திருமணத்திற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்.

திருமணத்திற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்.     வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஐ.டி. விங் தலைவர் ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய கௌரவ தலைவர் திரு ராஜ் சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய தலைவர் திரு. பரமு, அகில இந்திய செயலாளர் திரு வீரமணி, மாநில அமைப்பாளர் திரு. சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்.ஏ.ராஜ் மற்றும் சூர்யா நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More

இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதை திரைப்படமானது

இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதை திரைப்படமானது இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதை திரைப்படமானது நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ளது இபிகோ 306 திரைப்படம். இப்படத்தை கதை எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் சாய். படத்தை சாய் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிவக்குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் எம்எக்ஸ் ப்ளேயர் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 22ல் வெளியாகிறது. படத்தில் தாரா பழனிவேல், சீனு மோகன் மற்றும் டாக்டர் சாய் நடித்துள்ளனர். படத்திற்கு சூரிய பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு செல்லப்பா. எடிட்டிங் ஸ்ரீ ராஜா. ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் நித்ய ஸ்ரீ, பிரபல பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ்…

Read More

* Kurudhi Kalam *  trailer release in MX Player

* Kurudhi Kalam *  trailer release in MX Player.   MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான  சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்த தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல்  ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது. மும்பை: 21 ஜனவரி 2021- “ உன்னால் உன் விதியை தேர்ந்தெடுக்க முடியும் , ஆனால் உன் எதிரிகளை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியாது. “ இது இரண்டு இளைஞர்களின் கதை, வாழ்வின் தொடக்கத்தில் சரியான பாதையில் ஒன்றாக ஆரம்பித்த அவர்கள், இறுதியில் விதிக்கும், கடமைக்குமான இரத்தக்களரியான…

Read More

பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின்.

பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின்.     உலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பெற்று வரும் பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ஆரி அர்ஜுனன் ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதிப் கதாநாயகியாகவும் நடிக்கும் இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் த்ரில்லராக புதிய படம் உருவாகி , சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது. பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து வந்த ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி முதன்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை…

Read More

மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து

மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து.   மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து சிபிராஜுக்கு ‘கபடதாரி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் – பிரபலங்கள் நம்பிக்கை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில்…

Read More

வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதாவது

* வெட்டி பசங்க * படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது.     ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட் ‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது முரளி ராமசாமி பேசும்போது, தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். ‘போஸ்‘ வெங்கட் பேசும்போது, ‘வெட்டி பசங்க‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப்…

Read More

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்   இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், அட்டக்கத்தி தினேஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றப் படம் அண்ணனுக்கு ஜே. இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார், ஒரு தாய் மக்கள் என்ற ஆவணப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை மையப் படுத்தி, தமிழர்களின் வாழ்வியலையும், வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகளையும் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது இந்த ஆவணப்படம். தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடைப்பெறும் இடங்களில் எல்லாம் படக்குழுவினர் களமிறங்கி, மாடு பிடி வீரர்களுடன் பல மாதங்கள் பயணம் செய்து, இதுவரை காணாத காட்சிகளை, எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு பதிவு செய்து இருக்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வாழ்வியல், மாடு பிடிப்பதில் இருக்கும்…

Read More

‘பூமி’ சினிமா விமர்சனம்

‘பூமி’ சினிமா விமர்சனம். சமூக அக்கறை சுமந்த படங்களின் வரிசையில் புதுவரவாய் ‘பூமி.’ ஜெயம் ரவியின் 25-வது படம்! ஜெயம் ரவி 16 வயதிலேயே சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் லெப்ட், ரைட் வாங்குகிறார். அதன் காரணமாக நாசாவில் வேலை கிடைக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிற விஞ்ஞானிகளில் ஒருவராக செயல்படுகிறார். இடையில் விடுமுறை கிடைத்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். சுயலாபத்துக்காக இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கரங்கள், தன் கிராமத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கிறார். கிராமத்தைக் காப்பாற்ற, கார்ப்பரேட் கம்பெனிக்கெதிராய் களமிறங்குகிறார். விரிகின்றன வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகள்… இயக்கம்: லெஷ்மணன் ஜெயம் ரவியின் நடிப்பு துடிப்பு. டயலாக் டெலிவரி தீ! ஹீரோயின் நிதி அகர்வால் அழகாக இருக்கிறார். கவர்ச்சியாக வருகிறார், போகிறார். டூயட் பாட்டில் மேடம் செம ஹாட்!…

Read More

அப்பா, மகள், இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…

அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா….   1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின் அப்பா அமைச்சர் ஜெயக்குமார் என்பது. நாட்கள் செல்ல செல்ல குழந்தை மாணவனாகி,பள்ளிப்படிப்பை முடித்து,மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார். 22வது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன். படித்து முடித்த போது வயது 24 அவருக்கு……

Read More

மாஸ்டர்’ சினிமா விமர்சனம்

‘மாஸ்டர்’ சினிமா விமர்சனம். வெள்ளித் திரைக்கு வந்துசேர, கடந்த சித்திரையிலிருந்து காத்திருந்த ‘மாஸ்டர்.’ கொரோனா மெர்சலுக்குபின், தளபதி ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கும் உற்சாகப் ‘பொங்கல்!’ தனது அநியாய அடாவடி கொலைபாதகச் செயல்களுக்கு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கைதியாக இருக்கிற சிறுவர்களை, இளைஞர்களைப் பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. அந்த பள்ளிக்கு வாத்தியாராக வருகிற விஜய் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் அந்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டி திருத்தி, விஜய் சேதுபதிக்கு ரிவிட் அடித்து RIPபன் கட்டுகிறார். வழக்கமான ஹீரோயிஸக் கதை லோகேஷ் கனகராஜின் திரைக்கதை, விஜய் – விஜய் சேதுபதி என்ற இரண்டு பெரிய ஹீரோக்களின் அதகள அட்டகாசத்தால் வேகமெடுக்கிறது. தளபதி விஜய் முகத்தில் ஸ்டூடண்டு கலை, பார்ப்பது புரொபசர் வேலை என ‘தெறி’க்க விடுகிறார். அசத்தல் என்ட்ரீ, ஆக்ரோஷ சண்டை என அவர் வருகிற காட்சிகளில் விசிலால் அதிர்கிறது…

Read More