பி அருள்தாசுடன் சேர்ந்து பள்ளியை சமூக விரோத செயலுக்காக பயன்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் சுந்தர். சி, அடையாளம் தெரியாதபடி தன்னை மறைத்து வேஷம் போட்டுக் கொண்டு அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். இதைப்…
Read Moreசச்சின் – திரை விமர்சனம்
கண்டதும் காதல் என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத நாயகி ஜெனிலியா. அவ்வப்போது அவரை அன்பால் ஆகர்ஷித்து காதலை அவர் வாயாலே சொல்ல வைக்க முயல்பவர் நாயகன் விஜய்.கல்லூரியில் படிக்கும் இந்த இருவருக்குள்ளும் காதல் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருக்க… கடைசியோ கடைசியாக இன்னும் ஒரு மாதத்துக்குள் நீயாக என்னிடம் காதல் சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் அதன் பின் நீ யாரோ நான் யாரோ… என்கிறார் விஜய். 30 நாட்களில் ஜெனிலியா விஜய் யிடம் காதலை சொன்னாரா என்பது சொட்ட சொட்ட இதயம் நனைக்கும் காதல் கதை.2005 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய இப்படத்தில் விஜய்யை ஸ்டைலிஷாக ரசிக்க முடிகிறது. படம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் துறுதுறு விஜய் ரொம்பவே ரசிக்க வைக்கிறார். ஜெனிலியா மட்டுமென்ன… அவர் சிரித்தாலும் அழகு கோபத்தில் உம் மென்றிருந்தாலும்…
Read Moreஅம்..ஆ..! – திரை விமர்சனம்
கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். அதில் ஒரு குடிசையில் வசிக்கும் தேவதர்ஷினி, பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார். பேச்சுத் திறனற்ற அந்த குழந்தையை யாரிடமும் நெருங்க விடாமல் மிக மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராமத்திற்கு சாலை பணிக்கு வந்ததாக கூறும் திலீஷ் போத்தன், வந்த வேலையை விட்டுவிட்டு தேவதர்ஷினி, அவரிடம் இருக்கும் பெண் குழந்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார். திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது அந்த ஏரியா மக்களால் ஆசான் என்று அழைக்கப்படும் முதியவருக்கு சந்தேகம். ஊருக்குள் வந்திருக்கும் புதிய நபர் பற்றி விசாரிக்க தொடங்குகிறார். அப்போது தங்கள் மலை கிராமத்துக்கு வந்திருக்கும் அந்த புதியவர் சாலையை செப்பனிட வரவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே அந்த புதிய மனிதனின் பார்வையில்…
Read Moreடென் அவர்ஸ் – திரை விமர்சனம்
கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் தர… புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி ராஜுக்கு அந்தப் பெண் திட்டம் போட்டு கடத்தப் பட்டது தெரிய வர… சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த சிபி மறுநாள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த கடத்தல் கேஸை கையில் எடுத்தவருக்கு இடையில் இருப்பது பத்து மணி நேரம் மட்டுமே. அந்த 10 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வியூகம் அமைத்தவருக்கு கூடுதலாக இன்னொரு கேசும் சவாலாக அமைகிறது. சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக போனில் தகவல் வர, அந்த பெண்ணையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது, புகார்…
Read Moreநாங்கள் – திரை விமர்சனம்
சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கும் படம். 1998 இல் நடக்கிற கதை. ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வரும் ராஜ்குமாருக்கு மூன்று மகன்கள். மனைவியை பிரிந்து வாழும் ராஜ்குமாருக்கு மகன்கள் தான் எல்லாமே. தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து வைப்பதில் தொடங்கி தந்தையின் ஷுவை பாலிஷ் போட்டு வைப்பது வரை எல்லாமே இந்த நண்டு சிண்டுகளான மூவர் தான். இந்த மூன்று சிறுவர்களும் அந்த தந்தையிடம் நிம்மதியாக இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. சிறு தவறு செய்தாலும் போட்டு புரட்டி எடுத்து விடுவார் தந்தை. இதனால் மூன்று பிள்ளைகளும் அந்த வீட்டில் ஒருவித நடுக்கத்துடனே இருந்து வருகிறார்கள். இந்த குடும்பத்தில் அடுத்த கட்ட சோதனையாக ராஜ்குமார் நடத்தி வரும் பள்ளி நஷ்டத்தில் இயங்குகிறது. ஒரு கட்டத்தில் அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத…
Read Moreகுட் பேட் அக்லி – திரை விமர்சனம்
மும்பையையே ஆட்டி வைத்த டான் ஏ.கே. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் நேர்கிறது. அழகான பெண்ணுடனான காதல் திருமணத்தில் முடிகிறது. மகன் பிறக்கிறான். இப்போது மனைவியின் ஒரே வேண்டுகோள், டான் வாழ்க்கையை தூக்கி போட்டுவிட்டு சரணடையுங்கள். தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும்போது அமைதியான வாழ்க்கை வாழலாம் என்பது தான். டானுக்கும் அது சரி யெனப்பட, பிறந்த குழந்தையின் முன்பு அவனது 18-வது வயதில் சந்திப்பதாக உறுதி கூறிய பிறகு போலீசில் சரணடைகிறார். 18 வருட தண்டனை முடிந்து வீடு வரும்போது பழைய எதிரிகள் செய்த சதியால் போதை பொருள் உபயோகித்த குற்றத்துக்காக இப்போது மகன் ஜெயிலில். மகன் குற்றவாளி அல்ல என்று நிரூபித்து தண்டனையிலிருந்து விடுபட வைக்க வேண்டும். இந்த சதிக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை ‘களை’ எடுக்க வேண்டும். இதற்காக மீண்டும்…
Read More