தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!.   தியேட்டர்களில் 100% மக்களை அனுமதிக்க வேண்டும்! -‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை! தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 28.12.2020 இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட கடிதத்தை வெளியிட்டனர். ‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சமர்ப்பிக்கும் கோரிக்கை விண்ணப்பம்’ என்ற தலைப்பில் விடுக்கப் பட்டிருக்கும் அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் இதோ:- எங்களது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் பொன்னான ஆட்சியில் தமிழ்த் திரையுலகம் நல்ல வளர்ச்சி நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை. தற்போதுள்ள தற்போதுள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக…

Read More

Letter from Director Perrasu to Super Star Rajinikanth.

Letter from Director Perrasu ” Mim Minni Poochighal ” to Super Star Rajinikanth.     சூப்பர் ஸ்டாருக்கு மின்மினிப் பூச்சியின் கடிதம்! நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம்! இன்று அந்த ஆசையை ஆலோசிக்கிறோம்! நீங்கள் ஆன்மீக அரசியல் என்கிறீர்கள்! தமிழ்நாட்டில் அரசியல் அஸ்திவாரமே இறை இழிவுதான்! எளிமையான நேர்மையான அரசியல் காமராஜரோடு சமாதியாகிவிட்டது! நீங்கள் தமிழக விசுவாசத்தில் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்கள் இங்கு தமிழ்மொழி வேஷந்தான் போற்றப்படுகிறது! நீங்கள் யார்மனதும் புண்படாமல் பேசுபவர்! ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் உங்கள் மனசு குத்திக் கிழிக்கிப்படுகிறது! நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தோம்! அரசியலுக்கு வந்து நல்லவர் அசிங்கப்படக்கூடாது என்று இன்று நினைக்கிறோம்! ஒருசில கட்சிக்கு சில கட்சிகளே எதிர்ப்பாய் இருக்கும், இங்கு உங்களுக்கு ஒட்டுமொத்த கட்சிகளும் எதிரியாக கிளம்பிவிட்டது!…

Read More

அதிமுகவின் கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவின் கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!   அதிமுகவின் கொடிகாத்த குமரன்! கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்! எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி…

Read More

135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..!

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்படத் தொடங்கின. சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோரப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடி வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது. தற்போது அனைத்துவித…

Read More

வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம் முகக்கவசங்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது!

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து, தங்களின் தனிப்பட்ட முயற்சியால் ஐந்தாயிரம் முகக்கவசங்களைத் தைத்துள்ளனர். இந்த நற்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பாடத்திட்டம் மூலம் மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், மாணவர்கள் அனைவரும் எடுத்திருக்கும் இந்த முயற்சியால் பெருமிதம் கொள்கிறது. பெற்றோர்களுடன் வீட்டினுள் அடைப்பட்டு கிடக்கும் இந்த வேளையில், ஒரு பொறுப்புள்ள குடிமகனாய் சமூகச் சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும், நாட்டுமக்களுக்கு உதவும் வகையில் முகக்கவசம் தயாரித்திருப்பது பெருமை கொள்ளச் செய்கிறது. இதனைத் தொடர்ந்து, பள்ளித் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் அவர்கள் உத்தரவின்பேரில், பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யலயாவின் முதல்வர் திருமதி. வி.செல்வநாயகி அவர்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடம் ஜுன் 1 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஐந்தாயிரம் முகக்கவசங்களை வழங்கினார். மாணவர்களின்…

Read More

விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்த அல்லி நகர மாணவிக்கு உதவிய விஜய் சேதுபதி!

இந்தியாவின் எதிர்கால விண்வெளி  வீராங்கனையின்  கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்! தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில்  அரசு பள்ளி யில் தமிழ் வழியில் படித்தவர் .தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள  நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5%  /  ‘A ” கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘இஸ்ரோ” ” சார்பாக விண் வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் . தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி “Analog austronaut training centre” என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது.  பயிற்சிச் கட்டணம்,…

Read More

தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றம்?

நாடெங்கும் தண்ணீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்து வருவதாலும், காய்கறிகளின் விலை யேற்றத்தாலும், ஓட்டல் உரிமையாளர்கள், உணவு பண்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஓட்டல்களில் உணவு சமைக்கவும், குடிநீர் வழங்கவும், பாத்திரங்களை கழுவவும், அதிக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.தண்ணீருக்கான செலவு வழக்கத்தை விட 30 சதவீதம் மேல் அதிகரித்துள்ளது. அதனால், பல ஓட்டல்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய சாப்பாடு வகைகள் நிறுத்தப்பட்டன. மேலும், ‘கேன் வாட்டர்’ விலையும், காய்கறிகளின் விலையும், பலமடங்கு உயர்ந்து விட்டன. இதனால், கூடுதல் செலவை சமாளிக்க முடியாததால், பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், வியாபார போட்டியால் வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத, பல ஓட்டல் உரிமையாளர்கள், தண்ணீரால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க…

Read More

மூன்றரை ஆண்டுகளில் 17 லட்சம் பேர் மீது ஹெல்மெட் போடாத வழக்குகள் பதிவு!

சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியதாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் 17.12 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 4,691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் 46 லட்சம் இருசக்கர வாகனங்களாகும். கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் வாகனப் பெருக்கம் 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  நாட்டிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள நகரங்களில் தில்லி முதலிடத்திலும், பெங்களூரு இரண்டாமிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளன.சென்னையில் இப்போது இருவருக்கு ஒன்று என்ற விகிதத்தில் இரு சக்கர வாகனங்களின் பெருக்கம் உள்ளது. புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை…

Read More

பேரளிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுப்பார் – சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிராக, அந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக…

Read More

அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும் தெருக்கூத்து நிகழ்ச்சி..!

சென்னையில்  நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் அரங்கில்  வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து  வருபவர் ‘வெங்காயம் ‘ திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில் தயாரித்து வருகிறார். மேலும் தமிழ் மன்னர்களின்  வரலாற்றையும் சமகால அரசியலையும்  பேசக்கூடிய கலையாகவும்  மேம்படுத்தி தெருக்கூத்து வடிவில் மக்களிடம் சேர்த்து வருகிறார்.. அவ்வகையில் தமிழுக்காக முதல் முதலில் தன்னுயிர் நீத்த நந்திவர்மனின் வரலாற்றை கடந்த ஆண்டு கம்போடியா அங்கோர்வாட் கோவில் அருகே தெருக்கூத்து வடிவில் நடத்தி இருந்தார்.…

Read More