அப்துல்கலாம் வழிகாட்டலால் கலைதுறையில் இருந்து கல்வி துறைக்கு மாறிய நடிகர் தாமு

கே.பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தின் மூலம் 1992ல் நடிகரானவர் தாமு. அதன்பின் இருபது ஆண்டுகள் முழுநேர நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். திடீரென அவரைத் திரைப்படங்களில் காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படங்களில் இருந்து விலகி கடந்த பத்து ஆண்டுகளாக, நடிகர் தாமு கல்விச்சேவைஆற்றிவருகிறார். இதுமக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும் அரசாங்கத்துக்கு அது தெரிந்திருக்கிறது. இதனால்,கல்வித்துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது கிடைத்துள்ளது. ஏப்ரல் 19, அன்று, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக காணொளி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக, அவருக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர்…

Read More

ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த தயாராகும் தமிழ் திரையுலகம்

இந்திய அரசியலில் தமிழக அரசியலும், சினிமாவும் வேறுபட்டது பிற மாநிலங்களில் சினிமாவும் அரசியலும் நீரும் எண்ணையுமாகவே இருந்து வருகிறது தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளின் தலைவர்கள் சினிமாவில் பிரபலமாகி அரசியல் தலைவர்களாக வளர்ந்தவர்கள் அதனால் சினிமா அவர்களின் தாய் வீடாக மாறிப்போனது இதன் காரணமாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக திரையுலகினர் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது வாடிக்கையாகி போனது அப்படி நடத்தாத சூழ்நிலையில் ஆளுங்கட்சியே விழாவை நடத்துமாறு அறிவுறுத்துவதும் உண்டு கடந்த ஒரு வருடகாலமாக கொரானா காரணமாக சினிமா தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது. பிற தொழில்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்று சினிமா தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை இந்தியா முழுவதும் திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கட்டுகளுக்கு GST மட்டுமே செலுத்தும் நடைமுறை உள்ளது தமிழகத்தில் உள்ளாட்சி வரி 8% விதிக்கப்படுகிறது.…

Read More

கமலஹாசனை இறுதி சுற்றில் வீழ்த்திய பாஜக வானதி சீனிவாசன்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எல்லா கட்சியினராலும் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகோவை தெற்கு தொகுதிநடிகர் கமலஹாசன் சென்னை அல்லது அவரது பூர்வீக பூமியான சிவகங்கை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபோது தமிழக அரசியல் களம் ஆச்சர்யத்துடன் பார்த்தது பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் இங்கு போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோவை தெற்குதொகுதிகமல்வருகையால்கூடுதல் அந்தஸ்து பெற்றது  நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே குறைவான வாக்குகள் என்றாலும் கமல் முன்ணனியில் இருந்தார் ஆனால் கடைசி இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது கமலஹாசன் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம்  கமல்ஹாசன் தோல்வியடைந்தார். மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728…

Read More

மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழ் திரையுலகுக்கு பொற்காலம் – திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ராமசாமி @முரளிவெளியிட்டுள்ள அறிக்கையில் உதய சூரியன் பார்வையில் தமிழகம் இனி வீறுநடைபோடும்தமிழகஅரசியல் வரலாறு 58 வருடங்களுக்கு மேலாக அரசியலும் சினிமாவும் பின்னி பிணைந்தே வருகிறதுடாக்டர்கலைஞர் ஐந்துமுறை தமிழக முதல்அமைச்சராக பதவி வகித்தபோது தமிழகத்தை எல்லா துறைகளின் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டு செயல்படுத்தி வெற்றிகண்டார் அதிலும் தமிழ் திரையுலகம் மீது தனி கவனம் கொண்டு அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் டாக்டர் கலைஞர் அவர்கள் திரை உலகிற்கு செய்த சாதனைகள் அதிகம் குறிப்பாக தமிழ் வார்த்தைகளில் படத்தலைப்பு வைத்தால் அந்த படங்களுக்கு கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்தார் அரசாங்க இடங்களில் நடைபெறும்படங்களின் படப்பிடிப்புக்கான கட்டணங்களை வெகுவாககுறைத்துதயாரிப்பாளர்கள்மனங்களை குளிர்வித்தார் சென்னை அருகே பையனூரில் தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகையர் இயக்குனர்கள் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சின்னத்திரையினர் அனைவருக்கும் வீடு…

Read More

மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு மனம் நிறை மகிழ்வுடன் வாழ்த்துகள்- இயக்குனர்பாரதிராஜா

தமிழ்திரைப்படநடப்புதயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனருமான பாரதிராஜா தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகர மேயராகப் பணியாற்றிய போது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதே போல் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் நிர்வாகத்தை  தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழக உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக் கொள்ள தங்களை…

Read More

அரசியல் ரீதியாக வாழ்த்திய A.R.ரஹ்மான் – சம்பிரதாயமாக வாழ்த்திய ரஜினிகாந்த்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடுவரலாறுகாணாதவளர்ச்சி அடையஇந்தியாவின்ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார் தேர்தல் அது சார்ந்த வெற்றிதோல்வி சம்பந்தமாக இதுவரைரஹ்மான் வாழ்த்து செய்திகள் தெரிவித்தது இல்லை முதல்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் சார்ந்து வாழ்த்து செய்தியை வெளியிட்டிருப்பது திரையுலகில் மட்டுமல்லாது அகில இந்திய அரசியல் வட்டாரத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்கு என்று தனித்துவமான அரசியல் நிலை இருந்தாலும் பொதுவெளியில் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதில் நடிகர் ரஜினிகாந்த் எல்லா அரசியல் கட்சியினருக்கும் பொதுவானவராக…

Read More