குணச்சித்திர நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று காலை சென்னையில் காலமானார்
இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் 1989ம் ஆண்டு பிரதாப்போத்தன், ஸ்ரீப்ரியா ஜோடி நடித்து G.N.ரங்கராஜன் இயக்கத்தில் வெளியானகரையெல்லாம் செண்பகப் பூபடத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சுமார் 180க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணசித்திரபாத்திரங்களில் நடித்திருக்கிறார்ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மோகன்,அஜீத், விஜய், சரத்குமார் மற்றும் இன்றைய இளம் நடிகர்கள் நடித்த படங்களில் நகைச்சுவை, குணசித்திரபாத்திரங்களில் தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக பதிவு செய்தவர் நடிகர் பாண்டு
சின்னத் தம்பி,திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை,ஏழையின் சிரிப்பில், பணக்காரன், பாட்டுக்கு நான் அடிமை, இதயவாசல், நாளைய தீர்ப்பு, வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, பம்மல் கே.சம்பந்தம், வரலாறு, வில்லு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாண்டு
வயது முதுமையின் காரணமாக நடிப்பதை குறைத்துக்கொண்டு ஓய்வில் இருந்து வந்தார்
இந்நிலையில் கொரானா தொற்று ஏற்பட்டு, பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவரான பாண்டுகேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தார்  பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைவடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியவர் பாண்டு இதுபற்றி முன் ஒருமுறை வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்  எம்.ஜி.ஆர், தி.மு.க-வைவிட்டுப் பிரிஞ்சு, தனிக்கட்சி ஆரம்பிச்சப்போ, அரசியல் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து அடுத்து என்னனு யோசிச்சிக்கிட்டு இருந்தாங்க. நான் அங்கே ஒரு ஓவியனா கட்சியின் கொடியை வடிவமைச்சுக் கொடுத்தேன். அ.தி.மு.க கொடி நான் வடிவமைச்சதுதான். அதுக்கப்புறம் மெட்டல்ல லெட்டரிங் போர்டு வைக்கிறதை முதன்முதலா நான்தான் சென்னையில அறிமுகம் செஞ்சேன்.
நந்தனம் பெரியார் பில்டிங்குல இருக்குற உலோக எழுத்துகள் நான் வடிவமைச்சதுதான். அதன் பிறகு நிறைய ஆர்டர்கள் எனக்குக் கிடைச்சுது. எழுத்துன்னா அது பாண்டுதான்னு நல்ல பேர் வாங்கினேன்என்று சொல்லியிருந்தார்.

Related posts

Leave a Comment