கதை…
நாயகன் விஜய் சத்யா.. தன் மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.. ஒருநாள் ஷாப்பிங் சென்று விட்டு இவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு அமைச்சரின் மகன் இவரிடம் பிரச்சனை செய்கிறார்..
மனைவி மகளைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்தும் சென்று விடுகிறார்.. ஆனால் மந்திரி மகன் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது..
இதனை எடுத்து போலீசின் கவனம் இவர் பக்கம் திரும்பி விடுகிறது…
அதன் பிறகு என்ன நடந்தது? அமைச்சரிடம் இருந்து தப்பித்தாரா.? போலீஸிடம் இருந்து தப்பித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர் – நடிகையர் :
பாட்டு ஃபைட் என இரண்டிலும் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் சத்யா.. கிளைமாக்ஸ் சீனில் சட்டையை கழட்டி விட்டு அவர் மோதும் சண்டை காட்சி வேற லெவல் ரகம்.. ஸ்மார்ட்டான இவருக்கு இனி நிறைய வாய்ப்புகள் வரும் என உறுதியாக சொல்லலாம்..
இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல்.
வனிதா கேரக்டர் முற்றிலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.. ஓரிரு காட்சிகள் மட்டுமே வந்து செல்கிறார்.
அமைச்சராக இயக்குனர் வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.. அரசியல்வாதியை கண்முன் கொண்டு வருகிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நாயகியாக ஷெரின் நடித்திருக்கிறார்.. எத்தனை வருடங்கள் ஆனால் அதை அழகான முகம்.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக சம்யுக்தா.. கவர்ச்சி இல்லாமல் கலக்கி இருக்கிறார்.
இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் உண்டு.. அதுபோல வெங்கடேஷ் மகன் மற்றும் அவரது நண்பர்களும் கவனிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
டான்ஸ் இருக்கு ஆக்சன் இருக்கு என அம்ரீஷ் இசையமைத்து ஆடி பாடிய நடனம் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையிலும் இசையமைப்பாளர் அம்ரீஷ் அசத்தியிருக்கிறார்.
மனோ நாராயணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தி.. முக்கியமாக அடர்ந்த காட்டில் நடக்கும் சண்டை காட்சி அசத்தல்.
ஏய் சாக்லேட் உள்ளிட்ட அதிரடி ஆக்க்ஷன் படங்களை இயக்கிய வெங்கடேஷ் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் சத்யாவுக்கு ஏற்ற கதையை கொடுத்து அவரை ஆக்ஷன் ஹீரோவாக இருக்கிறார்.
குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் ரொமான்ஸ் திரில்லர் என அனைத்தையும் கொடுத்து திரைக்கதையை விறுவிறுப்புடன் அமைத்து இருப்பது தில் ராஜாவை ரசிக்க வைக்கிறது.
ஆக தில் ராஜா… செம தில்லு