இரவும் பகலும், போக்கிரி மன்னன், ஒற்றைப் பனைமரம், சிப்பாய், உள்ளிட்ட பல படங்களை தயாரித்த, திருவண்ணாமலை மாட்டத்தைச் சார்ந்த ”RSSS பிக்சர்ஸ்” படத் தயாரிப்பு நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான எஸ். தணிகைவேல் அவர்களின் தந்தை எம்.சீனிவாசன் அவர்கள் 24.01.2025 அன்று இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
Read MoreMonth: January 2025
ஆர்யா – அனுராக் காஷ்யப் – கிரீஷ் ஜகர்லமுடி – ராஜ் பி. ஷெட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் ‘மை லார்ட் ‘ பட ஃபர்ஸ்ட் லுக்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா – பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் – கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி – தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி – மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர்…
Read Moreஅனுராக் கஷ்யப்-வெற்றிமாறன் தயாரிக்கும் Bad Girl படம்! டீசர் வெளியானது..
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது…
Read Moreபத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்கள் அஜித் குமார் மற்றும் ஷோபனாவிற்கு வாழ்த்துகள்.
‘அமராவதி’ திரைப்படம் மூலம் 1993-ல் தனது திரைப்பயணத்தை தொடங்கி, 61 திரைப்படங்கள் மூலம், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, பல சிறப்பான திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்புடன், முன்னணி நடிகராகவும், Box Office வசூலில் பல சாதனைகளையும் புரிந்த திரு. அஜித் குமார் அவர்களுக்கு இந்திய அரசின் பெருமைக்குரிய “பத்ம பூஷன்” விருது கிடைத்துள்ளது தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது. சினிமாவில் மட்டுமல்லாது கார் ரேஸிங் மூலமும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் திரு. அஜித் குமார் அவர்களின் இந்த பயணம் மேலும் தொடர்ந்து, அவர் பல வெற்றிகளை குவிக்கவும், விருதுகளைப் பெறவும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. நடனம் மற்றும் நடிப்பு மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை…
Read Moreஅம்மாவின் தியாகம், அப்பா இருந்திருக்கணும்.. நடிகர் அஜித் குமார் உருக்கம்
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது. பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த…
Read Moreகுழந்தைகள் முன்னேற்ற கழகம் – திரை விமர்சனம்
அடுத்த தலைமுறை அரசியலை பேசும் படம். அதை முடிந்தவரை கலகலப்பாக சொல்ல முயன்று இருக்கிறார்கள். அரசியல்வாதி யோகி பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் பிறந்த நிலையில் வீட்டு வேலைக்கு வந்த வட மாநில பணிப்பெண் மூலமும் ஒரு மகனை பெற்றுக் கொள்கிறார். வட மாநில பெண்ணுக்கு பிறந்த மகன் சிறுவயதாக இருக்கும் போதே தாயையும் மகனையும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். நாட்களின் வேகமான நகர்வில் ஒரே பள்ளியில் மகன்கள் இருவரும் படிக்கிறார்கள். இருவருமே அரசியல் கனவுடன் வளர்கிறார்கள். இருவரின் லட்சியமுமே எதிர்காலத்தில் அரசியலில் உச்சம் தொட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே. இருவரின் கனவும் நனவானதா என்பது கிளைமாக்ஸ். குற்ற உணர்வு இல்லாத இந்த அரசியல்வாதி கேரக்டரில் காமெடி, கலகலப்பு என ரசிகனை சிரிக்க வைக்கும் வேலையை செவ்வனே செய்கிறார், யோகி பாபு.…
Read Moreராமாயணா: தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா – திரை விமர்சனம்
அயோத்தியில் அரசராக பதவி ஏற்க இருந்த ராமர் மந்தாரையின் சூழ்ச்சியால் 14 வருடம் காட்டுக்கு போக நேரிடுகிறது. மனைவி சீதை, தம்பி லட்சுமணனும் உடன் போகிறார்கள். காட்டில் லட்சுமணனை பார்த்த மாத்திரத்தில் ராவணனின் தங்கை சூர்ப்ப னகைக்கு காதல் பிறக்க, அதை சூர்ப்பனகை லட்சுமணனிடமே சொல்லும் போது லட்சுமணனின் வாள் சூர்ப்பனகை மூக்கை பதம் பார்த்து விடுகிறது. மூக்கை இழந்த சூர்ப்பனகை தனது புகாரை தனது அண்ணனும் இலங்கை வேந்தனுமான ராவணனிடம் கொண்டு போக… அதற்கு பழிவாங்கும் நோக்கில் ராவணன் சீதையை சிறை எடுக்க… சுக்ரீவன் தலைமையிலான வானர படை உதவியுடன் ராவணனை போரில் வென்று சீதையை மீட்ட கதை. அதை அனிமேஷனில் திகட்ட திகட்ட தந்து இருக்கிறார்கள். படத்தின் சிறப்பம்சம் நேர்த்தியான தமிழ் டப்பிங். குரல் கொடுத்தவர்கள் ராமாயண காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.கும்பகர்ணனின்…
Read Moreஆர். மாதவன், நீல் நிதின் முகேஷ் மற்றும் கீர்த்தி குல்ஹாரி ஆகிய முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில், சோஷியல் நையாண்டி டிராமாவாக உருவாகியுள்ளது ‘ஹிசாப் பராபர்’
முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் “சைத்தான்” பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நையாண்டி பாணியில் சமூக அக்கறை மிக்க படைப்பாக, ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.…
Read Moreதேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் ‘மனிதம்’ உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது
யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மனிதம்’ திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான ‘மனிதம்’ படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னணி இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றன. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணராஜு, “உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை ‘மனிதம்’ வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படி புரிகிறது என்பது படத்தின் மையக்கரு. இதை சுவாரசியமான் முறையில் திரையில் வெளிப்படுத்தி…
Read Moreகுடும்பஸ்தன் – திரை விமர்சனம்
நாயகன் மணிகண்டனும் நாயகி ஷான்வியும் காதலர்கள். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப, ஒரு கட்டத்தில் காதல் ஜோடிகள் ஓடிப்போய் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சம்பாதிக்கும் மகனை பகைத்துக் கொள்ள விரும்பாத நாயகனின் பெற்றோர் ஒரு வழியாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும் தங்கள் வீட்டில் இருக்கும் மருமகளை நாசூக்காக அவ்வப்போதுமாமியார் இடித்துரைப்பதும் நடக்கிறது. திருமணம் ஆகி குடும்பஸ்தன் ஆகிவிட்டபோதிலும் பெற்றோரையும் கவனிக்கும் நிலையில் இருக்கிறார் மணிகண்டன். அப்பாவுக்கு பழைய வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. அம்மாவுக்குa ஆன்மீக டூர் போக வேண்டும். இது போக திருமணமாகிவிட்ட அக்காவுக்கும் சில தேவைகள். இதனால் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார் மணிகண்டன். மகிழ்ச்சியான இல் வாழ்க்கையில் கர்ப்பமாகிறாள் மனைவி. இப்போது…
Read More