கதை…
ஆனந்தம் காலனி என்ற ஒரு காலனியில் தன் சிறு வயது முதலே வளர்ந்து வருகிறார் நாயகன் ஆனந்த்.. அந்தக் காலணியில் வசிக்கும் பல நண்பர்கள் இவருடேனே அதே பள்ளியில் அதே வகுப்பில் படிக்கின்றனர்..
கல்லூரி செல்லும் போது கூட இவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் இணைந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்குகின்றனர். மேலும் BECOME A STAR என்ற மொபைல் ஆப் ஒன்றையும் தொடங்குகின்றனர்.
ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.. ஆனால் மாதங்கள் செல்ல செல்ல வருமானம் இல்லாததால் நண்பர்கள் பிரிந்து செல்கின்றனர்.. குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் நாயகன் NOVP என்ற நிறுவனத்தை நம்பியே இருக்கிறார்.. இதனால் நாயகியும் அவரை விட்டு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது? நண்பர்கள் இணைந்தார்களா காதலி என்ன ஆனார்?நாயகனின் போராட்டம் என்ன ஆனது? என்பது தான் மீதிக்கதை.
முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் ஆனந்த் ராம் செயல்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.. அழுகின்ற காட்சிகளில் இவரது முகபாவணையில் இன்னும் மெச்சூரிட்டி தேவை. அதுபோல ரொமான்ஸ் காட்சியிலும் கூடுதல் கவனம் தேவை.. மற்றபடி கொடுத்த பாத்திரத்தில் தன் தேவை கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.
அனந்தின் காதலியாக வரும் பவானி ஸ்ரீக்கு காட்சிகள் கொஞ்சமே என்றாலும் அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. தனக்குத் தெரிந்த மக்களுக்குத் தெரிந்த youtube பிரபலங்கள் பலரை நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர்.
அஜித் ரசிகராக வரும் வினோத் கெத்தாக நடித்திருக்கிறார் இவரது பிளாஷ்பேக் ஆட்சியும் இவரது காதலும் இவரது முடிவும் உருக வைக்கிறது
தொழில்நுட்ப கலைஞர்கள்…
தமிழ் செல்வனின் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவரின் எடிட்டிங் ஆகியவை கதையுடன் ஒன்ற வைக்கிறது..
பிரண்ட்ஸ் படம் என்றாலே பாட்டுக்கும் ஆட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது.. அதை உணர்ந்து அதற்கு ஏற்ப இசையை கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர்
ஏ.ஹெச்.ஹாசிப்.. இவரின் இசையில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு..
நண்பர்கள் இணைந்து ஒன்றாக போராடினால் எந்த வெற்றியும் எளிதில் சாத்தியமாகும்.. அதே சமயம் நண்பர்கள் ஈகோ இல்லாமல் பழகினால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதையும் கருவாக எடுத்து படத்தை இயக்கி நடித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அனந்த் ராம்..
இவருக்கு பக்கபலமாக இருந்து இந்த படத்தை உருவாக்குவதில் தன்னுடைய பங்கையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு அவர் இந்த படத்தை வழங்கி இருக்கிறார்.
இந்த படத்தை நடிகை ஐஸ்வர்யா தயாரித்து இந்த படத்தில் மாயா என்ற ஆசிரியராகவும் நடித்திருக்கிறார்.. சொல்லப்போனால் இவரது கேரக்டர் மலர் டீச்சர் போல அல்லது மாயா டீச்சரை போல பேசப்பட்டிருக்கும்.. ஆனால் கேரக்டரை கல்லூரி பருவத்தோடு முடித்து விட்டனர்..
நண்பர்கள் இல்லாமல் உலகில் எவரும் இருக்க முடியாது.. எனவே இந்த படத்தின் பல காட்சிகள் நண்பர்களோடு கனெக்ட் ஆகும்.. அதில் இந்த இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.
நண்பன் ஒருவன் வந்த பிறகு – 3.75/5