செல்ல குட்டி திரைப்பட விமர்சனம் – ரசிக்கும் குட்டி

கதை…

நாயகர்கள் டிட்டோ & மகேஷ் மற்றும் நாயகி தீபிக்‌ஷா ஒரே வகுப்பில் +2 படிக்கிறார்கள்..

மகேஷ் பெற்றோர் இல்லாதவர் என்பதால் அவர் மீது நாயகி தீபிக்‌ஷா இரக்கம் காட்டுகிறார்.. இது காதல் என நினைக்கும் மகேஷ் அவரிடம் காதலை சொல்ல தீபிக்‌ஷா மறுக்கிறார்.

என் படிப்புக்கு தொந்தரவு செய்யாதே என நாயகி சொன்னதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் மகேஷ்.. இதனால் பிளஸ் டூ வில் தோல்வி அடைகிறார்.

ஆனால் மற்றவர்களை நன்றாக படித்து கல்லூரிக்கு செல்கின்றனர்.. அங்கு டிட்டோவை காதலிக்கிறார் தீபிக்ஷா.. ஆனால் நான் உன்னிடம் அப்படி பழகவில்லை.. என் நண்பனின் காதலி நீ.. எனவே உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுக்கிறார்.

அதன் பிறகு நாயகி என்ன செய்தார்? யாரின் காதலை ஏற்றுக் கொண்டார் என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்…

நாயகி தீபிக்ஷா செந்தாமரை என்ற கேரக்டரில் கனமான பாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார்.. பள்ளிப் பருவம் கல்லூரி பருவம் திருமணம் கர்ப்பிணி என அனைத்தையும் அழகாக தன் நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மகேஷ் மற்றும் டிட்டோ இருவரும் பள்ளி பருவம் முதல் கல்லூரி அதன் பின்னர் எதார்த்த வாழ்க்கை என வேறுபட்ட தோற்றங்களில் வந்து அசத்தியிருக்கின்றனர்..

அண்ணன் கேரக்டரில் நடித்த தயாரிப்பாளரும் நல்லதொரு கம்பீரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

மதுமிதா மற்றும் சாம்ஸ் இருவரும் கொஞ்சம் கலகலப்புக்கு உதவி இருக்கின்றனர்..

இவர்களுடன் திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பதா உள்ளிட்டோரும் உள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையில் சிற்பி ரசிக்க வைக்கிறார்.. டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள் ஓகே.

பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஆகியோரது ஒளிப்பதிவு காட்சிகளை ரசிக்க வைக்கிறது..

‘சிந்துநதி பூ’ செந்தமிழனின் வசனம் கவனிக்க வைக்கிறது..

ஆனால் அரசு பள்ளியில் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதெல்லாம் நம்பும் படியாக இல்லை.. அது மட்டும் இல்லாமல் 90களில் இருக்கும் போது மின் கட்டணம் எல்லாம் இவ்வளவு இருந்ததா ?

இயக்குநர் சகாயநாதன்… கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க நிறைய ட்விஸ்ட்களை வைத்திருக்கிறார் இயக்குனர்.. அவை கண்ணீரை வரவழைக்கும் காட்சிகளாக இருப்பது சிறப்பு.. சாதாரணமான முக்கோண காதல் கதையை வித்தியாசமான கிளைமாக்ஸ் இல் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் சகாயநாதன்.

ஆக இந்த செல்லக்குட்டி.. ரசிக்கும் குட்டி

Related posts

Leave a Comment