ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ்,…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை, ஊடக மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,* மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன்…
Read Moreநடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய ‘SherifMoves.com’ – பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நடனக் கல்வி வழங்கும் புதிய தளம்
சென்னை, 16 நவம்பர் 2025: Sherif Dance Company (SDC) நிறுவனர் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’–ஐ நேற்று அறிமுகப்படுத்தினார். தமிழ் திரைப்படத் துறையிலும், பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியும் பெயர் பெற்றவர் ஷெரிப் மாஸ்டர். கடந்த இருபது ஆண்டுகளாக இளம் நடன திறமைகளை கண்டுபிடித்து, வழிகாட்டி, மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். பொருளாதார காரணங்களால் பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட நடனக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், குழந்தைகளுக்கு வருடந்தோறும் இலவச நடனப் பயிற்சி வழங்கப்படும். எதிர்கால நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள்…
Read Moreஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும் எம். எஸ். கே. ஆனந்த் ஆகியோரின் இணை தயாரிப்பில் பிளாக் ஷீப் ஃபைண்ட்ஸ் ( Black Sheep Finds) நிறுவனத்தின் படைப்பு பங்களிப்புடன் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமாக அமைந்த ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்…
Read Moreஅனந்தா படத்தின் இசை வெளியீட்டு விழா!
கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். பாடலாசிரியர் பா. விஜய் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அனந்தா என்பது ஒரு திரைப்படைப்பு இல்லை ஒரு இறை படைப்பு. என்னுடைய திரையுலக பயணத்தில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளேன், அதில் இறைவனைப் பற்றி அதிகம் எழுதி உள்ளேன். ஆனால் நேரடியாக இறைவனுக்கே எழுதிய பாடல் என்றால் அது இந்த படத்தில் தான். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு…
Read Moreசெலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு பிரபலங்கள் பங்கேற்பு
திறமைவாய்ந்த இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் ‘புர்கா’ மற்றும் ‘லைன்மேன்’ உள்ளிட்ட பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து ‘கிணறு’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கியுள்ள ‘கிணறு’ குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி ஆறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு திரைப்பிரபலங்கள் பங்கேற்று படத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர். பெகாசஸ் திரைப்பட விழா 2024, அக்கலேட் உலகளாவிய திரைப்படப் போட்டி, இண்டிஃபெஸ்ட் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட விழாக்களில் சிறந்த படம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்கான விருதுகளை பெற்ற ‘கிணறு’, சென்னை சர்வதேச திரைப்பட விழா 2024ல் உலக…
Read More“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”. சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது.., இது எங்கள் குடும்ப விழா. எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷன் ஒரு ஹீரோவாக வேண்டும் என அவர் அதிகம் ஆசைப்பட்டார். அவரது…
Read Moreடீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.
கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா ‘ படங்கள் பெரிய வெற்றி பெற்றுக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘கரிகாடன்’ படத்தின் டீசரும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசர் பார்வையாளர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கவனிக்க வைக்கிறது. மாறுபட்ட வகைமையில் ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக ‘கரிகாடன் ‘ உருவாகியுள்ளது. இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய்…
Read More‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’…
Read More“யெல்லோ” ( Yellow) திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow). பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பேசியதாவது.., இது என்னுடைய முதல் படம். இந்தப் படம் இங்கு வரக்காரணம் தயாரிப்பாளர்பிரசாந்த் தான். தயாரிப்பாளராக முழு ஆதரவாக இருந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை 8 ஆண்டுகளாகத் தெரியும் அவர் முதன் முதலில் நடித்த குறும்படத்திற்கு நான் தான்…
Read More
