சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்து வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 6 மாவட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. இந்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ள இந்த 8 வழி சாலைக்கு காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட…
Read MoreCategory: தமிழக செய்திகள்
சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை! – சுப்ரீம் கோர்ட்
தமிழகத்தில் எட்டு வருஷங்களுக்கு முன்னால் தலைப்பு செய்தியில் இடம் பிடித்த ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து இன்று காலையில் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலிடம் பணியாற்றியவரின் மகள் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். 2001ல் காணாமல் போனார். அவரது சடலம் கொடைக்கானல் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில், ராஜகோபால், ஜீவஜோதி மீது ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் இருவரையும் பிரிக்க முயன்றுள்ளார். முடியாததால், சாந்தகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனால் ராஜகோபால் தூண்டுதலால் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில், சரவணபவன் ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், பட்டுராஜன்,…
Read More