கார்த்திக்-மோனிகா 2கே இளைஞர்கள். சிறு வயது முதலே நண்பர்கள். இருவரும் இணைந்து ப்ரி வெட்டிங் போட்டோ சூட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களிடையே நீடிக்கும் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறும் என்று நண்பர்கள் வட்டாரம் எதிர்பார்த்து இருக்க ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக இவர்கள் நட்பிலேயே நிலைத்து நிற்கிறார்கள். இந்நிலையில் சக கல்லூரித் தோழி பவித்ரா கார்த்திக் மேல் காதலாகி தன் விருப்பம் தெரிவிக்க, அவனோ மோனிகா ஓகே சொன்னால் உன் காதலை ஏற்பதில் தடை ஏதும் இல்லை என்கிறான். ஒரு சில கண்டிஷன்களோடு மோனிகாவும் கார்த்திக்- பவித்ரா காதலுக்கு ஓகே சொல்ல….இதன் பிறகு புதிய காதல் ஜோடி கேரளாவுக்கு பைக்கில் டூர் செல்ல, பாதி வழியில் நடந்த விபத்தில் பவித்ரா உயிரிழக்கிறாள். இந்த காலகட்டத்தில் கார்த்திக்,- மோனிகாவின் நட்பு அவர்களின் பெற்றோர்களையே இது…
Read MoreCategory: விமர்சனம்
தினசரி – திரை விமர்சனம்
ஐடி துறையில் கை நிறைய சம்பாதிக்கும் ஸ்ரீகாந்த்துக்கு தன் வருங்கால மனைவி தன்னைவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் அவருக்கு அமைந்த மனைவியோ திருமணத்துக்கு பின் வேலைக்கு போவதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார். பெண் பார்க்க போகும் ஸ்ரீகாந்தின் அம்மா மணப்பெண்ணின் இந்த கண்டிஷனை மகனிடம் மறைத்து விட… திருமணம் நடக்கிறது. அதன் பிறகு ஸ்ரீகாந்த் உண்மை தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை உள்வாங்கி கொள்ளும் ஸ்ரீகாந்த் தனியார் எதிர்நிறுவனத்தில் கடன் வாங்கி அதிக முதலீடுகளை செய்கிறார். இப்படி ஒரு கோடி வரை அவர் பணம் கட்டிய நிலையில்தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்து விட… இதனால் ஒரு கட்டத்தில் பெற்றோருக்கே அன்னியமாகி போகிறார் ஸ்ரீகாந்த். கடலில் இருந்து மேய்டாரா கடலில் இருந்து மேட்டரா அவரை ஒதுக்கி வைத்த குடும்பம் மீண்டும் அவரை அரவணைத்துக்…
Read Moreஃபயர் – திரை விமர்சனம்
நல்லவன் போல் நடித்து பெண்களை வேட்டையாடும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் மறுபக்கமே கதை. ஏமாந்த பெண்களின் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் அந்த பிசியோதெரபிஸ்ட் ஒருநாள் திடீரென காணாமல் போகிறார். மகனை காணவில்லை என்று மருத்துவரின் பெற்றோர் போலீசில் புகார் தர, காமுக வேட்டையில் கைதேர்ந்த அந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் என்னவானார் என்பதை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதைக்காக ஏ சான்றிதழ் வழங்கி இருந்தாலும் கொண்ட கருத்துக்காக நிஜமாகவே இது ‘ஏ ஒன்’ படமாகவும் ஆகி இருக்கிறது நாகர்கோவிலை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் காசி தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு உதவுவது போல் நடித்து படுக்கையில்வீழ்த்துவதோடு அதை வீடியோவாகவும் எடுத்து கூசாமல் அவர்களிடமிருந்து லட்சங்களை கறக்கிறான். போலீஸ் விசாரணையில் இது தெரிய வரும்போது அவனால் பாதிக்கப்பட்ட யாரேனும் அவன் கதையை முடித்து…
Read Moreதண்டேல் – திரை விமர்சனம்
கடலளவு காதல் கொண்ட காதல் ஜோடியில் காதலன் மீன் பிடிக்கப் போய் அந்நிய எல்லையில் மாட்டிக் கொண்டால்… அந்த ஊரின் பாரம்பரிய தொழிலே மீன் பிடித்தல் தான். அதன்படி நாயகனும் தந்தை வழியில் மீன் பிடி தொழிலை தொடர்கிறான். வருஷத்தில் ஒன்பது மாதம் கடல் மூன்று மாதம் வீடு என்றிருக்கும் அவன் வாழ்க்கையின் ஒரே சந்தோஷம் அவனது உயிர்க் காதலி தான். தரையில் இருக்கும் மூன்று மாத காலமும் மீதி ஒன்பது மாதத்துக்கான காதலையும் சேர்த்து கொட்டுகிறார்கள் இந்த காதலர்கள். இதில் சோதனையாக நாயகியின் உறவுக்காரர் மீன் பிடிக்கப் போய் கடும் புயலில் படகு கவிழ்ந்து உயிரை விட…இதனால் பயந்து போகும் காதலி இனி மீன் பிடிக்க போக வேண்டாம் என்று காதலனுக்கு அன்பு கட்டளை இடுகிறாள். அப்போதைக்கு சரி என்று தலையாட்டி விட்டு காதலியிடம் சொல்லாமலே…
Read Moreவிடா முயற்சி – திரை விமர்சனம்
பயணத்தில் மனைவியை தொலைத்த கணவன் அவளைத் தேடும் அபாய படலமே இந்த விடாமுயற்சி.அதில் நாயகனுக்கு வெற்றி கிடைத்ததா என்பதை பரபரப்புடன் காட்சிப் படுத்தியிருக்கும் படம். அஜர்பைஜான் நாட்டில் காதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் அஜித். இனிய இல்லறத்தில் தாய்மை அடைகிறார் திரிஷா. ஆனால் எதிர்பாராத விபத்தொன்றில் குழந்தை வயிற்றுக்குள்ளே இறந்து விட, திரிஷா மட்டும் உயிர் பிழைக்கிறார். ஆனால் இந்த விபத்து அவருக்கு மறுபடியும் பிள்ளைப் பேற்றுக்கான வாய்ப்பை அடியோடு தகர்த்து விட, அப்போது முதலே தம்பதிகளுக்குள் சில்லறை பேதங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்குகிறது. 12 வருடத்தில் அதுவே பூதாகரமாக வளர்ந்து திரிஷா விவாகரத்து கேட்பதில் போய் நிற்கிறது அதுவரை ஊரில் உள்ள பெற்றோருடன் இருந்து கொள்கிறேன் என்றும் சொல்கிறார். மனைவியின் முடிவு அதிர்ச்சி தந்தாலும் அதற்கு மறுப்பு சொல்லாமல் காரில் திரிஷாவின் பெற்றோர் இருக்கும் ஊருக்கு அழைத்துச்…
Read Moreராஜ பீமா – திரை விமர்சனம்
சிறுவயதில் அம்மாவை இழந்த ராஜா மனதளவில் பாதிக்கப்படுகிறார். மருத்துவரும் தாயின் அன்புக்கு ஈடாக இன்னொரு அன்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவான் என்று நம்பிக்கை தர…. இந்த சூழலில் காட்டில் இருந்து ஊருக்குள் வந்த ஒரு குட்டி யானை ஊரையே நடுநடுங்க வைத்த நேரத்தில் அந்த யானையை தனது அன்பான நடவடிக்கைகளால் ராஜா இயல்புக்கு கொண்டு வருகிறான். இப்போது மகன் ராஜா முகத்தில் மீண்டும் மலர்ச்சியை பார்த்த அவனது அப்பா யானைக்கு பீமா என பெயரிட்டு வனத்துறை அனுமதியுடன் வீட்டிலேயே வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா வளர்க்கும் யானை பீமாவை அரசு சார்பில் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்கிறார்கள் வனத்துறை ஊழியர்கள். ராஜா முகாமுக்கு சென்று பார்க்கும் போது பீமா அங்கில்லை. வேறு யானையை காட்டி இதுதான் அவரது யானை என்று…
Read More‘ரிங் ரிங்’ – திரை விமர்சனம்
விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா படத்தின் நட்சத்திரங்கள். எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல்.ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே , கலை இயக்கம் தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன்,தயாரிப்பு ஜெகன் நாராயணன். இனி கதைக்கு வருவோம். மனிதர்கள் விசித்திரமானவர்கள் .ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியங்கள் உண்டு. ஒவ்வொருவர் மனதின் ரகசியமான உள்ளறைகளில் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.காணப்படுகிற மனம் வேறு, அறியப்படுகிற மனம் வேறு என்பது உள்ளே நுழைந்து பார்த்தால் தான் தெரியும். இந்த வேறுபாடு பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி ஆகியோரிடமும் உண்டு.ஒருவரைப் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.இந்தக் கருவை மையமாக்கி ‘ரிங் ரிங்’ திரைப்படத்தின் கதை உருவாகியுள்ளது. நண்பர்கள் நால்வர், அவர்களுக்கு…
Read Moreமிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் – திரை விமர்சனம்
‘லவ் யூ’ சொல்வதற்கும் ‘ஐ லவ் யூ’ சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல வந்திருக்கும் படம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஹரி பாஸ்கர் சக மாணவி லாஸ்லியா வை ஒருதலையாக விரும்புகிறார். லாஸ்லியாவோ, உன் மேல் எனக்கு காதலே இல்லை என்று தனது சொல்லி விட…லாஸ்லியா பணக்கார வீட்டு பெண்.ஹரி பாஸ்கரோ மிடில் கிளாஸ் ஃபேமிலி. போக்குவரத்துகழகத்தில் வேலை பார்க்கும் அப்பாவின் சொற்ப வருமானமே நாயகனின் குடும்பத்தை தாங்குகிறது.நாலு வருடம் கடந்த நிலையிலும் நாயகன் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.இந்நிலையில் தன் கவனக்குறைவால் குடும்பத்துக்கே அவமானம் தரக்கூடிய ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்ட நாயகன், பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம் என்ற சூழலில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு உடன்படுகிறான். ஆனால் அவன் கூட்டி பெருக்க வேண்டிய பங்களா…
Read Moreகுழந்தைகள் முன்னேற்ற கழகம் – திரை விமர்சனம்
அடுத்த தலைமுறை அரசியலை பேசும் படம். அதை முடிந்தவரை கலகலப்பாக சொல்ல முயன்று இருக்கிறார்கள். அரசியல்வாதி யோகி பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் பிறந்த நிலையில் வீட்டு வேலைக்கு வந்த வட மாநில பணிப்பெண் மூலமும் ஒரு மகனை பெற்றுக் கொள்கிறார். வட மாநில பெண்ணுக்கு பிறந்த மகன் சிறுவயதாக இருக்கும் போதே தாயையும் மகனையும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். நாட்களின் வேகமான நகர்வில் ஒரே பள்ளியில் மகன்கள் இருவரும் படிக்கிறார்கள். இருவருமே அரசியல் கனவுடன் வளர்கிறார்கள். இருவரின் லட்சியமுமே எதிர்காலத்தில் அரசியலில் உச்சம் தொட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே. இருவரின் கனவும் நனவானதா என்பது கிளைமாக்ஸ். குற்ற உணர்வு இல்லாத இந்த அரசியல்வாதி கேரக்டரில் காமெடி, கலகலப்பு என ரசிகனை சிரிக்க வைக்கும் வேலையை செவ்வனே செய்கிறார், யோகி பாபு.…
Read Moreராமாயணா: தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா – திரை விமர்சனம்
அயோத்தியில் அரசராக பதவி ஏற்க இருந்த ராமர் மந்தாரையின் சூழ்ச்சியால் 14 வருடம் காட்டுக்கு போக நேரிடுகிறது. மனைவி சீதை, தம்பி லட்சுமணனும் உடன் போகிறார்கள். காட்டில் லட்சுமணனை பார்த்த மாத்திரத்தில் ராவணனின் தங்கை சூர்ப்ப னகைக்கு காதல் பிறக்க, அதை சூர்ப்பனகை லட்சுமணனிடமே சொல்லும் போது லட்சுமணனின் வாள் சூர்ப்பனகை மூக்கை பதம் பார்த்து விடுகிறது. மூக்கை இழந்த சூர்ப்பனகை தனது புகாரை தனது அண்ணனும் இலங்கை வேந்தனுமான ராவணனிடம் கொண்டு போக… அதற்கு பழிவாங்கும் நோக்கில் ராவணன் சீதையை சிறை எடுக்க… சுக்ரீவன் தலைமையிலான வானர படை உதவியுடன் ராவணனை போரில் வென்று சீதையை மீட்ட கதை. அதை அனிமேஷனில் திகட்ட திகட்ட தந்து இருக்கிறார்கள். படத்தின் சிறப்பம்சம் நேர்த்தியான தமிழ் டப்பிங். குரல் கொடுத்தவர்கள் ராமாயண காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.கும்பகர்ணனின்…
Read More