தோனி பிரதமர் விஜய் முதல்வர் மதுரையில் பரபரப்பு

நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார். நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார். அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு முடிந்த பிறகு தோனியை விஜய் காரவன் வரையிலும் உடன் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார். இந்தச் சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இப்போது எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. விரைவில் இதன் காரணம் தெரிய வரலாம்..! ஆனால் இப்போது இதுவல்ல பிரச்சினை.. இந்தச் சந்திப்பு முடிந்ததும்…

Read More

வதந்தியாகி போன வடிவேலுவின் நேசமணி

சமீபகாலமாக நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்கவில்லை என்றபோதும் அவ்வப்போது படங்கள், வெப்சீரிஸ்களில் அவர் நடிப்பது போன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக டிடெக்டிவ் நேசமணி என்ற படத்தில் வடிவேலு நடிக்க போவதாகவும், அந்த படத்தை சி.வி.குமார் தயாரிப்பதாகவும் சமூகவலைதளத்தில் வடிவேலு போஸ்டருடன் ஒரு செய்தி வைரலானது. இதை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛பொய் செய்தியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா… ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா. என்று பதிவிட்டுள்ளார். ஆக, வடிவேலுவின் புதிய படம் குறித்த இந்த செய்தியும் வதந்தியாகி விட்டது.

Read More