படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை தொழில்நுட்பத்துடன் கலந்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து வல்லுநர்கள் விளக்கம‌ளித்தனர்

ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) அன்று நடத்தின. கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் இது நடைபெற்றது. திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் கலந்து திரைப்படத் துறையில் புதிய‌ உயரங்களை எட்டுவது குறித்து விளக்கம‌ளித்தனர். இந்நிகழ்வில், தொழில்நுட்பம் படைப்பாற்றலுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து சிங்கப்பூரை சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர். விவேகா காளிதாசன் உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, மற்றும்…

Read More

“மூன்வாக்”  படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடனும் உள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, மறக்க முடியாத இசை இரவாக மாறியது. அந்த மாலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது. இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது…

Read More

யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’, மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது

மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜாக்கி’. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் உருவாகியுள்ளது. ‘ஜாக்கி’ திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான ‘மட்டி’ திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். ‘ஜாக்கி’ திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (ஜனவரி 3) மாலை நடைபெற்ற…

Read More

”பராசக்தி” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் (சாய் ராம் கல்லூரி) கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்…, *நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது..* பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்த படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.…

Read More

‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!

‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !! “டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ் ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்…

Read More

விஜயசாந்திக்கு பின் நான் தான் முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன் – சிந்தியா லூர்டே

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் சிந்தியா லூர்டே பேசும்போது, “வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு ‘அனலி’ என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும். 90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதன் முறையாக ஒரு முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நான்…

Read More

குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

இனிகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’. இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இனிகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது, “இந்தப் படம் எங்களுக்கு பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். பிற குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய விஷயங்கள் செய்து வருகிறேன். இயக்குநர் நாராயணன் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என 20 வித்தியாசமான கதாபாத்திரங்கள் எழுதியிருந்தார். அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்தான் ஸ்ரீனிகா. எந்தவிதமான சிக்கலும் இல்லாத எளிமையான கதை இது. 2 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்லும்போது என்னென்ன கற்றுக் கொள்ள போகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய ஜாலியான விஷயங்கள் இதில் உண்டு.…

Read More

“மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு

SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் & ஷாஜித் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது, “படத்தின் டைட்டிலைப் பார்த்தபோது ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தால் ட்ரைலரை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இவர்கள் செய்திருக்கும் செலவு நன்றாகவே தெரிகிறது. அதுவே இந்த படம் ஒரு கமர்சியல் படமாக வரும் என்கிற நம்பிக்கையை…

Read More

தமிழ்க்குமரன் அணியின்  வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியானது

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் திரு.ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு திரு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி.கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு திரு.என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு திருமதி.சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர். மூத்த தயாரிப்பாளர்களான திரு.அழகன் தமிழ்மணி, திரு.சித்ரா லட்சுமணன், திரு.எச்.முரளி, திரு.எம்.கபார், திரு.ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து திரு.சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம், திரு.எஸ்.ஜோதி, திரு.வி.பழனிவேல், திரு.கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் திரு.ஏ.முருகன், திரு.ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், திரு.கே.முருகன், திரு.வி.ஞானவேல், திரு.பிரவின்காந்த், திரு.வி.என்.ரஞ்சித் குமார், திரு.எஸ்.ஜெயசீலன், திரு.ராஜா @ பக்ருதீன் அலி அகமத்,…

Read More

தமிழ்க்குமரன் அணியின் வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியானது

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் திரு.ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு திரு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி.கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு திரு.என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு திருமதி.சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர்.     மூத்த தயாரிப்பாளர்களான திரு.அழகன் தமிழ்மணி, திரு.சித்ரா லட்சுமணன், திரு.எச்.முரளி, திரு.எம்.கபார், திரு.ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து திரு.சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம், திரு.எஸ்.ஜோதி, திரு.வி.பழனிவேல், திரு.கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் திரு.ஏ.முருகன், திரு.ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், திரு.கே.முருகன், திரு.வி.ஞானவேல், திரு.பிரவின்காந்த், திரு.வி.என்.ரஞ்சித் குமார், திரு.எஸ்.ஜெயசீலன், திரு.ராஜா @ பக்ருதீன்…

Read More