பேபிஅண்ட் பேபி – திரை விமர்சனம்

இடம் மாறிய குழந்தைகளால் நிகழும் பரபரப்பு பயணமே கதை. அதை கலகலப்பில் தோய்த்து படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்திலிருந்து கோவை செல்வதற்காக கிளம்பும் சிவாவும் மதுரை செல்வதற்கு தயாராகும் குணாவும் தங்களது மனைவி குழந்தைகளுடன் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் இந்த இருவர் குழந்தையும் இடம் மாறி விடுகிறது.
விமானத்தில் ஏறிய பிறகு தான் சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும் குணாவின் பெண் குழந்தை சிவாவிடமும் இருப்பது தெரிய வர…

ஊரிலோ சிவாவின் தந்தை சத்யராஜோ தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசை எதிர்பார்த்து காத்து இருப்பவர். காதல் திருமணம் செய்து வீட்டை விட்டுப் போன சிவாவுக்கு ஆண் குழந்தை பிறந்த தக ல் தெரிந்த பிறகே மகனுக்கு அழைப்பு விடுக்கிறார்.

குணாவின் தந்தை இளவரசின் நிலைப்பாடோ இன்னொரு ரகம். ஜோதிடத்தில் தீவிரம் காட்டும் அவர் ஜாதக அடிப்படையில் மகனுக்கு பிறந்த பெண் வாரிசை வரவேற்க காத்திருக்கிறார்.

இந்நிலையில் குழந்தைகள் மாறிப்போன இரு ஜோடியும் தங்கள் தங்கள் ஊருக்கு வந்த பிறகும் குழந்தைகளை மாற்றிக் கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. தடைகளை தாண்டி இந்த இரு ஜோடிகளும் மாறிப் போன தங்கள் குழந்தைகளை மீண்டும் தங்களுடைய தாக்கிக் கொண்டார்களா என்பதை கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

சிவாவாக ஜெய், குணாவாக யோகி பாபு இருவருமே இடம் மாறிய தங்கள் குழந்தையை மீட்கும் அவசரத்தையும் பதட் டத்தையும் துல்லியமாக நமக்குள் கடத்தி விடுகிறார்கள்.
இவர்களின் ஜோடிகளாக வரும் ப்ரக்யா நாக்ரா , சாய் தன்யா பிள்ளைப் பாசத்தில் தவிக்கும் இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.

ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் வரும் இடங்கள் சிரிப்புக்கு உத்தரவாதம்.

இமானின் இசையில் பாடல்கள் ரசனை. பிரதாப் இயக்கியிருக்கிறார். மிகப்பெரிய காமெடி பட்டாளத்துடன் ஒரு சீரியஸ் கதையை சிரிக்க சிரிக்க சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

Related posts

Leave a Comment