மாண்புமிகு பறை – திரை விமர்சனம்

மாண்புமிகு பறை

 

— திரை விமர்சனம்

 

பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதோடு மற்றவர்களுக்கு அந்த கலையை கற்றுக்கொடுத்தும் வருகிறார்கள்.

 

அதே சமயம், பறை இசைக் கலைஞர்களை இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வதே

‘மாண்புமிகு பறை’.

நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கேரக்டரில் வருகிறார். பேதம் பார்க்கும் மேல் தீட்டு மக்களிடமிருந்து வரும் இன்னல்களை பொருட்படுத்தாமல் அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டி இருக்கிறார். கோவில் திருவிழாவுக்கு சென்ற தனது நண்பன் மிஸ்சிங் என தெரிய வந்ததும் அவரது துடிப்பும் துயரமும் தேர்ந்த நடிகருக்கான முத்திரையை அவருக்குப் பெற்றுத் தருகின்றன.

லியோ சிவகுமாரின் நண்பராக வரும் ஆரியன், ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் முழுக்க தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். காட்டுப்பகுதியில் எதிரிகளிடம் சிக்கி இவர் உயிருக்கு போராடும் இடங்களில் அந்த மரண பய நடிப்பு இவரை கவனிக்க வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, லியோவுடனான காதல் காட்சிகளில் கண்கள் வழியே ஒரு அழகான காதலை இறக்குமதி செய்கிறார். கிளைமாக்ஸ்சில் வெறித்தனமாக பறையடித்து இவர் ஆடும் ஆட்டம் இரண்டாம் பாகத்துக்கான தொடக்கமோ என்று கூட எண்ண வைக்கிறது.

கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் என நட்சத்திர பட்டியல் அதிகம்.

தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசனைக் களஞ்சியம்.

ஒளிப்பதிவாளர் ஆர்.கொளஞ்சி குமாரின் கேமரா கிராமங்களை அழகுற வலம் வந்திருக்கிறது

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.விஜய் சுகுமார், இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது ஆணவக் கொலைக்கு முக்கிய இடம் அளிப்பதா,? என்ற தடுமாற்றத்தில்

இரண்டையும் குழப்பி போட்டு ஒரு வழியாக படத்தை முடித்து இருக்கிறார். சாதிவெறி

இம்மாதிரி கலைஞர்களை அழித்துக் கொண்டே இருந்தால் அந்தக் கலையின் அடுத்த கட்ட நிலை என்ன என்பதை விவரிக்கும் கிளைமாக்ஸ் படத்தை கரை சேர்த்து விடுகிறது.

Related posts

Leave a Comment