ல்தகா சைஆ (காதல் ஆசை) விமர்சனம்.. கனவு உலகம்

கதை…

ஈரோடு கோவையைச் சேர்ந்த நிஜமான காதல் தம்பதியர் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ல்தகா சைஆ.

நாயகன் சதா நாடார் நாயகி மோனிகா இருவரும் புதுமண காதல் தம்பதிகள்.. நாயகன் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்..

இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது.. கனவில் இவரே மனைவியை கொல்வது போலவும்.. வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது போலவும் இப்படியாக பல கனவுகள் வருகிறது..

ஒரு நாள் காணும் கனவு அடுத்த நாள் நிஜத்தில் நடக்கிறது..

தன் மனைவியை தானே கொன்று விடுவோமோ தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுமோ என்றெல்லாம் குழம்பித் தவிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் கணவர் கனவில் நடப்பதை தடுக்க இவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்..

நடிகர்கள்…

சதா நாடார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.. இவர் தன் பெயருக்கு பின்னால் தன் சாதி பெயர் இடம் பெறுவதை மிகப்பெரிய கௌரவமாக நினைத்து ஒட்டி வைத்துக் கொண்டு உள்ளார்..

இவரும் மனைவியே மோனிகா இந்த படத்தில் காதல் ஜோடிகளாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மாறி இருப்பதால் படத்தின் 80% காட்சியை இவர்களுக்கு மட்டுமே வைத்துவிட்டார்.. இவர்களை தவிர படத்தில் ஓரிரு கேரக்டர்கள் மட்டுமே வலம் வருகிறார்கள்..

படத்தின் கிளைமாக்ஸ் எப்போது வரும் என்ற மனநிலையை நமக்கு ஏற்படுகிறது.. அதற்கு ஏற்றவாறு இவரது மாமனும் ஒரு டயலாக் பேசுகிறார்.. அட இருமா அவன் கிளைமாக்ஸ் காட்சிக்கு வரட்டும் என்கிறார்..

நிஜமான கணவன் மனைவி என்பதால் காதல் காட்சிகள் ஹாட்டான நெருக்கம் காட்டி இருக்கின்றனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பங்களாவையே சுற்றி 80% படப்பிடிப்பை முடித்து இருக்கிறார்கள்.. பின்னணி இசை சில இடங்கள் ரசிக்க வைக்கிறது.. பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் ஓகே ரகம்.

படத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்கிறது… எது கனவு காட்சி? எது நிஜமான காட்சி? என்கிற குழப்ப மனநிலையிலேயே பாதி படத்தை கடந்து விடுகிறோம்.. அட்லீஸ்ட் கலர் மாற்றி காட்சி வைத்து இருக்கலாம்… கனவுக்குள் கனவு என்பதைப் போல படத்தின் கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்புமுனையை வைத்திருக்கிறார் இயக்குனர்கள்..

இந்தப் படத்திற்கும் கதைக்கும் இவர்கள் வைத்திருக்கும் தலைப்பிற்கும் என்ன பொருத்தம் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

அதுவும் இந்த காதல் ஆசை என்ற தலைப்பை தலைகீழ் ஆக மாற்றி வைத்தது ஏனோ என்பது புரியவில்லை..??

Related posts

Leave a Comment