பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் – சென்னையின் வெப்பம் மற்றும் தூசியை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தீர்வு!

பிரபலங்களின் ஸ்டைலிஷ் லுக் சாதாரண மக்கள் கொண்டு வர இயலாது என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. மாறிவரும் காலத்திற்கேற்ப குறிப்பாக சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு தனிநபரும் ஒரு பிரபலமாக மாறுவதற்கான வாய்ப்பு இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆடம்பரமான சலூன்கள் மற்றும் அழகுசாதனங்கள் ஒரு காலத்தில் தனிநபர்களுக்கு எட்டாதவையாகக் கருதப்பட்டன. இதற்கெல்லாம் தீர்வாக சென்னையில் தொடங்கப்படும் பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் உள்ளது. இந்த நகரத்தில் உங்கள் அழகு அனுபவத்தை மேம்படுத்த பாடிகிராஃப்ட் தயாராக உள்ளது. எனவே இந்த நகரத்தின் கடும் வெப்பம் மற்றும் தூசியை எதிர்த்துப் போராடுவதற்கான உயர்தர சிகிச்சைகள் மற்றும் தீர்வுகளில் ஈடுபடுவதற்குத் தயாராக வேண்டிய நேரம் இது. இதன் பிசினஸ் தலைவர் சித்தார்ட் நாயர், “பல்வேறு துறைகளின் கனவுகள் மற்றும் சாதனைகளின் பூமியாக சென்னை விளங்குகிறது. முறையான கண்காணிப்பு மற்றும் அனுபவத்தின்…

Read More

”’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு!” நடிகர் நாசர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். முஃபாசா: தி லயன் கிங் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நாசர் கூறுகையில், “”நடிகராக எனது பயணத்தைத் தொடங்கும் முன்பே, பல படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். லயன் கிங்கின் முதல் ரசிகன் நான். அந்தப் படத்திற்கான டப்பிங் வாய்ப்பு வரும்போது எப்படி நிராகரிக்க முடியும்? தனது…

Read More

ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் பிரபல சினிமா நிறுவனம்

பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம், தொலைக்காட்சி தொடர்கள் என பல்வேறு கலை சார்ந்த பணிகளை செய்து வருகிறது.   இந்த நிறுவனம் மலேசியாவில்’காரசாரம்’ என்கிற பெயரில் உணவகத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. மலேசியாவில் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற உணவகமாக இந்த காரசாரம் உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மலேசியாவின் புகழ்பெற்ற காரசாரம் உணவகம் இந்தியா மற்றும் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, துபாய், லண்டன் உள்பட பிற நாடுகளிலும் தொடங்க இருக்கிறது என்று உணவக உரிமையாளர் டத்தோ சரவணன் தெரிவித்திருக்கிறார். இந்த உணவகம் தமிழர்களின் கலாச்சார உணவுகளை அதன் தன்மை மாறாமல் , அதன் மருத்துவகுணங்கள் குறையாமலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உணவகத்தில் மண்சட்டிச்சோறு, என்கிற உணவு மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.…

Read More

ஓடிடி தளத்தில் வெளியானது விமலின் சார் திரைப்படம்

சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார். இதைத் தொடர்ந்து ‘சார்’ என்ற படத்தை இயக்கினார். இதில் விமல் நாயகனாகவும் சாயாதேவி நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். வில்லன் கதாபாத்திரத்தில் சிராஜ் நடித்து இருந்தார். இனியன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு, ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய, சித்து குமார் இசையமைக்க மற்றும் கலை பணிகளை பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.. எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிட்டது. இந்த படம் அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பரம்பரையின் அர்ப்பணிப்பை அழகான பாடமாக உணர்த்தியது. இப்படத்தை பத்திரிகையாளர்கள்…

Read More

### **ரஜினிகாந்த் பிறந்த நாளில் “தளபதி” மீண்டும் திரைக்கு!**

சூப்பர் ஸ்டார் **ரஜினிகாந்த்** அவர்களின் **74ஆவது பிறந்த நாள்** மற்றும் அவரது **சினிமா வரலாற்றின் 50ஆவது பொன்னாண்டு** கொண்டாட்டமாக, 1991ஆம் ஆண்டு வெளியான **”தளபதி”** திரைப்படம் **4K டிஜிட்டல்மயமாக்கப்பட்ட வடிவில்** திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் **மணிரத்னம்** இயக்கத்தில், **ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா** ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம், இசைஞானி **இளையராஜா** அவர்களின் இசையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த **எஸ்எஸ்ஐ புரொடக்‌ஷன்** மூலம் வரும் **12.12.2024** அன்று தமிழ்நாட்டில் **150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்** மிகப்பெரிய அளவில் திரையிடப்பட உள்ளது. #### **33 ஆண்டுகளுக்கு பிறகும் அதிக எதிர்பார்ப்பு** “தளபதி” திரைக்கு வந்து 33 ஆண்டுகள் கடந்தும், மக்கள் மத்தியில் இப்படத்தின் மீதான உற்சாகம் குறையவே இல்லை. **SPB** அவர்களின் குறளில் இளையராஜா இசையமைத்த **”ராக்கம்மா கைய தட்டு”**…

Read More

அன்புமணி ராமதாஸ் மகள் தயாரித்த அலங்கு: ட்ரைலர் வெளியீட்டில் ரஜினியின் முத்திரை!

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பில் உருவான அலங்கு திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து , மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் அவ்வப்போது வெற்றிபெறுவது வழக்கம் , இவ்வருடமும் அதைப்போல் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன . அந்த வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது . இன்று படத்தின் ட்ரைலரை வெளியீட்டிற்கு முன்பு பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் மற்றும் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தை பற்றிய சுவாரசிய தகவல்களை கேட்டறிந்த அவர் உடனடியாக படத்ததை பார்த்துவிடுவதாக படக்குழுவிடம் தெரிவித்தார். இத்திரைப்படத்தை DG FILM COMPANY சார்பில் D.சபரிஷ் , MAGNAS PRODUCTIONS சார்பில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி  இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். அலங்கு…

Read More

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக “தேவைக்கு கிடைக்காததும்… தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்… எப்பவுமே ஒரு வலிதான்…” என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது.   திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது. மேலும் ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, திரு.மாணிக்கம்…

Read More

எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்?  – தயாரிப்பாளர் கே ராஜன் !!

SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் “Extreme”( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராஜ்குமார் பேசியதாவது… இப்படம் எங்களது இரண்டாவது படம். நண்பன் ராஜவேல் முதலில் ஒரு கதை சொன்ன போது, அதை ஷார்ட் ஃபிலிமாக எடுத்தோம். அந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியது, அதில் என் நடிப்பும் பாராட்டப்பட்டது. பின் நாம் ஏன் படம்…

Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் ‘ படத்தின் டீசர் வெளியீடு

சியான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். ‘வீர தீர சூரன் பார்ட்…

Read More

“படையாண்ட மாவீரா” நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. மண்ணையும் மக்களையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பில் படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர்.   பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்க நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப் படுத்தியுள்ளார். மேலும் படையாண்ட மாவீராவில் மிக முக்கிய…

Read More