சாதிய ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படம் உறியடி2

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், “உறியடி உறியடி2 எடுப்பதற்கான காரணம் என்ன?” என்பதற்கு அழகான பதிலைச் சொல்லி இருக்கிறார்.”இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி2 வருவதற்கான காரணம்” என்கிறார்   மற்றும் நடிகரான விஜய்குமார். மேலும் அவர் படம் பற்றி கூறும்போது, “எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான்…

Read More

கமல் கட்சி சின்னம் ’டார்ச் லைட்’

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல், 39 கட்சிகளுக்கான சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில், கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். வெள்ளை நிறம் கொண்ட கொடியின் நடுவில் நட்சத்திரமும், அதை சுற்றி 6 கைகள் கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம்பெற்றது. கமல் தனது கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில்,…

Read More

ராணுவ வீரர் படத்தை அரசியல் கட்சிகள் பயன் படுத்த தடை : தேர்தல் கமிஷன்

விமானி அபிநந்தனின் புகைப்படத்தைப் போட்டு பாஜ ஆதாயம் தேடுவதாக எழுந்த புகாரையடுத்து, அரசியல் கட்சிகள் நடத்தும் பிரசாரத்தில் ராணுவ வீரர்களின் புகைப்படம் பயன்படுத்தத் தடைவிதித்து, தேர்தல் ஆணைய செயலர் பிரமோத் குமார் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாகப் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய போது அவர்களை விரட்டிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார். உலக நாடுகள் அழுத்தம் கொடுத்ததின் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, மக்களவை தேர்தலையொட்டி கட்சிகள் ஆரம்பக்கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், ராணுவ வீரர்களின் நடவடிக்கையை பாஜ தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  அதை உறுதி செய்யும் வகையில், உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்…

Read More

புல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி!

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் இணை தயாரிப்பாளர்  கருப்பையா தன்னுடைய வரவேற்புரையில்,“ இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும் நானும் நாற்பதாண்டுகளுக்கு மேல் நண்பர்கள். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி என்பதை நாங்கள் ஒரு முறை மலைவாசஸ்தலம் ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டபோது அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் எனது உறவினர். இந்த படத்தின் இயக்குனரும் எனது உறவினரே. அதனால் இது எமக்கு குடும்ப விழாவாக தெரிகிறது. ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்கு…

Read More

‘சத்ரு’ – மார்ச் 8-ம் தேதி ரிலீஸாகிறது..!

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட்  பட நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர்கள் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சத்ரு.’  இந்தப் படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்திருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன்,  நீலிமா,  மாரிமுத்து,  ரிஷி,  சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம்,  ரகுநாத், கீயன், சாது,  குருமூர்த்தி,  பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.     ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – அம்ரிஷ், பாடல்கள்   – கபிலன்,  மதன் கார்க்கி, சொற்கோ, படத் தொகுப்பு – பிரசன்னா.ஜி.கே., கலை இயக்கம் –  ராஜா மோகன், சண்டை இயக்கம் – விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  நவீன் நஞ்சுண்டான்.    படம் பற்றி இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் பேசும்போது, “இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. இந்த படத்தில் கதிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். ஆனால்,…

Read More

‘தாதா 87’ திரைப்பட விமர்சனம்

நாயகன் ஆனந்த் பாண்டி, படித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் சாருஹாசன், சாதிகள் இருக்க கூடாது என்று நினைத்து வாழ்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கு போட்டி போட்டுகிறார்கள். இந்த இடத்திற்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஜனகராஜ், தனது மகள் நாயகி ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஸ்ரீபல்லவியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் ஆனந்த் பாண்டி. எப்படியாவது ஸ்ரீபல்லவியை காதலில் விழ வைக்க வேண்டும் என நினைத்து தினமும் பின் தொடர்கிறார். இந்த விஷயம் ஜனகராஜ்க்கு தெரிந்து, போலீசில் புகார் கொடுக்கிறார். இருந்தாலும், ஸ்ரீபல்லவியை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவி, ஆனந்த் பாண்டியின் காதலை ஏற்றுக்…

Read More

ஆதார் இருந்தால்தான் பேங்க் அக்கவுண்ட் & சிம் கார்ட்!

ஆதார் அவசியம்., அவசியமில்லை என்று அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாவது சகஜமாகி போச்சு. அந்த வகையில் வங்கிக் கணக்கு, செல்போன் சிம் கார்டு பெற ஆதார் எண் கட்டாயம் என்ற அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு, வங்கிக் கணக்குகளுக்கு, செல்போன் சிம் கார்டுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று உத்தரவிட்டது மத்திய அரசு. இதை எதிர்த்துச் சமூக ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் வங்கிக் கணக்குகள், செல்போன் சேவை மற்றும் மாணவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆதார் எண்ணைக் கட்டாயம் என்று அறிவிக்கக் கூடாது எனத் தெரிவித்தது…

Read More

சேரன் இயக்கிய திருமணம் – விமர்சனம்

ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா. அவரது தம்பி உமாபதி. இவரும், காவ்யா சுரேசும் காதலிக்கிறார்கள். காவ்யாவின் அண்ணன் சேரன். குடும்ப பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்டு நேர்மையானவராக இருக்கிறார். இந்த நிலையில், காவ்யா தனது காதலை குடும்பத்தாரிடம் தெரிவிக்க, இரு வீட்டாரும் சந்தித்து பேசுகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய வேலையில் இரு வீட்டாரும் ஈடுபடுகிறார்கள். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது தம்பியின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று சுகன்யா விருப்பப்படுகிறார். ஆனால் தனது சக்திக்கு ஏற்ப மனநிறைவோடு தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க நினைக்கிறார் சேரன். இவர்களது மாறுபட்ட எண்ணத்தால் உமாபதி – காவ்யா திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை கடந்து, உமாபதி – காவ்யா திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன…

Read More