மகா அவதார் – நரசிம்மர் திரை விமர்சனம்

புராணத்தில் விஷ்ணு பக்தனான பக்த பிரகலாதன் கதை அனைவரும் அறிந்ததே.இது பல்வேறு கலை வடிவங்களில் மக்களிடம் புகழ்பெற்றது. கிராமங்களில் கூட பக்த பிரகலாதன் நாடகம் கோவில் திருவிழாக்களில் இடம் பிடிக்கும். .விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அனிமேஷன் படமே இந்த ‘மகா அவதார் நரசிம்மர்’

அசுரர் குலத்தை சேர்ந்த காசிபர் மற்றும் திதியின் மகன் இரணியன். அவன் இரணியாட்சனின் சகோதரன்.
இரணியன், பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்தபோது அவனுக்கு பிரம்மா காட்சி தந்தார். அப்போது அவன் பிரம்மாவிடம், எந்த ஆயுதத்தாலோ, பகலில் அல்லது இரவில், நிலத்திலோ அல்லது வானத்திலோ, மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான்.

இரணியனுக்குப் பிரகலாதன் என்ற மகன் இருந்தான். பிரகலாதன், விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தான். இதைக் கண்டு இரணியன் மிகவும் கோபமடைந்தான்.
இரணியன், பிரகலாதனை கொல்ல பல்வேறு முறைகளில் முயன்றும், விஷ்ணுவின் அருளால் பிரகலாதன் காப்பாற்றப்பட்டான்.

இறுதியில், அதனை அழைத்து உன் விஷ்ணு இந்த அரண்மனை தூணில் கூட இருக்கிறானா? என்று கேட்டு தூணை உடைக்க, தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்ம வடிவத்தில் இருந்த விஷ்ணுவால் கொல்லப்பட்டான். இது இரணியன் கேட்ட வரங்களுக்கு ஏற்ப அமைந்தது. நரசிம்மர், அந்தி நேரத்தில், மனித மற்றும் மிருக வடிவில், கதவில் வைத்து இரணியனைக் கொன்றார்.

இந்தக் கதை, பக்தியின் வலிமையை காட்டுகிறது. தீமை ஒருபோதும் வெல்லாது என்பதையும் விளக்குகிறது. இந்த கதையை இக்காலத்துக்கு ஏற்ற வகையில் அனிமேஷன் பிரமாண்டத்துடன் உருவாக்கியுள்ளனர். அகன்ற திரையில் வேறொரு உலகத்துக்குள் சென்று வந்த அனுபவத்தை கொடுக்கிறார் இந்த நரசிம்மர்.
ஆன்மீக பிரமாண்டம்.

Related posts

Leave a Comment