வங்கியில் சேமிப்பது நல்லது என்ற கருத்தை உடைத்து நொறுக்கி இருக்கும் படம். நம் பணத்தை நcமக்கே தெரியாமல் வங்கி ஊழியர்களே எடுத்தாண்டு இருக்கும் காட்சிகள் அடி வயிறு வரை நம்மை கலங்க வைக்கின்றன.
நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அங்கு தன் தேவைக்காக ரூ. 4 லட்சத்தை மோசடியாக எடுக்கிறார். அதே ரூட்டில் வங்கியில் 5 கோடி பணம் எடுக்கப்படுகிறது. அதை எடுத்தது யார்? அதன் மூலம் நாயகனுக்கு நேர்ந்த பாதிப்பு என்ன? கேள்விக்கான விடை பரபர கிளைமாக்ஸ்.
அவசர தேவைக்கு ஒரு தப்பை செய்துவிட்டு அதனால் ஏற்படும் இன் னல்களால் பாதிக்கப்படும் காட்சிகளில் சத்யதேவ் நடிப்பில் அனுபவம் பூத்துக் குலுங்குகிறது. நாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் கொஞ்சம் காதல் நிறைய பயம் என்று காட்சிகளில் நிரம்பி நிற்கிறார்.
நாயகனை சிக்கலில் மாட்டி விடும் டாலி தனஞ்செயா வந்த பிறகு கதையே புது வடிவத்துக்கு மாறி விடுகிறது. ஸ்டைலாக அவர் செய்யும் வில்ல த்தனங்கள் ஒவ்வொன்றும் அப்ளாஸ் ரகம்.
குறைவான நேரமே வந்தாலும் பாபா என்ற அந்த கேரக்டரில் சத்யராஜ் கலகலப்புக்கு உத்தரவாதம்.ரவி பஸ் ரூரின் இசையில் பாடல்கள் ரசனை. அது மாதிரி சத்யா பொன்மர்ஒளிப்பதிவும் உயர்தரம்.
ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கிறார்.வங்கிகளில் எந்த மாதிரி எல்லாம் மோசடி நடக்கிறது என்பதை அவர் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் நிஜமாகவே திகில் ஊட்டுகிறது. கிளைமாக்சில் வங்கி ஊழியர்களே நடத்தும் அந்த கொள்ளை நகைச்சுவையின் உச்சம்.
மொத்தத்தில் ஜீப்ரா பயமுறுத்தும் கோப்ரா.