சிறை – திரைப்பட விமர்சனம்

கொலைக் குற்றவாளியாக கருதப்படும் இளைஞன் அப்துல் ரவூப் ஐந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாகவே இருக்கிறார். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது வழக்கம்போல வாய்தா போட்டு விடுவார்கள்.
இப்படி 5 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் தொடர் வாய்தாக்கள் அவரை விசாரணைக் கைதியாகவே வைத்திருக்கிறது.
இந்த அப்துலுக்கும் கனவுகள் உண்டு. கண்ணான ஒரு காதலி உண்டு. ஒரு இரவில் தன் தாயை தாக்க வந்தவரை அப்துல் ஆவேசமாய் தள்ளிவிட, அவர் தலை கல்லில் நொறுங்கி உயிர் போய் விட…
இந்த மோதலில் அப்துல் தாயும் மரணிக்க , இனி அவனுக்கென்று இருப்பது காதல் நிறைந்த உயிர்க் காதலி தான்.
காதலியின் தந்தை தான் இங்கே கொலை செய்யப்பட்டவர். கொலையாளி இந்த அப்துல் ரவூப்.
வழக்கம்போல விசாரணை
கைதிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்தும் பணி அன்று தலைமை காவலர் பொறுப்பில் உள்ள கதிரவன் தலைமையில் உள்ள போலீசாருக்கு தரப்படுகிறது. வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு ஒரு பேருந்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்கிறது, இந்த போலீஸ் குழு.
பேருந்து ஓரிடத்தில் நிற்கும்போது இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கைதி அப்துல் கேட்டுக்கொள்ள, போலீசும் மனிதாபிமானத்துடன் அனுமதிக்கிறார்கள்.
இந்த இடைவெளிக்குள் வெட்ட வெளியில் சிறுநீர் கழிக்கச் சென்ற ஒரு காவலருக்கும் அருகில் நின்ற உள்ளூர் வாசிகளுக்கும் வாய்ப்பேச்சு மோதலாக முற்ற, உள்ளூர் வாசிகள் காவலரை தாக்குகிறார்கள். இதை அறிந்த காவலர் குழு பதறி அங்கே ஓடி வந்து அவரை மீட்கிறது.
இந்த ரகளை முடிந்து திரும்பி வந்து பார்த்தால் அதற்குள் அந்தப் பேருந்து புறப்பட்டுப் போய் விடுகிறது . இன்னொரு பஸ்ஸில் துரத்திப் பிடித்து அந்த பஸ்ஸை நிறுத்திப் பார்த்தால் அந்த பேருந்தில் கைதி இல்லை. பாதுகாப்பு கருதி போலீஸ் கொண்டு வந்திருந்த துப்பாக்கியையும் கைதி அப்துல் எடுத்துப் போயிருந்தான்.

இந்த இக்கட்டான நெருக்கடி சூழலில் தலைமைக் காவலர் கதிரவன் மற்றும் அவரது குழுவினர் பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறார் கள்? தப்பிச்சென்ற அப்துல் போலீஸிடம் சிக்கினானா… அவனையே நம்பி இருந்த பெண்ணின் காதல் என்னவாயிற்று என்பது பரபர திரைக்களம்.
கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் ஐந்து வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்‌ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செ
நாயகனாக தலைமை காவலராக வரும் விக்ரம் பிரபு இதற்கு முன்பு காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இதில் முழுக்க முழுக்க கனிவு கலந்த காக்கி சடடையில் புதிய விக்ரம் பிரவை பார்க்க முடிகிறது.
தப்பித்து செல்லும் கைதியை பிடிக்கும் முயற்சி மற்றும் அதை தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சனையில் தடுமாறுவது, நீதிமன்றத்தில் கைதிக்காக பரிந்து பேசுவது என படம் முழுவதும் காக்கி சட்டைக்குள் இருக்கும் கனிவு முகத்தை திரையில் தெறிக்க விட்டு இருக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் எல்.கே.அக்‌ஷய் குமாரை அறிமுக நடிகராக எங்குமே உணர முடியவில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியான ஒரு நடிகராக வெளிப் பட்டிருக்கிறார்.
அந்த கைதி கேரக்டரில் அச்சாக பொருந்துகிறார்l. ஒரு ஐந்து வருட காலம் விசாரணை கைதியாகவே மனப் போராட்டத்தில் வாழும் கைதியை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார். அவரது அந்தஅழகான காதல் கோர்ட் வாசலில் காதலியை தேடும் தவிப்பில் வெளிப்படுகிறது. பள்ளிப் பருவம், இளம் பருவம் மற்றும் சிறைக் கைதி என தனது தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் உரிய மாற்றங்களை கொண்டு வந்து விடுகிறார்.
இரண்டாம் பாதி படம் முழுவதையும் தன்
யதார்த்தமான நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார். தனது விடுதலை கனவு சிதைந்து போனது தெரியவந்ததும் கோர்ட் வாசலில் அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் இடங்கள் கண்களில் கண்ணீர்ப் பிரவாகம்.
அவரின் உயிர்க் காதலியாக
நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், தோற்றத்திலும் கேரக்டராகவே மாறிப்போன நடிப்பிலும் தேர்ந்த நடிகராக தன்னை நிரூபித்து விடுகிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் ஆனந்த தம்பிராஜாவின் திரை பங்களிப்பு கொஞ்சமாக இருந்தாலும் மனிதநேயமிக்க அந்த கேரக்டரில் பெயரை தட்டிச் சென்று விடுகிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மூணாறு ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துக்குள் இருக்கும் கச்சிதமான அரசியலை பேசி விடுகிறது.
மனிதநேயமிக்க நீதிபதியாக வரும் தேனப்பன் கேரக்டருக்கு அரங்கு அதிர கரகோஷம்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை இன்னொரு கதாபாத்திரமாக படம் முழுக்க வலம் வருகிறது.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை ய தார்த்தமாக கண் முன் நிறுத்துகிறது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் எழுதிய கதைக்கு உயிர் கொடுத்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி. காக்கிச்சட்டையின் விரைப்பும் முறைப்போம் ஒரு உண்மைக் காதலுக்குள் ஒடுங்கி மடங்கி
போகும் காட்சிகள் அனைத்தும் கதையை நம்மோடு முழுக்கவே இணைத்துக் கொள்கிறது. அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
மொத்தத்தில், இந்த ‘சிறை’ அன்பால் ரசிகர்களை சிறைப் பிடித்து விடுகிறது.

Related posts

Leave a Comment