உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க .. மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார். அவருடைய இந்த…
Read MoreMonth: January 2025
வல்லான் – திரை விமர்சனம்
இளம் தொழிலதிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொலை வழக்கில் விசாரணை செய்யும் அதிகாரிகளால் எந்தவித துப்பும் துலங்காமல் போன நிலையில், ஏற்கனவே சஸ்பெண்டாகி இருக்கும் சுந்தர் சி. யிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார் போலீஸ் கமிஷனர். பணியில் இல்லாத நிலையிலும் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு துப்புதுலக்க புறப்படுகிறார் சுந்தர் சி. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஒப்புக்கொண்ட பின்னணியில் அவரது தனிப்பட்ட இழப்பு ஒன்றும் இணைந்திருப்பதால் தனது அதி வேக விசாரணையை தொடங்குகிறார். இதற்கிடையே கொலையானவரின் கைவசம் இருந்த ஏதோ ஒன்றுக்காக அரசியல்வாதிகளும் போலீஸ் அதிகாரிகளும் சுந்தர் சி.யின் ஒவ்வொரு ஆட்டத்தையும் கலை த்துப் போடுகிறார்கள். இதையெல்லாம் மீறி சதிகளை தகர்த்து தடைகளை உடைத்து கொலையாளியை நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது திகு திகு திரைக்களம். ஆரம்பம் முதல் முடிவு…
Read Moreபாட்டல் ராதா – திரை விமர்சனம்
மதுவின் கேடுகளை ஆணி அடித்து சொல்லியிருக்கும் படம்.மதுப்பழக்கம் தனி மனிதனின் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது மட்டுமின்றி அவன் குடும்பத்தின் நிம்மதியையும் எப்படி சீர் குலைக்கிறது என்பதை தெளிவான பார்வையோடு சொல்லி இருக்கிறார்கள். கட்டுமான தொழிலாளர் குரு சோமசுந்தரம் அந்த தொழில் நுணுக்கங்களில் தேர்ந்தவர். இதனால் அந்த துறையில் வளர்ந்து வரும் அவருக்கு அழகான மனைவி, அன்பான ஆண் பெண் குழந்தைகள் என நல்லதோர் குடும்பம் அமைகிறது. வாழ்க்கை சக்கரம் நிம்மதியாக சூழலும் நேரத்தில் பேரிடியாக அந்த குடும்பத்துக்கு அமைகிறது நாயகனின் திடீர் குடிப்பழக்கம். இதனால் அந்த குடும்பத்தின் நிம்மதி படிப்படியாக குலைகிறது. குடி நோயாளியாகவே மாறிவிட்டதால் நாயகனின் உடலும் சீர்கெடுகிறது. மதுவின் கோரப்படியில் இருந்து இனி கணவரை மீட்க முடியாது என்று எண்ணும் மனைவி இப்போது ஒரு அதிரடி முடிவெடுக்கிறாள். அந்த முடிவால் கணவன் குடி…
Read Moreபூர்வீகம் – திரை விமர்சனம்
குடும்ப பின்னணியில் விவசாயத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.அந்த கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது தாத்தா, அப்பாவை போல அல்லாமல் மகன் கதிரை பட்டணத்தில் மேற்படிப்பு படிப்பு படிக்க வைக்கிறார். அதற்காக தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியை விற்கிறார். படித்து முடித்ததும் அரசாங்க வேலை. அதைத் தொடர்ந்து பணக்கார குடும்பத்தில் மணப்பெண் என்று அமைய, போஸ் வெங்கட்டின் சந்தோசம் கூடிப் போகிறது. இதன் பிறகு தான் பிரச்சனை. பங்களா வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கு கணவன் இருக்கும் பட்டணத்து வீடு சின்னதாய் தெரிய, பெரிய வீடு வாங்கினால் தான் கணவருடன் இருப்பேன் என்று கண்டிஷன் போடுகிறாள். இது தெரிந்த போஸ் வெங்கட், மகனின் சந்தோஷத்துக்காக மேலும் சில வயல் களை விற்று பணம் அனுப்புகிறார். இப்பொழுது புது வீடு அமைந்த மகிழ்ச்சியில் பேரனும்…
Read Moreஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியதாவது…, இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான்…
Read More“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர்…
Read Moreநடிகர் சங்கம் செய்த மாபெரும் உதவிக்கு நன்றி தெரிவித்த குழந்தைகள் அறக்கட்டளை!
HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு கல்வி மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்கி ஒப்பற்ற பணிகளை செய்து வருகிறது, சென்னை கொளத்தூரை சேர்ந்த “இந்தியா பாசிட்டிவ் நெட்ஒர்க் அறக்கட்டளை”. HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்காக தேவைப்படும் கட்டிடம் கட்டும் பணிகளுக்காக, தென்னிந்திய நடிகர் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னால் ௹10 லட்சம் நிதி வழங்கியது. அந்த கட்டிடம் கட்டி இப்பொழுது திறப்பு விழா காண இருக்கிறது. இது சார்பாக இன்று, அறக்கட்டளையின் தலைவி Dr.நூரி, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களை சங்க அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். காப்பகம் கட்டிடம் கட்ட, முதல் நன்கொடையாக வழங்கிய தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் காப்பகத் திறப்பு விழாவிற்கும் அழைப்பு விடுத்தார்.
Read Moreசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய, “திரு மாணிக்கம்” திரைப்படம், ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது !
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, புத்தம் புதிய ப்ளாக்பஸ்டர், திரு மாணிக்கம், திரைப்படம் 24 ஜனவரி 2025 முதல், ஓடிடி தளத்தில் ப்ரீமியர் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. . ஐந்தாம் வேதம், ரகுதாதா மற்றும் டிமாண்டி காலனி போன்ற வெற்றிப் படைப்புகளைத் தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு அற்புதமான ஃபேமிலி டிராமா திரைப்படத்துடன் ரசிகர்களை அசத்தவுள்ளது. 2024 ஆம் வருடத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட, “திரு மாணிக்கம்” திரைப்படத்தை, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா, பாரதிராஜா மற்றும் ஜசீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நல்லவனாக இருப்பதற்கே, பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டாலும், இறுதியில் நாயகனின் மனிதநேயம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டும் இப்படம், ஜனவரி 24…
Read Moreஅடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை, நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான பாடலாக இந்த டைட்டில் டிராக் உருவாகியுள்ளது. ‘ஆஃபீஸ் பாட்டு’. கேட்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்து, அவர்களைத் திருப்தி அடையச் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. பெப்பி ஜானரில் உருவாகியுள்ள இப்பாடலை ஃப்ளுட் நவீன் இசையில், முகேஷ் பாடியுள்ளார். நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான ‘ஹார்ட் பீட்’ இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர். ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா ஆகியோருடன் அரவிந்த், “பிராங்க்ஸ்டர்”…
Read More“படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” – நடிகர் மணிகண்டன்!
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயரும் நடிகரின் பெயர் முன்னிலையில் சேர்வது இயல்பான விஷயம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறது. ‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான ‘குடும்பஸ்தன்’ ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் மணிகண்டன் கூறும்போது, “நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இருந்தே நான் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியின் ரசிகன். எண்டர்டெயின்மெண்ட்டில் அவர் புதிய அலையை உருவாக்கினார் என்பதில் சந்தேகம் இல்லை. ’குட்நைட்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். ராஜேஷ்வருக்கு பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் திறன் உள்ளது. ’குடும்பஸ்தன்’ படம் வெளியான பிறகு நிச்சயம் ராஜேஷ்வர் அனைவராலும் விரும்பப்படும் இயக்குநராக இருப்பார்” என்றார். ’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ திரைப்படங்களில் தான்…
Read More