தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது. ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு ஆண்டவன் கட்டளை என்ற பெயரை அவர்தான் சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன…
Read MoreCategory: திரைப்படங்கள்
‘சபாநாயகன்” – ஒரு நாஸ்டால்ஜியா ட்ரிப் சென்ற அனுபவத்தைக் கொடுக்கும் – அசோக்செல்வன்
அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். Clear water பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், i Cinemas சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும்…
Read Moreகடற்படை ஆபரேஷனை கதைகளமாக கொண்ட ஆபரேஷன் அரபைமா
முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் கடற்படை அதிகாரியாக ரகுமான் நடித்திருக்கும் படம் ஆபரேஷன் அரபைமா இந்தியநாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், “ஆபரேஷன் அரபைமா”.என்கிறார் இயக்குநர் பிராஷ் தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்பபடத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இயக்குநர் பிராஷ் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன் உண்மையான ஆபரேஷன் போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய உழைத்ததாககூறுகிறார்…
Read More*மார்ச் 12-ல் வெளியாகும் சாரா தேவா – கெவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’..!*
*மார்ச் 12-ல் வெளியாகும் சாரா தேவா – கெவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’..!* *தேனிலவு செல்லும் புதுமண தம்பதிகளின் ஈகோ யுத்தமே ‘பூம் பூம் காளை’..!* *‘காதல் பொய்.. காமம் நிஜம்’ ; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை’..!* ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார். காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும் என்கிறார் இயக்குனர் R.D.குஷால் குமார்.. ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்.. நாயகன்,…
Read More19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.
19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. (19th PUNE INTERNATIONAL FILM FESTIVEL – 2021) 11th TO 18th MARCH மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது, வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக “கட்டில் திரைப்பட உருவாக்கம்” என்ற நூலை வெளியிடுகிறேன். சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு…
Read Moreஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி
ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி. ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் ஆன்வி.மூவியில் வெளியான “புல்லட் பாபா” மற்றும் “ஸ்வீட் பிரியாணி” திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில் ‘கைதி, மாஸ்டர்’ புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ட்விட்டரில் “புல்லட் பாபா” திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்வீட் செய்து தனது பங்களிப்பை அளித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலன்களான நடிகர் விவேக் பிரசன்னா, தீபக் பரமேஷ், இயக்குனர் எழில் நம்பி, ‘ட்ரிப்’ பட தயாரிப்பாளர் பிரவீன்,’சிக்ஸர்’ பட தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன், திரு சி. காமராஜ் (ஐஏஎஸ்), திரு எஸ். கண்ணன் (ஐஏஎஸ்) மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். ‘நக்கீரன்’ கோபால் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இது குறித்து அவர் கூறுகையில்,…
Read Moreஎனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை
எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இத்தனை வருடங்களாக நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எனது இதயப்பூர்வ நன்றி. எனது திரைப்படங்களான மாயா மற்றும் கேம் ஓவரை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மதிப்புமிக்கது. எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் தாம் தான் என்றும், அதர்வா நடிக்கும் படமொன்றை தற்போது இயக்கி வருவதாகவும், கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகள் மூலம் அறிந்தேன். நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, ‘அஷ்வின் மாயா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை (9952116844) கொடுத்ததாகவும்,…
Read Moreசமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’
சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’ “அவள் பெயர் தமிழரசி” பட கதாநாயகியின் “மாயமுகி” டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் படம் ‘மாயமுகி. சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில், ’இன்னொருவன்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நீர்ப்பறவை’, ’வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனோ சித்ரா நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யதேவ், ‘தூத்துக்குடி’ பட புகழ் கார்த்திகா, ஆம்னி, சுவாதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பேண்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில்,…
Read Moreஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும்
ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் Tamil Trailer English Trailer Tamil Press Release. ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய…
Read More*யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படமாக ‘கங்காதேவி.’*
*யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படமாக ‘கங்காதேவி.’* ‘ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்காதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக ‘சூப்பர்’ சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். ‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார். படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால், ”ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா – தேவின்னு இரட்டை வேடம். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி,…
Read More