பூஜையுடன் தொடங்கிய யோகிபாபு படம்

முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஒர்க்கிங் ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் (Working House Productions) நிறுவனம் சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகி பாபுவு க்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பிரியா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.   கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகேஸ்வர காந்தி இயக்கும் இப்படத்திற்கு கெளதம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெப்ரி இசையமைக்கிறார்.…

Read More

முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறைக்கு வரவேண்டும் — நெஞ்சு பொறுக்குதில்லையே படவிழாவில் தொல் திருமாவளவன் பேச்சு

நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”. மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா, படக்குழுவினர் திரை மற்றும் அரசியல் பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதுடன். படத்தின் இசைத் தகட்டை வெளியிட்டார்.   விழாவில் தயாரிப்பாளர் கிருஸ்துதாஸ் பேசியதாவது… நவசரகூடம் சார்பில் இங்கு வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். எனக்கு சிறு வயதிலிருந்து படம் பார்க்க வேண்டும், படம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் நாம் எடுக்கும் படம் சாதாரணமாக இருந்து…

Read More

பணி – திரை விமர்சனம்

மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான ஜோஜு ஜார்ஜ் இயக்குனர் ஆகியிருக்கும் முதல் படம்.முதல் படத்திலேயே வெற்றி முத்திரை பதித்திருக்கிறார். மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள் திடீரென புதிய தொழிலுக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆயுதம் ஏந்தி ஒரு கொலையை நடத்தி முடிக்கிறார்கள். அதற்காக கிடைக்கும் ரூ. பத்து லட்சம் அவர்களை வன்முறை பாதையில் தொடர வைக்கிறது. இதனால் ஏற்படும் புதிய துணிச்சலில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும் பிரபல தாதாவின் மனைவியை தைரியமாக சீண்டுகிறார்கள். இதில் ஆவேசமான தாதா இருவரையும் அடித்து துவைக்கிறார். இதனால் வெறியான இளம் கொலையாளிகள் இருவரும் தங்கள் பழி வாங்கும் படலத்தை தொடங்குகிறார்கள். தாதாவின் குடும்பத்தில் உள்ளவர்கள், தாத்தாவின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் கடத்தல், கொலை என விபரீதம் தொடர்கிறது. இதற்கிடையே தாதாவின் மனைவி இவர்களிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகிறாள். இதன்…

Read More

நிறங்கள் மூன்று – திரை விமர்சனம்

மூன்று மனிதர்களின் முகம் வேறு. செயல் வேறு. அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி வைக்கிறது என்பதை சொல்லியிருக்கும் படம். இயக்குனர் ஆக வேண்டும் என்ற வெறியுடன் திரியும் ஒரு உதவி இயக்குனர். சாதாரண புகார் என்றாலும் அதில் காசு பார்க்க துடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு பொறுப்பான பள்ளி ஆசிரியரின் மறுபக்கம்…இந்த மூன்று கதாபாத்திரங்களோடு காணாமல் போன காதலியை தேடி அலையும் ஒரு மாணவனும் இணைந்து கொள்ள…போகிற போக்கில் இந்த மூன்று குடும்பங்களும் ஒரே புள்ளியில் எப்படி இணைகிறது என்பது கதை. உதவி இயக்குனர் கேரக்டரில் கச்சிதமாக பொருந் ந்தியிருக்கிறார் அதர்வா. தனது கதை தன் கண்முன்னே பிரபல இயக்குனர் இயக்கத்தில் படமாவது கண்டு கொதிக்கும் இடங்களில் அந்த கேரக்டருக்கான நடிப்பு நியாயம் செய்து விடுகிறார் அதர்வா. ஆனால் பல இடங்களில் இவரை போதை…

Read More

பராரி – திரை விமர்சனம்

இது காதல் கதை. அதை சமூகமும் இனமும் எப்படி பந்தாட முற்படுகின்றன என்பது இயல்பான திரைக் களம். தமிழ் சினிமாவில் சாதிச் சண்டைகள் தொடர்பான கதைகளுக்கு பஞ்சம் இல்லை. பராரியில் இப்படி சாதி சண்டைகள் தொடங்கி மொழிச் சண்டையாக வளர்ந்து முடிகிறது படம். இந்த இரு சண்டைக்குள்ளும் சிக்கி தவிக்கும் ஒரு ஆத்மார்த்தமான காதலை சொன்ன விதத்தில் இந்த பராரிமனதுக்குள் மத்தாப்பு. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளூர் கிராமத்தில் ஆதிக்க சக்தி மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இருப்பது ஒரே குலதெய்வம். வருடாவருடம் அதை கும்பிடக் கூட இரு தரப்பும் அடித்துக் கொள்கிறார்கள். இந்த இரு தரப்பின் மோதல் தெரிந்தும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹரி சங்கர் மீது காதல் ஆகிறாள் சங்கீதா. இந்தக் காதலை வேரறுக்க சங்கீதாவின் தந்தை தனது உறவு பையனுக்கு மகளை கொடுப்பதாக நிச்சயம் செய்து…

Read More

ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தாதீர்கள் ” –ஹீரோக்களுக்கு டைரக்டர் பேரரசு வேண்டுகோள்

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ‘முருகா, பிடிச்சிருக்கு’ படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன். ‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது, “எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்…

Read More

“வினோதய சித்தம் படம் இல்லையென்றால் ராஜா கிளி படம் இல்லை” -நடிகர் தம்பி ராமையா நெகிழ்ச்சி தகவல்

 மிக மிக அவசரம், மாநாடு’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதாயின் நாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் nj நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில்…

Read More

ஜாலியோ ஜிம்கானா படத்தில் பிரபுதேவாவுடன் நடனமாடியது மகிழ்ச்சியான அனுபவம்” நடிகை மடோனா செபாஸ்டியன் நெகிழ்ச்சி

நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் ‘செலின்’ என்ற அற்புதமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். எவர்கிரீன் ஃபீல் குட் ரொமாண்டிக் திரைப்படமான ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அவரது அற்புதமான நடிப்பு கோலிவுட்டில் பாராட்டுகளை வாங்கித் தந்தது. அதேபோல, தனுஷின் ’பா. பாண்டி’ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தில் அவரது ஆக்‌ஷன் அவதாரம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இப்போது நடிகர் பிரபுதேவாவுடன் அவர் நடித்திருக்கும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. நடிகை மடோனா செபாஸ்டியன் கூறும்போது, “இதுவரை தமிழ் சினிமாவில் நான் நடித்த கதாபாத்திரங்கள் தனித்துவமானவை. ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தின் கதாநாயகியாக நான் நடித்திருப்பது இதுவே முதல்முறை. பல…

Read More

நயன்தாரா பியாண்ட் தி பேரிடேல் — ஆவணப்பட விமர்சனம்

சிலருக்கு மட்டுமே வாழும் போதே வரலாறு அமையும். திரை உலகில் அப்படி ஒரு அமைப்புக்கு சொந்தக்காரர் நடிகை நயன்தாரா. கேரளாவில் திருவல்லா எந்த சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் டயானா. அப்பா பெயர் குரியன் என்பதால் டயானா குரியன். கல்லூரியில் படிக்க வாய்ப்பு வந்த போது சிஏ படிக்க விரும்பினார். அதற்காக மனு போட்ட நேரத்தில் மனோ போடாமலேயே தேடி வந்தது சினிமா வாய்ப்பு. 2003 ஆம் ஆண்டு சத்யன் அந்திக்கரே இயக்கத்தில் உருவான உருவான மனசுக்கிரே நான் நயன்தாராவின் முதல் படம் படத்தில் அவருக்கு ஜோடி ஜெயராம் இந்த படத்தில் நடித்த போதுதான் டயானா என்று அவரது பெயரை நயன்தாராவாக மாற்றினார் டைரக்டர் இப்படி அவர் நடிக்க வந்த காலம் தொடங்கி விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் காட் சிப்படுத்தி இருக்கிறது இந்த ஆவணம். தமிழில்…

Read More

காட்சிகளை புதிய கோணத்தில் உருவாக்குவதில் ஒப்பற்றவர் இயக்குனர் கார்த்திக் நரேன்” – நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் ஒப்பற்ற நடிப்புத்திறன் அவர் நடிக்கும் படங்களின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும். நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.   படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறும்போது, ”நான் இத்தனை வருடங்களில் பல இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன்அவர்களின் தனித்தன்மையில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அந்த வகையில், புதிய காட்சிகளை உருவாக்குவதில் கார்த்திக் நரேன் திறமையானவர். காட்சிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு நடிகர்களை வித்தியாசமான பரிமாணத்தில் வெளிப்படுத்த தன்னால் முடிந்தவரை சிறந்ததை கொடுப்பார். மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் காட்டும். இதற்கு மேல் நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டு விடும். ஆனால், பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் என்னால்…

Read More