தினசரி – திரை விமர்சனம்

ஐடி துறையில் கை நிறைய சம்பாதிக்கும் ஸ்ரீகாந்த்துக்கு தன் வருங்கால மனைவி தன்னைவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் அவருக்கு அமைந்த மனைவியோ திருமணத்துக்கு பின் வேலைக்கு போவதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார். பெண் பார்க்க போகும் ஸ்ரீகாந்தின் அம்மா மணப்பெண்ணின் இந்த கண்டிஷனை மகனிடம் மறைத்து விட…

திருமணம் நடக்கிறது. அதன் பிறகு ஸ்ரீகாந்த் உண்மை தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை உள்வாங்கி கொள்ளும் ஸ்ரீகாந்த் தனியார் எதிர்நிறுவனத்தில் கடன் வாங்கி அதிக முதலீடுகளை செய்கிறார். இப்படி ஒரு கோடி வரை அவர் பணம் கட்டிய நிலையில்தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்து விட…

இதனால் ஒரு கட்டத்தில் பெற்றோருக்கே அன்னியமாகி போகிறார் ஸ்ரீகாந்த். கடலில் இருந்து மேய்டாரா கடலில் இருந்து மேட்டரா அவரை ஒதுக்கி வைத்த குடும்பம் மீண்டும் அவரை அரவணைத்துக் கொண்டதா இதுல அவ்வளவு மனைவியின் பங்கு என்ன என்பது கதைக் களம். பணம் மட்டுமே வாழ்க்கையின் பிரதானம் என்று அதன் பின்னாக ஓடிக்கொண்டிருக்கும் கேரக்டருக்கு தனது நடிப்பில் நியாயம் செய்திருக்கிறார் சரித்திரம் ஸ்ரீகாந்த். தமிழ் சினிமாவில் ரொம்ப நாள் தலை காட்டாமல் இருந்த ஸ்ரீகாந்த் க்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் அமைந்த நல்ல கேரக்டர் இது. இதை சரியாக பற்றிப் பிடித்துக் கொண்டு கேரக்டரோடு வாழ்ந்திருக்கிறார். பணத்தின் பின்னால் ஓடும் இடங்களிலும் சரி, வேலைக்கு போகாத மனைவியின் மீது எரிச்சலை கட்டும் இடங்களிலும் சரி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிலையில் வீட்டில் கூட சொல்ல முடியாத அந்த வேதனையும் மனதில் உள்ள வாங்கிக் கொள்ள வேண்டும் சரி கொள்ளும் இடங்களில் சரி மனிதர் நடிப்பில் பிரித்து மேய்ந்து இருக்கிறார். தான் தனிமைப்பட்டதை உணர்ந்து கதறும் இடத்தில் நடிப்பில் இன்னும் ஒரு படி மேலோங்கி இருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் சிந்தியா லூர்தே வெளிநாட்டில் வாழும் தமிழ் பெண் பெண்ணுக்கான அத்தனை அம்சங்களுடனும் இருக்கிறார். அதனால் அதனால் அந்த கேரக்டர் அவருக்கு எளிதாக பொருந்திப் போகிறது.

ஸ்ரீகாந்தின் பெற்றோராக எம் எஸ் பாஸ்கர் மீரா கிருஷ்ணன் அக்குவாக வினோதினி அப்புறம் நடுத்தர குடும்பத்தை நகலெடுத்த மாதிரி அத்தனை எதார்த்த நடிப்பில் கவர்கிறார்கள். குறிப்பாக மகள் வினோதையுடன் வினோதியிடம் பெற்றோர் தங்கள் காதல் கதையை சொல்லும் இடம் கவிதை. அந்த காட்சியில் எம் எஸ் பாஸ்கரன் பாஸ்கரன் மீரா கிருஷ்ணனும் ரசிகர்களை கலங்க வைத்து கூடவே பரவசமாக்கும் பணியையும் செய்து விடுகிறார்கள். நாயகனே நண்பனாக பிரேம்ஜி, கல்யாண புரோக்கராக சாம்ஸ், நடிப்பில் களை கட்டுகிறார்கள். கொஞ்ச நேரமே என்றாலும் தனது இருப்பை நடிப்பில் நிரூபித்து விட்டு போகிறார் சாந்தினி.

படத்துக்கு அமைந்த பெரிய பிளஸ் இளையராஜாவின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் கதையை நமக்குள் சுலபத்தில் கடத்தி விடுகின்றன. ஓரிரு காட்சி என்றாலும் அந்த மோசடி மன்னன் கேரக்டரில் ராதாரவி ஆஹா.
எழுதி இயக்கி இருக்கிறார் ஜி சங்கர். தங்கள் உலகம் பண உலகம் என்று தவறாக புரிந்து கொள்ளும் இன்றைய இளைய சமுதாயத்துக்கு இந்த கதை மூலம் தலையில் ணங் என்று குட்டு வைத்து இருக்கிறார் இயக்குனர். இளைய தலைமுறையினருக்கு இது பாடம். ரசிக மகாஜனங்களுக்கு இது நல்லதோர் படம்.

Related posts

Leave a Comment