கதை…
வடமாநிலத்தில் கீழ் ஜாதியில் பிறந்த நாயகி குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் நினைக்கிறாள். ஆனால் இவர் ஒரு பெண் என்பதால் இவரது உறவினர்கள் அதற்கு எதிராக நிற்கின்றனர்.
ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜான் ஆபிரகாம் உதவியுடன் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் ஷர்வாரி வாக்..
இறுதியில் என்ன ஆனது.? நினைத்ததை சாதித்தாரா ஷர்வாரி வாக்..? ஜான் ஆபிரகாம் எப்படி உதவினார்.? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்…
படம் முழுக்க சீரியஸான தோற்றத்தில் வருகிறார் நாயகன் ஜான் ஆபிரகாம்.. ஆனால் தமன்னாவுடன் நடிக்கும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் புன்னகை பூக்கிறார்.. அதே சமயம் ராணுவத்தில் இருக்கும்போது முறுக்கேரிய உடம்பு கட்டுக்கோப்பான உடலுடன் அசத்தலான தோற்றத்தில் வருகிறார்..
நாயகி ஷர்வாரி வாக்.. இவரது கேரக்டர் பெயர் தான் வேதா.. அதை உணர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.. தன்னுடைய சிகை அலங்காரத்தை கூட ஒரு காட்சியில் மாற்றி போராடும் காட்சியில் கண் கலங்க வைக்கிறார்.. ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார் நாயகி ஷர்வாரி வாக்..
வில்லன்களாக அபிஷேக் பானர்ஜி & ஆஷிஷ் வித்யார்த்தி இருவரும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப மிரட்டி இருக்கின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
அசிம் அரோரா எழுத்தில் இயக்கியிருக்கிறார் நிகில் அத்வானி.. வட இந்தியாவில் நிலவும் சாதி கொடுமைகளை ஒவ்வொரு காட்சியிலும் திரைக்கதையாக வடிவமைத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.. சாதிக்க வேண்டும் என ஒருவர் நினைத்தால் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சாதிக்க முடியும்.. அதற்கு சாதி எப்போதும் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்..
அதேசமயம் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஓர் ஆண் துணையாக இருப்பான்.. அவன் ரத்த உறவு முறையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆசானாக இருக்கலாம் நண்பனாக இருக்கலாம் எனவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
ஆக இந்த வேதா… சாதி இல்லாத வேதம்